மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலையும், மூலிகையும்
தினமும் உடலில் இரத்த சிகப்பு அணுக்கள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அழிக்கப்படுகின்றன. இது ஒரு நிகழ்வாக அமைகிறது. அவ்வாறு செயல் இழக்கப்பட்ட இரத்த சிகப்பு அணுக்களை ஈரல் பைலுரிபின் என்ற வேதியல் பொருளாக மாற்றி இரத்தத்தை விட்டு பிரித்து மலத்துடன் வெளியேற்றுகிறது. ஈரல் செயல்பாட்டை இழக்கும் பொழுது பைலுரிபின் வெளியேற்றப்படாமல் இரத்தத்தில் தேங்குகிறது. இதைதான் மஞ்சள் காமாலை என்கிறோம். பைலுரிபின் நச்சுத் தன்மை கொண்ட மஞ்சள் வேதியல் பொருளாகும். இது இரத்தத்தில் அதிகமாவதால் கண், வாய், தோல், சிறுநீர் ஆகியவைகள் மஞ்சள் நிறமாகிறது. மலம் வெண்மை நிறத்தை அடைகிறது. மஞ்சள் காமாலைக்கு பல காரணங்கள் உண்டு. வைரஸ் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை, சில மருந்துகளால் உருவாகும் மஞ்சள் காமாலை, மதுவினால் உருவாகும் மஞ்சள் காமாலை மற்றும் ஈரல் அடைப்பினால் உருவாகும் மஞ்சள் காமாலை என்று பலவகை உண்டு. பொதுவாக வைரசினால் வரும் மஞ்சள் காமாலை சுகமாவதற்க்கு சில நாட்கள் எடுக்கலாம். இவற்றில் வைரஸ் கெப்படையிஸ் B பிரச்சனைகுரியதாகும். வைரஸ் கெப்படையிஸ் C பெரும் அளவில் நீரினால் பாதிப்பை உருவாக்குவதாக அமைகிறது. அப்ஸ்ட்ராக்டி மஞ்சள் காமாலை என்பது பித்த நீர் செல்லும் குழாய் அடைக்கப்படுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும்.
மஞ்சள் காமாலையின் அறி குறிகள் 1) சிறுநீர் மஞ்சளாகுவதால்,
2) தோல், கண், நகம், வாய், முதலிய பகுதிகள் மஞ்சள் ஆகுதல்,
3) பசியின்மை, சோர்வு, களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி,
4) உடல் எடை குறைதல் ஆகியவை ஆகும்.
சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படுவதும் உண்டு. இதற்குகெனத்
தனிப்பட்ட மருத்துவம் இல்லாவிடினும் மூலிகை மருத்துவத்தில்
சிறப்பான பல மூலிகைகள் உள்ளன. இவற்றில் இரண்டு
மூலிகைகளை இனிக் காண்போம்.
கரிசலாங்கண்ணி
இந்த மூலிகை வெள்ளை நிறம், மற்றும் மஞ்சள் நிறம் பூக்கும் இருவகை உண்டு. இந்த மூலிகை நீர்வளம் உள்ள இடங்களில் செழித்து வளரும் ஒரு குருஞ்செடியாகும். இது ஒரு குத்துரோமம் கொண்ட செடி. இது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மைக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் ஒரு ஈரல் தேற்றியாக கூறுகின்றனர். மேலும் இந்த மூலிகை பெரும் அளவில் தலைமுடிக்கான தைலங்களில் உபயோகப்படுத்தபடுகிறது. இது ஒரு கர்ப்ப மூலிகையாக கூறுவதுண்டு. இந்த மூலிகையில் இரும்புச் சத்தும், தாமரச் சத்தும், பெரும் அளவில் உள்ளது. இரத்தச் சோகைக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். சளி, ஆஸ்துமா, போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தபடுகிறது. இந்த மூலிகை மஞ்சள் காமாலைக்கும், கல்லீரல் பலப்படுவதற்க்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
கரிசலாங்கண்ணியின் வேர், இலை, காய், பூ ஆகியவற்றை நிழலில் காய வைத்து இடித்து காலையும், இரவும் உண்ண வேண்டும். தற்காலத்தில் பல ஆய்வுகளில் இது மஞ்சள் காமாலைக்கு ஒரு சிறந்த மருந்து என்று கூறுகின்றனர். மஞ்சள் காமாலையால் வரும் வாந்தி, வயிற்றுபொருமல், போன்ற எல்லாவித பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் கரிசலாங்கண்ணி மஞ்சள் காமாலையால் ஏற்படும் ஈரல் வீக்கத்தைக் குறைக்கிறது. சர்க்கரை நோய்க்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.
கீழா நெல்லி
மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி ஒரு சிறந்த மூலிகையாகும். இது தமிழகமெங்கும் வளரும் செடியாகும். இது ஒரு குறுஞ்செடி. இதன் இலையின் அடியில் வரிசையாக காய் இருப்பதால் இதற்கு கீழா நெல்லி என்று பெயர் வந்தது. இந்த மூலிகை தொன்றுதொட்டு பல நோய்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை இந்தியாவிலும், உலகெங்கிலும் பெரும் அளவில் சோதனைச் சாலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பல அறிக்கைகளுடன் கூடியது. இந்த மூலிகை மஞ்சள் காமாலைக்கு பல காலமாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை வைரஸ் கெப்பட்டைஸ் B-யை செயல் இழக்க வைத்து மஞ்சள் காமாலையை சுகமாக்கும் குணம் கொண்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கீழா நெல்லியில் இரும்பு சத்து, விட்டமீன்கள், தாதுப் பொருள்கள், புரதச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள பைலான்தஸ் என்ற வேதியல் பொருள் ஈரலை பாதுகாக்கும் தன்மை உடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கீழாநெல்லி நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது என்று ஆய்வுகள் செய்துள்ளனர். மேலும் சர்க்கரை நோய் மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களுக்கும் சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றனர். பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கார்கள் இந்த இலையுடன் 4-மிளகு சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
Dr.R.S.Purusotham,
24th 4th Cross Street,
Santhi Nager,
Palayamkottai-627002,
செல்: 9842425780.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக