தலை முடியும், முடிசார்ந்த பிரச்சனையும்
பேன்கள்
பொதுவாக சிரியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பிரச்சனையை உருவாக்குவது பேனும், பேன்கடியால் ஏற்படும் புண்ணாகிய பெடிக்குளோசிஸ் ஆகும். பேன் ஒரு ஒட்டுண்ணி வகைச் சார்ந்ததாகும். பேன்கள் தலைப்பேன், சீலைப் பேன் என்று இருவகை உண்டு. தலைப் பேன் என்பது தலையிலும், சீலைபேன் என்பது உடையின் மடிப்புகளிலும் வசிப்பது. பேன் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யகூடியது ஆகும். ஒரே மாதத்தில் ஒரு பேன் நூற்றுக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி செய்யும். இதன் கால்களில் உள்ள சிறப்பான பகுதிகளால் தலைமுடியை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. பேன்களின் உறிஞ்சுக்குழலின் உள்ள கூர்மையான பகுதியின் மூலம் மனித இரத்தத்தை உறிஞ்சுகிறது.
இவ்வாறு பேன் கடிக்கும் இடத்தில் சீல்வைத்து பெடிக்குளோசிஸ் என்ற புண்கள் உருவாகும். இதற்கு என்று பல மருந்துகள் வேதியல் கலவையுடன் கிடைக்கிறது. பேன் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் வீட்டில் உள்ள எல்லா அங்கத்தினர்களையும் பாதிக்கும்.பொதுவாக குழந்தைகள் பள்ளியில் இருந்து இந்த பேன் தொல்லையை பெற்று வருவர். இந்த அழிப்பதற்கு சீத்தாப்பழத்தின் விதையை எடுத்து அரைத்து அத்துடன் விதையின் அளவைப்போல இரு மடங்கு தேங்காய் எண்ணெய் சேர்க்கவேண்டும். அத்துடன் ஒரு கற்பூரவில்லையையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கண்ணாடி பாட்டலில் வைத்து அதை மூடி ஐந்து நாள் வெயிலில் வைத்து பின் பேன் உள்ளவர்கள் வெளிப் பிரயோகமாக உபயோகிக்க பேன்கள் செத்து மடியும். இவ்வாறு ஏழு நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்க பேன் முற்றிலும் அழிந்துவிடும்.
பேனுக்கு வேறு ஒரு முறை இங்கு கூறுகிறோம். வசம்பு ஒரு வகைப்பூண்டாகும். வசம்பும் ஒரு நறுமணத்துடன் கூடிய ஒரு ஒட்டுண்ணிக்கொல்லியாகும். இது பேன் மட்டும் அல்லாது கோழி போன்ற மிருகங்களின் செல்களையும், கொல்லும் குணம் வாய்ந்தது. இதைத் தண்ணீரில் அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பேன்கள் அழிந்து விடும். வசம்பையும் நன்றாக பொடி செய்து கொண்டு இருமடங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு கற்பூரம் சேர்த்து அரைத்து வெயிலில் வைத்து எடுத்து அந்த எண்ணையை வாரம் ஒரு முறை உபயோகிக்க பேன்கள் அழிந்து விடும்.
பொடுகு
தலை முடியைச் சார்ந்த மற்றும் ஒரு பெரிய பிரச்சனை பொடுகு ஆகும். பொடுகு என்பது தலையின் மேல் புறத் தோலில் உள்ள இறந்து போன தோல் செல்கள் செதில் செதில்களாக உதிர்வதை பொடுகு என்கிறோம். பொடுகு பல காரணங்களால் வருகிறது. தலையில் அதிக அழுக்கும், அதிக எண்ணெய் பசையும், அதிக வறச்சியான சருமத்தாலும் வருவதுண்டு. சில வகைக் காளான்களாலும், எக்ஸிமா, சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களாலும் பொடுகு வரலாம். அதிகமாக ஷாம்பூ உபயோகிப்பவர்களுக்கும், மனக்கவலை, மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் பொடுகு வரலாம். பொடுக்கு பொடுதலை ஒரு சிறந்த மருந்தாகும். பொடுதலை ஆறு, குளம், குட்டை ஆகிய பகுதிகளின் கரைகளில் தானாக வளரும் ஒரு செடியாகும். இதன் காய் திப்பிலியின் காயை ஒத்திருக்கும். இந்த பொடுதலையை எலுமிச்சம் சாறு அல்லது தயிர் விட்டு அரைத்து வாரம் ஒரு தடவை தலையில் பூசி ஊற வைத்து குளிக்க பொடுகு போய் விடும். வேப்பிலைச்சாறு, துளசி சாறு, எலுமிச்சை சாறு, ஆகியவற்றைக் கொண்டு மருதாணியை அரைத்துப் பூச பொடுகு போய்விடும். பொடுதலை சாறு எடுத்து அத்துடன் மிளகு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணையில் சேர்த்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க பொடுகு அழிந்துவிடும்.
எல்லாமே பயன்உள்ள புதிய தகவல் ****சூப்பர்
பதிலளிநீக்கு