நலமான வாழ்க்கை
நலமான வாழ்க்கையைப் பெற மூன்று விதமான ஆரோக்கியத்தை மனிதன் பெற வேண்டியதிருக்கிறது. அதில் முதலாவது மனநிலை ஆரோக்கியம், இரண்டாவதாக உடல் ஆரோக்கியம், மூன்றாவதாக பொருளாதார சிறப்பு ஆகும். இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. மனநிலை ஆரோக்கியம் குறைந்தால் இரத்தக் கொதிப்பு, மனம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் சார்ந்த நோய்கள், தோல் சார்ந்த நோய்கள் உருவாகின்றன.
பொதுவாக நமது உடலில் உருவாகும் பல நோய்களுக்கு ஆரோக்கியம் அற்ற மனநிலையே காரணமாக அமைகிறது. மனநிலையும், உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தால் தான் பொருளாதார நிலையை சீர் செய்ய முடியும். ஏனெனில் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக திட்டமிடுவதற்கு மனநிலை சீராக இருக்கவேண்டும். அதேபோல் உடல் ஆரோக்கியமும் சிறப்புற இருந்தால் தான் திட்டமிட்டதை செயல்படுத்தமுடியும். ஆகவே இம்மூன்றும் மனிதன் நலமாய் வாழ்வதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.
பொதுவாக இந்த மூன்று ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில காரணங்களைப பார்ப்போம்.
பாரம்பரியமாக தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட மரபு அணுக்களால் ஏற்படும் நன்மை தீமைகள், அதாவது ஒருவரின் தாய் தகப்பனார் வழியின் மூலம் பெறப்படும் நன்மை தீமைகள் சார்ந்த பிரிதிப்பலிப்பாகும். உடல் ரீதியாக செல்களில் ஏற்படும் மாற்றம், இது சுற்றுப்புற தட்பவெப்ப நிலையைச் சார்ந்ததாகும்.
முக்கியமான சத்துகள், விட்டமீன்கள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமையால் ஏற்படும் குறைபாடுகள், தொழில் ரீதியாகவோ, பழக்க வழக்கங்களின் காரணமாக முக்கியமான உடல் உறுப்புகளின் கடுமையான, மற்றும் இடைவிடாத செயல்களால் ஏற்படும் பலவீனங்கள், உணவு, நீர், காற்று, ஆகியவற்றால் உடலில் ஏற்படும் விஷத்தன்மை, நன்மைச் சார்ந்தவர்களின் காரணமாக நமக்கு ஏற்படும் குணநல பாதிப்பு, மற்றும் பரம்பரை D.N.A. பாதிப்பு, சுற்றுப்புற சூழ்நிலையால் ஏற்படும் என்சைம்களின் குறைபாட்டால் பாதிக்கப்படும் ஜீன்௧ளில் ஏற்படும் குணநல, உடல்நல ஆரோக்கிய சீர்கேடுகள், வளர்ச்சிக்கான ஆர்மோன்களின் குறைபாடுகளால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்களால் ஏற்படும் விளைவுகள் ஆகும். ஆகவே ஒருவருக்கு மன ஆரோக்கியம் அதைச் சார்ந்த உடல் ஆரோக்கியம் இவைகள் இரண்டாலும் ஏற்படும் பொறுளாதார உயர்வு ஆகியவற்றைப் பற்றி இனிவரும் நாட்களில் காண்போம். வளமான வாழ்க்கையைப் பெறுவோம். வளமான வாழ்க்கையைப் பெற நலமானதைச் செய்வோம்.
நலமான வாழ்க்கை என்பதும் வளமான வாழ்க்கை என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள் தான். வளமான வாழ்க்கை என்ற உடன் நம் நினைவுக்கு வரும் சொல் “வாழ்க வளமுடன்” என்பதாகும். இந்த இயக்கத்தை உருவாக்கிய ஆன்மீக உயர் ஞானி வேதாத்ததிரிமகா ரிசி என்னென்ன அர்த்தத்தில் யோசித்திருப்பார் என்பதை நினைத்தால் கீழ்வரும் காரியங்கள் நம் நினைவுக்கு வரும். அவரும் வளம் என்பதை ஆன்மீக பலத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதார உயர்வையும் சேர்த்து தான் நினைத்திருப்பார். ஆம் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி தேவைதான். ஆனால் நாம் அதை பெறுவதில் ஒரு நியாயமான அணுகுமுறை தேவை. இந்த சூழ்நிலையில் ஒரு அறிஞர் கூறிய வார்த்தை நினைவுக்கு வருகிறது. நீங்கள் அமைதியாக இருக்க விரும்பினால் நீங்கள் நேர்மையாக இருங்கள். நாம் நம்மை மாற்றிக் கொண்டால் தான் சமுதாயத்தை நாம் மாற்றமுடியும். நலமான எண்ணங்களே நலமான செயல்களை செய்ய வித்திடும். நலமான செயல்கள் நலமான வாழ்க்கையைக் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக