நலமான வாழ்க்கைக்கு உணவு
மனித வாழ்க்கைக்கு சக்தியைக் கொடுப்பது உணவுப் பொருள்கள் ஆகும். உணவு மிகுந்தால் பலநோய்கள் உருவாகின்றன. உணவு குறைந்தாலும் பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் உருவாகின்றன. எவற்றை உண்பது எவற்றை தவிர்ப்பது போன்றவற்றில் பிரச்சனையாக உள்ளது. பொதுவாக கார்போஹைட்ரேட் அடங்கிய தானியங்கள், கிழங்குகள் உண்ணலாம். ஆனால் சர்க்கரையை தவிர்க்கலாம். கொழுப்பு சத்து நிறைந்த நெய் மற்றும் எண்ணையால் ஆன பலகாரங்கள், ஐஸ்கிரீம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த மாமிச உணவுகள், பொறித்த உணவுகளைத் தவிர்க்கலாம். அசைவ உணவு பிரியர்கள் மீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். அதில் உள்ள ஓமேகா3 என்ற கொழுப்புப் பொருள் இதயத்தில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.
மேலும் நார்ச்சத்துக்களுடைய காய்கறிகள் உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. ஊட்டச் சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளுவதால் உடம்புக்கு தேவையான தாது உப்புகள், வைட்டமீன்கள் நிறைவாக கிடைக்கிறது. உணவை பொதுவாக அறைவயிற்றுக்கு உண்ணவேண்டும். கால் வயிற்றுக்கு நீர் அருந்தவேண்டும். மீதமுள்ள கால் வயிறு வெறுமையாக இருக்கவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் சுறுசுறுப்பாக இருக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஆறு கிராம் உப்பு போதுமானதாகும். ஆகவே உணவில் உப்புச் சத்து நிறைந்த ஊறுகாய், அப்பளம், வடகம் போன்றவைகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
உடலின் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவு உண்ணும் அளவை குறைப்பது தவறாகும். ஆனால் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உணவில் சேர்ப்பதால் உடல் பருமன் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. மதிய உணவு உண்ணும் முன் பச்சையாக வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடம்பின் பருமனைக் குறைக்கும். பொதுவாக நாக்கிற்கு சுவை தரும் உணவை விரும்பாது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகள் சிறப்பாகும். பொதுவாக அவசர உணவுகளில் உள்ள கொழுப்புச் சத்து, மற்றும் இரசாயனப் பொருள்கள் உடலுக்கு தீமையை விளைவிப்பதே ஆகும். நாம் உபயோகிக்கும் சில காய்கறிகளின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
கேரட்:- இது பெரும் அளவில் மக்களால் உபயோகப்படுத்தும் ஒரு உணவுப் பொருள் ஆகும். கேரட்டில் பீட்டகேரட்டின் என்ற மருத்துவப் பொருள் அதிகம் இருக்கிறது. இதில் பெரும் அளவில் வைட்டமீன் B, கால்சியம் போன்ற தாது உப்புக்கள் உள்ளன. கேரட் உணவினால் கண் பார்வை தெளிவாக இருக்கும். புற்றுநோயைத் தடுக்கும் குணம் வாய்ந்தது. இது இளமையைக் காக்கும் குணம் உடையது. இருதய நோய்க்கு கேரட் ஒரு சிறந்த மருந்தாகும்.
வெண்டைக்காய்:-நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு காய், இதில் வைட்டமீன்கள் Aபோலிக்காசிடு, மற்றும் மினரல்கள் உள்ளன. வெண்டைக்காய் ஒரு நல்ல மலம் இழக்கியாக உள்ளது. இது சர்க்கரைச் சத்தையும், கொழுப்புச் சத்தையும் குறைக்கும் தன்மை உடையது. உடல் பருமனை குறைப்பதில் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. புற்று நோய் மற்றும் மலக்குடல் சார்ந்த புற்று நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. உடல் தளர்வு, பலவீனம், மனச் சோர்வு ஆகியவற்றை நீக்குவதில் ஒரு சிறந்த மருந்தாக இது அமைந்துள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கும், நோயை குணமாக்கும் சக்திகொண்ட சோயாபீன்சை பற்றி இனி பார்ப்போம். உலகில் சோயாபீன்ஸ் பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. சோயாபீன்சில் 36.49 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. இதில் உடலுக்கு தேவையான அமினே அசிடுகள் விட்டமீன்கள், மினரல்கள் உள்ளன. சோயாபீன்சுக்கு புற்றுநோயை சுகமாக்கும் குணம் கொண்டது. இதில் உள்ள ஓமேகா-3 என்ற கொழுப்புப் பொருள் உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்புப் பொருள் படிவமாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் முதுமையை தடுத்து இளமையைக் காக்கும் குணம் கொண்டது. சோயாவை உபயோகிக்கும் முன் அதை ஊறவைத்து பின்னர் தண்ணீரில் கொதிக்கவைத்து பின்னர் காய வைத்து உபயோகிக்க வேண்டும். ஏனெனில் (Trypsin என்ற தேவையற்ற பொருளை நீக்குவதற்கு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக