JavaScript


உடல் பருமனும், மூலிகைகளும்


     உடல் பருமன் என்பது ஒருவர் உயரத்திற்கும், அவருடைய எடைக்கும் உள்ள விகிதாச்சாரமாகும். அதை BMI என்ற கணக்கீட்டில் கணக்கிடுவர். அதாவது அதை Body Mass Index என்பர். பொதுவாக சதை, எலும்பு, உடலில் உள்ள நீர்ச்சத்து ஆகியவற்றால் எடை கூடுவது தவறு அல்ல. உடலில் கொழுப்புச்சத்து மிகுந்து வயிற்றின் சுற்றளவு கூடி அதிக எடை வைப்பதை உடல் பருமன் என்று கூறலாம்.
பொதுவாக உடல் பருமனுக்கான காரணங்கள்
        பாரம்பரியம், உடல் உபயோகப்படுத்தும் தேவைக்கு மிஞ்சிய உணவு, அதிகம் மது அருந்துதல், உடலுக்குத் தேவையான அளவு உடற்பயிற்சியோ அல்லது உடல் உழைப்பின்மை ஆகியவை ஆகும். சில நேரங்களில் தைராயிடு சார்ந்த நோய்களாலும், மனநிலைப் பாதிப்புக்கு கொடுக்கப்படும் சில மருந்துகளாலும், பெண்களுக்கு தாய்மைத் தன்மை நிற்கும் காலங்களிலும் உடல் பருமன் உண்டாகிறது.
     உடல் பருமனால் வாதம், முட்டுவாதம், சர்க்கரைநோய், இருதய நோய், அதிக இரத்த அழுத்தம், சிலவகைப் புற்று நோய்கள் உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடல் பருமனைக் குறைக்க மூன்று விதமான மருந்துகள் உள்ளன. 1) உணவு, 2) உடற்பயிற்சி, மற்றும் மருந்துகள். உணவு என்ற பொழுது அதிகக் கொழுப்புச் சத்து, சக்கரைச் சத்து கூடிய உணவுகளைக் குறைக்கவேண்டும். அதற்குப் பதில் விட்டமீன்கள், தாதுப் பொருள்கள், நார் சத்துகள் நிறைந்த உணவுகளைக் உட்கொள்ளலாம். அரிசி, முட்டை, இறைச்சி, இனிப்புப் பொருள்கள், வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்கலாம். அதற்குப் பதிலாக பழங்கள், கீரைகள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். இரண்டாவதாக உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி மிக அவசியமானதாகும். உடலில் உள்ள உணவினால் உண்டாகும் அதிக கலோரி சத்துக்களை உடற்பயிற்சியின் மூலம் குறைக்கவேண்டும். மூன்றாவதாக கூறப்பட்டிருப்பது மருத்துவமாகும்.
           உடல் பருமனுக்கு என்று சில வகை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. இது பலருக்கு இயற்புடையதல்ல.  இருப்பினும் இந்த அறுவை சிகிச்சை சில விளைவுகளுக்கு உட்பட்டதாகி விடுகிறது. ஆங்கில மருத்துவத்தில் உடல் பருமனைக் குறைக்க பல மருந்துகள் வந்துள்ளன. இருப்பினும் மூலிகை மருத்துவத்தில் பல நல்ல மூலிகைகள் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கிறது.
நெல்லிக் காய்
        இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு மூலிகை. இது மரமாக வளரக் கூடியது. இது ஒரு கற்ப மூலிகையாகும். நெல்லிக்காய் ஆயுர் வேதம், சித்தா, யூனானி போன்ற மருந்துகளில் பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதை காயவைத்தும், பச்சையாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் சிறுநீரக வியாதிகள், இரத்தக் குறைவு, பலவீனம், சளி, இருமல், மஞ்சள் காமாலை, எலும்பு, இரத்தம் சார்ந்த வியாதிகளைக் குணப்படுத்துகிறது. உடல் பருமனைக் குறைப்பதில் நெல்லிக்காய் பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. முதலில் நெல்லிக்காய் சர்க்கரை சத்தை செரிக்க வைத்து உடம்பில் இரத்தத்தில் சேர்க்கும் செயல்பாட்டை நிறுத்துகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வு சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உபயோகமாக இருக்கும். HDL, LDL போன்ற கொளுப்புச்சத்துக்களை உடலில் சேர்ப்பதை தடுக்கிறது.    மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவை குறைக்க உதவுகிறது.
 சிறுகுறிஞ்சான் 
 இது பற்றி படரும் கோடி இனத்தைச் சார்ந்தது. இது உடலில் உள்ள கெட்ட நீர்களை வெளியேற்றுவதில் ஒரு சிறந்த மூலிகையாக உள்ளது. அமெரிக்கா நாட்டின் உடல் பருமனைக் குறைக்கும் டீ மற்றும் மருந்துகளில் சிறுகுறிஞ்சான் இல்லாமல் இருப்பதில்லை. அமெரிக்காவின் இந்த மூலிகையை மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை உடல் பருமனுக்கும், சர்க்கரை நோய்க்கும் ஒரு சிறந்த மருந்து என்று உபயோகிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர். சிறுகுறிஞ்சான் மாவுச்சத்தை ஜீரணித்து இரத்தத்தில் சேர்வதைத் தடுக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் பருமன் குறைகிறது. உடல் பருமனைக் குறைக்க 200 மில்லி கிராமில் இருந்து 2 கிராம் வரை உபயோகப்படுத்தலாம். 






Dr.R.S.Purusotham, 
24th 4th Cross Street,

Santhi Nager, 
Palayamkottai-627002,
செல்: 9842425780

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக