......................
இதை உயர் இரத்த அழுத்த நோய் என்றும் கூறுவர். இது இரத்த அழுத்தம் அதிகரித்து உறுவாகுவதாகும், இதனால் இருதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இரத்த அழுத்தம் இரண்டு வகையான அளவீடுகளுடன் கூடியது. சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் என்பது இருதயம் சுருங்கும் பொழுது ஏற்படும் அழுத்தமாகும். மற்றொன்று டயஸ்டாலிக். இது இருதயம் விரிந்து கொடுக்கும் பொழுது உருவாகும் இரத்த அழுத்தம் ஆகும்.
பொதுவாக இரத்த அழுத்தம் 120/80mm மெர்க்குறியாக இருக்கவேண்டும். அதிக இரத்த அழுத்தம் என்பது 140/90-க்கு மேல் இருப்பதாகும். வயது முதுமையானவர்களுக்கு சிறிது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இரத்த அழுத்தத்தை இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.
1) Essential (உயர் இரத்த அழுத்தம்)
2) Secondary இரத்த உயர் அழுத்தம். இவற்றில் 90 to 95 சதவிகிதம் முதல்வகை இரத்தக் கொதிப்புக்கு தெளிவான மருத்துவ காரணம் அறிய முடிவதில்லை. மீதமுள்ள 5 to 10 சதவிகிதம் உள்ளவர்கள் 2-ஆம் நிலை இரத்தக் கொதிப்பு சார்ந்தவர் ஆவார். இந்த வகை இரத்தக்கொதிப்பு சிறுநீரகக் கோளாறுகள், இரத்தத்தை எடுத்து செல்லும் தமநிகளின் பாதிப்பு மற்றும் இருதய நோய்களால் வரும் பாதிப்பால் உருவாகிறது.
2) Secondary இரத்த உயர் அழுத்தம். இவற்றில் 90 to 95 சதவிகிதம் முதல்வகை இரத்தக் கொதிப்புக்கு தெளிவான மருத்துவ காரணம் அறிய முடிவதில்லை. மீதமுள்ள 5 to 10 சதவிகிதம் உள்ளவர்கள் 2-ஆம் நிலை இரத்தக் கொதிப்பு சார்ந்தவர் ஆவார். இந்த வகை இரத்தக்கொதிப்பு சிறுநீரகக் கோளாறுகள், இரத்தத்தை எடுத்து செல்லும் தமநிகளின் பாதிப்பு மற்றும் இருதய நோய்களால் வரும் பாதிப்பால் உருவாகிறது.
அறிகுறிகள்
பின்தலைப் பகுதியில் தலைவலி, தலைச்சுற்றல், நடுக்கம், மந்தம், வெளிறிப் போதல், பலவீனம், அரைத்தூக்கம், குழப்பம், மங்கலான பார்வை, எடை இழப்பு, குமட்டல் மற்றும் வாந்தி, நோய்த்தாக்குதல், எரிச்சல்தன்மை, வேகமான இதயத் துடிப்பு, சுவாசித்தலில் தடை, மூக்கில் இரத்தம் வடிதல், மற்றும் முகக் கோணல் ஆகியவைகள் உருவாகின்றன.
தடுப்பு முறை-
* ஆங்கிலத்தில் இரத்தக்கொதிப்பிற்கு கைப்பர்டென்சன் என்று கூறுவர். கைப்பர் என்றால் அதிகமாக டென்சன் என்றால் உணர்ச்சி வசப்படுவதாகும். அதிக உணர்ச்சி வசப்படுவதால் இந்த நோய் வருகிறது. அதிக உணர்ச்சி வசப்படாமல் அமைதியான வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது இரத்தக் கொதிப்பு குறைகிறது. ஆகவே இரத்தக் கொதிப்பிற்கு தியானம் ஒரு சிறந்த மருந்தாகும். அமைதியைத் தேடி ஆண்டவனைக் கும்பிடும்போது எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக கடவுளைக் கும்பிடுவதே ஒரு சிறந்த வழியாகும். 1) உணவு முறைகளிலும் இரத்தத்தின் அடர்த்தியைக் கூட்டும் உப்பு, கொழுப்புப் பொருள்கள் குறைத்தால் இரத்தக் அழுத்தம் குறையும். இது 33 சதவிகித மக்களிடத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
4) உணவில் சர்க்கரை உள்ளெடுப்பைக் குறைப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
5) புகையிலைப் பயன்படுத்துவது மற்றும் ஆல்கஹால் நுகர்வை நிறுத்துவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள்-
1) இதயச் செயலிழப்பு
2) பக்கவாதம்
3) மாரடைப்பு
4) உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் இதய செயலிழப்பு
5) இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளுடைய மையோகார்டியம்
(தசை) கெட்டிப்படுதல்
6) விழித்திரை சேதம்
7) நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு
8) உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஏற்படும் குழப்பம், தலைவலி, வலிப்பு.
மருதமரம்:- இது சுமார் 25-மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பெரிய மரமாகும். இதன் பட்டை இருதய நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. இந்த மரத்திற்கு அர்ஜுனன் இதய பலம் வாய்ந்த ஒரு வீரன். ஆகவே மருதமரத்திற்கு அர்ஜுன மரம் என்று கூறுகின்றனர். இந்த மரத்தின் பட்டை பல நாடுகளில் பற்பல ஆய்வுகளுக்கு உட்பட்டது.
அர்ஜுனா பட்டை கொழுப்பையும், உடம்பில் உள்ள நச்சுப் பொருள்களையும் வெளியேற்றுவதால் இரத்தத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் இருதயம் அதிக அழுத்தம் கொடுத்து இரத்த ஓட்டத்தைச் செயல்படுத்த தேவையில்லாமல் போகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. மேலும் அர்ஜுன பட்டை இருதய கிளர்ச்சியுட்டியாகவும் இதய தசையை வலிமையூட்டுவதாகவும் அமைகிறது. இதனால் இருதய செயல்பாடு சிறப்புறுகிறது. மேலும் அர்ஜுன பட்டை ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாகும். இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனை தொடர்ந்து 60-நாள் உபயோகித்தால் கொழுப்பு பொருள் 64-சதவிகிதம் குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இது இருதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த வரபிரசாதமாகும். அர்ஜுன பட்டை மாரடைப்பில் இருந்து காக்கிறது. அர்ஜுன பட்டையில் சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் விட்டமீன்கள் பல குளுக்கோசைடுகள் உள்ளன. இவைகள் இருதயத்தைநன்றாக பராமரித்து இதயச் செயல்பாடைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது.
அடுத்து இருதயத்திற்கு சிறந்த மருந்து பூண்டு ஆகும். பூண்டில் பல வகை இருக்கலாம். நமது உபயோகத்தில் நாட்டு பூண்டு, வடைபூண்டு என்ற இருவகை உபயோகப்படுத்தப்படுகிறது. உலகெங்கும் பூண்டு சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பெரிய அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. உலக உற்பத்தியிலும், உபயோகப்படுத்துவதிலும் சீனா முதல் இடமும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. வெளி நாடுகளிலும் பூண்டு பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக பூண்டுக்கு ஒரு விரும்பத்தகாத நாற்றம் உண்டு. இஸ்லாமிய வரலாற்றிலும் பூண்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஐரோப்பிய கலாச்சாரத்திலும் உணவில் பூண்டுக்கு தனி மதிப்பு உண்டு. பூண்டுக்கு பேய், பிசாசு, இரத்தக்காட்டேரி போன்றவைகள் பயந்து ஒதுங்கும் ஒதுங்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆகவே அவர்கள் பூண்டை வீட்டு வாசல் முன் கோர்த்து தொங்க விடுவது வழக்கம். தீய சக்திகள் வீட்டில் வராமல் இருக்க பூண்டை நசுக்கி அதன் சாற்றை புகைகூண்டு, ஜன்னல்கள் ஆகியவற்றில் தடவும் பழக்கம் இப்பொழுதும் உண்டு. 415 இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களிடம் பூண்டின் பொடியைக் கொடுத்து சோதித்ததில் எல்லோருக்கும் இரத்த அழுத்தம் பெரிய அளவில் குறைந்ததை ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. 1994-ஆம் ஆண்டு ஆய்வு செய்ததில் பூண்டு இரத்தத்தில் உள்ள கொழுப்புப் பொருள்களை பெரிய அளவில் குறைத்து இருதயத்திற்கு பலம் சேர்ப்பதுடன் இரத்த அழுத்தத்தை பெரிய அளவில் குறைக்கிறது.
மேலும் பல ஆய்வுகளில் பூண்டு உடல் பருமனை குறைக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர். இரத்த நாளங்களை விரித்துக் கொடுப்பதுடன் இரத்த நாளங்களைப் பலமடையச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. மேலும் பூண்டு நோய்க்கிருமிகளை பென்சிலீன் மருந்தைப் போல் அழிக்கிறது. உலகப் போர்களில் காயம் அடைந்தவர்களுக்கு ரஸ்சிய பூண்டை பெரும் அளவில் உபயோகித்ததால் பூன்டிற்கு ரஸ்சிய பென்சிலீன் என்ற பெயர் உண்டு.
ஏதேனும் தேவைக்கு அணுகவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக