JavaScript

ஆஸ்துமா
     ஆஸ்துமா நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய் சுருக்கத்தால் வரும் நோய் ஆகும். உலகளவில் 235 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. ஆஸ்துமா முற்றிலும் குணமாக்க முடியாவிட்டாலும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி வாழ முடியும் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.
ஆஸ்துமாவை தூண்டும் பொருள்கள் :-
பொதுவாக உடலுக்கு ஒவ்வாத பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாக மூச்சுக்குழல் வீக்கமுற்றோ அல்லது சுருக்கம் ஏற்பட்டோ இளைப்பு வருகிறது.
1)      விலங்குகளின் முடி,
2)      தூசு,
3)வானிலை மாற்றங்கள் (பெரும்பாலும் குளிர் காலம் அல்லது வியர்வையுடன் கூடிய வெயில் காலம்)
4)      மாசுப்பற்ற காற்று,
5)      மாசுப்பற்ற உணவு,
6)      உடற்பயிற்சி,
7)      மகரந்த தூள்,
8)      மன உளைச்சல்,
9)      புகை,
10)   சாதாரண ஜலதோஷம்
11)   சில ஆஸ்பிரின் போன்ற சில வலி நிவாரணிகள் ஆகும்.
ஆஸ்துமாவின் அறிகுறிகள் :-
   சளியோ அல்லது சளி இல்லாத இருமல், சுவாசிக்கும் பொழுது விலாவில் ஏற்படும் இளைப்பு, உடற்பயிற்சி அல்லது தீவிர வேலைகள் செய்யும் பொழுது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகும். பொதுவாக மூச்சுத்திணறல் இரவு நேரங்களிலும் அதிகாலையிலும், அதிகம் இருக்கும். குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் பொழுது தாக்கம் அதிகமாக இருக்கும்.
வயிற்றில் புளிப்பு ஏற்றத்தால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலின் போது அதிகமாகும். பொதுவாக ஆஸ்துமாவின் இளைப்பு அதிகமாகும் போது உதடு மற்றும் முகம் நீல நிறமாகும். உடல் சோர்வு அடையும். தீவிரமாக சுவாசிப்பது கடினமாகும். இருதயம் அதிகத் துடிப்பு உருவாகும். மூச்சுத் திணறல் காரணமாக கடுமையான பதற்றமும், வியர்வையும் ஏற்படும். இதனால் மார்புவலி, மார்பு இறுக்கம் ஏற்படும். தற்காலங்களில் நவீன மருத்துவத்தில் உள்ள மாத்திரைகள் மருந்துகள் மற்றும் பப் என்ற உறிஞ்சான் பெரிய அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. எப்படி இருப்பினும் மூலிகை மருத்துவத்தில் உள்ள மூலிகைகளைப் பார்ப்போம்.

தலையில் தேய்க்கும் தைலம்:
   தும்பைத் தைலம், பீன்ச தைலம், தலையில் ஒழுங்காக தேய்த்து வந்தால் சுவாச ஒவ்வாமையை சுத்தமாக பலருக்கு சுகமாக்குகிறது. இதில் தும்பைத் தைலம் சிறப்பானதாகும்.
மூலிகைகள் :-
 ஆடாதோடை இளைப்பு, இருமலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். இதில் வேசிசின் என்ற மூலக்கூறு உள்ளது. இது ஆஸ்துமாவின் இளைப்பை 

கட்டுப்படுத்துகிறது. சளியை வெளியற்றுகிறது. நுரையீரல் வேலையை திறம்பட சீர்படுத்துகிறது. இருதயத்தின் வேலை செய்யும் தன்மையை அதிகரிக்கிறது. நுரையீரலில் உள்ள வீக்கத்தையும் வற்ற வைக்கும் தன்மை கொண்டது. ஆடாதோடை இலையை பொடியாகவோ அல்லது இந்த இலையின் சாற்றை மருந்தாகவோ உபயோகிக்கலாம். ===தொடரும்


Dr.R.S.Purusotham,
9842425780 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக