சந்ததியர் நலவாழ்க்கை
உலகில் உயிருள்ள பொருள்கள் அனைத்தும் தனது ஜீன்களை பரப்புவதில் கவனமாக இருக்கின்றது. செடிகள் விதைகளை உற்பத்தி செய்து தனது இனத்தைப் பரப்புகின்றன. மிருகங்கள், பறவைகள் குட்டி ஈன்று தனது இனத்தைப் பரப்புகின்றது. அதேபோல் நாம் நமது குழந்தைகள் மூலம் நமது வாரிசுகள் சிறப்புற வாழ்வதற்கான வழிமுறைகளை உருவாக்குகிறோம். அவர்களுக்காக கல்வி அளிக்கிறோம். செல்வங்கள் சேர்க்கிறோம். நமது வாரிசுகள் நமது மரபு அணுக்களாக இருப்பதால் ஒருவித பாசத்துடன் இருக்கிறோம். உலகளவில் இயற்கை வளங்கள் பெரும் அளவில் சுரண்டப்படுவதும் அதனால் அத்தகைய இயற்கை வளங்கள் நமது வாரிசுகளுக்கு கிடைக்காமல் இருக்கப் போவதும் ஒரு வேதனைக்குரிய விசயமாகும்.
நாம் நமது வாரிசுகளை கல்வி கற்க வைக்கிறோம். பொருளாதார உயர்வுக்காக பல திட்டங்கள் இடுகிறோம். ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விட்டோம். அவர்களுக்கு ஆன்மா என்று ஓன்று இருப்பதை மறந்து விட்டோம். நமது வாரிசுகள் உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இருப்பிடம், மற்றும் பொருளாதாரங்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறோம். ஆனால் ஆன்மா என்ற ஒன்றை கொடுக்க மறந்து விட்டோம். ஒரு குழந்தை பிறக்கும் பொழுதே தாய், தகப்பனுடைய ஜீன்களைப் பெற்று உருவாகிறது. அந்த ஜீன்களின் செயல்பாட்டை வைத்து அந்த நபரின் உயரம், எடை, அறிவுக்கூர்மை, கண்ணின் நிறம், தோலின் நிறம், எவ்வளவு காலம் வாழமுடியும் ஆகியவைகள் நியர்நிக்கப்படுகிறது. இவைகள் அனைத்தும் ஏழு தலைமுறைகளுக்குரிய பாரம்பரிய மரபு அணுக்களுடன் மனிதன் பிறக்கிறான். நாம் நமது வாரிசுகள் சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் நாம் நமது குணநலன்களை சீர்செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். மரபியல் காரணமாக புற்றுநோய், நீரிழிவு நோய், இதயநோய், இதய அழுத்தம், ஆஸ்துமா, பிளந்த உதடுகள், குடல் அலர்ச்சி நோய், மனநிலைப் பாதிப்பு, மனநிலை கோளாறு, குண்டாகவும், ஒல்லியாகவும் இருத்தல், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை போன்றவைகள் உருவாகின்றன. ஒருவர் பிறக்கும் பொழுது தாய், தகப்பனின் நன்மை, தீமைகளைப் பெற்று பிறக்கிறான். இதுதான் கிரியையாகிய பிறப்பின் ரகசியம். அவன் நற்செயல்கள் செய்து பிறவியின் பலனை இச்சை சக்தியால் நன்மை, தீமைகளைப் மாற்றமுடியும்.
ஆகவே நாம் நமக்கு நல்ல வளமான வாரிசுகள் தேவை என்றால் நாம் நன்மை நல்வழியில் மாற்றிக் கொள்ளவேண்டும். அவர்களை நல்வழிப்படுத்தி நல்ல வாழ்வு நெறியுடன் வாழ வைப்பது நமது கடமையாகும். சுற்றுப்புற சூழ்நிலைகள், சீதோஷ்ணங்கள், நமது வாழ்கையின் நெறி முறைகள், தண்ணீர், காற்று, நிலம் ஆகியவைகள் நமது மரபு அணுக்களை மாற்றும் குணம் உடையவைகள். நாமும் தியானத்தின் மூலமாகவும், உறுதியான நம்பிக்கையின் மூலமாகவும் இத்தகைய மரபு அணுக்களை மாற்றமுடியும். நமது வாரிசுகளுக்கு நல்ல கல்வி கொடுத்து வளமாக்கலாம். அதேபோல் நமது வாரிசுகளுக்கு நற்போதனைகள் போதித்து நல்லவர்களாக உருவாக்கமுடியும். நமது வாரிசுகளுக்கு அன்பு உணர்வை ஏற்படுத்தி வளர்ப்பதும் நட்புணர்வை வளரச் செய்வதும் நமது கடமையாகும். நாம் அவர்களுக்கு அன்பு என்ற மூன்றெழுத்தை கற்றுக் கொடுத்தால் அவனே ஒரு உண்மையான அறிவாளி ஆவான். அன்பு அவனில் ஏற்பட்டு விட்டால் அவன் ஒரு நிச்சயமான நலமான வாழ்க்கையைப் பெறுவான். இதன் மூலம் உங்கள் வாரிசுகளை பொருளாதாரத்திலும், அருளாதாரத்திலும் சிறந்தவர்களாக ஆக்கமுடியும்.
PANJAKARPAM
பதிலளிநீக்குதியானம் என்பது மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி புருவமத்தி அல்லது நாசிநுனியில் நாட்டம் வைத்து அதில் லயித்திருப்பதாகும்.
தலை முழுகும் விதி
கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, கடுக்காய் தோல், நெல்லி முள்ளி, வேப்பம் பருப்பு வகைக்கு 1/4 பலம் ஆகியனவற்றை நிறுத்தெடுத்து முதல்நாள் இரவில் பசும்பாலில் ஊறப் போட்டு, மறுநாள் காலையில் பசும்பால் விட்டரைத்து சுமார் 1/4 படி பாலிற்கலக்கிக் கொதிக்க வைத்து சேறு பதத்தில் இறக்கி வைத்து சரீரமெங்கும் தேய்த்து 2 மணி நேரம் ஆன பின்பு தண்ணீர் கலக்காத இளவெந்நீரில் தலை முழுக வேண்டும். இதனால் கரப்பான்புண், அக்கினி மந்தம், மலபந்தம், கால்புற்று, காமாலை விஷங்கள், சோனித வாதம், உட்சூடு, சிரங்கு, கரப்பான், சுரம், சன்னி இவைகள் நீங்கும்.