நோயும் மூலிகையும்
...........................
...........................
மனிதனுக்கு கடவுளால் நோய்க்கு அருளப்பட்டவைகளே மூலிகைகள். எந்த ஒரு காரியத்திற்கும் தீர்வு இல்லை என்ற நிலைக கிடையாது. இன்று நவீன மருத்துவத்தின் ஆதிக்கம் இத்தகைய இயற்கை மருத்துவத்தை பின் தள்ளி விட்டது. அம்மையை ஒழித்துவிட்டோம், போலியோவை அழித்துவிட்டோம், காலராவை குறைத்துவிட்டோம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் எய்ட்சை உருவாக்கி விட்டோம். பறவைக் காய்ச்சலை உலகில் எங்கும் பரவவிட்டோம், பன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு இல்லாமல் முழித்துக் கொண்டு இருக்கிறோம். எப்படியோ இந்த உலகம் சமநிலையை காக்கிறது. எப்படி இருப்பினும் வெளி நாட்டு மருத்துவத்தில் ஒரு மருந்து மூலக்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அந்த மருந்தின் அடிப்படை மூலக்கூறு எதைச் சார்ந்தது, அதன் பக்கவிளைவுகள் என்ன என்பதைப் பற்றி முடிவாக யாராலும் கூறமுடியாது. நாம் இப்பொழுது நோயற்ற சமுதாயத்தை உருவாக்கி உள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் என்னைக் கேட்டால்
நோய் எதிர்ப்பு அற்ற ஆரோக்கியம் இல்லாத சமுதாயத்தைத் தான் உருவாக்கி உள்ளோம்.
நோய் எதிர்ப்பு அற்ற ஆரோக்கியம் இல்லாத சமுதாயத்தைத் தான் உருவாக்கி உள்ளோம்.
இந்தியாவில் 18 சதவிகிதமக்கள் மருத்துவத்தால் வறுமை யாக்கப்பட்டுள்ளார்கள்
என்ற ஒரு கணக்கு கூறுகின்றது. கஸ்டத்தையும், நஷ்டத்தையும் பணம் ஆக்கும் தொழில் வைத்தியமும், சட்டமும் ஆகும். ஆனால் இந்த இரண்டு தொழில்களிலும் நேர்மையானவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. எனவே வரும்முன் காப்போம் என்ற கூற்றிற்கு ஏற்ப இயற்கை மருத்துவம், தியானம், யோகா அப்பியாசம், ஆகியவைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த நவீன மருத்துவத்தின் பல மருந்துகள் மூலிகையில் இருந்து உருவாக்கப்பட்டது என்பது சிலருக்குத்தான் தெரியவரும். எப்படி இருப்பினும் நாங்கள் ஒரு வியாதியின் காரணம் அதற்கான மூலிகைகள் போன்றவற்றை சிறப்பாக கொடுத்துள்ளோம்.
தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
வாழ்க வளமுடன் வளமான வாழ்வைப் பெற நலமானதைச் செய்யுங்கள்.
வாழ்க வளமுடன் வளமான வாழ்வைப் பெற நலமானதைச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக