JavaScript


ஆசனங்களும், உடல் ஆரோக்கியமும்

     ஆசனா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கீழே உட்கார்ந்து என்ற அர்த்தமாகும். இது ஆரம்ப காலத்தில் யோக பயிற்சிக்கும், உடல் நிலைக்கும் தொடர்பு உடையதாக இருந்தது என்று தெரிய வருகிறது. பின்னர் பலவகை ஆசனங்கள் உருவாக்கப்பட்டபின் இது உடல்நலம் மற்றும் உள்ள நலனுக்கு உறிய பயிற்சியாக மாறியது. பதாஞ்சலி யோக முனிவர் சாஸ்திரத்தில்-- ஆசனம் உடலை யோகத்தின் பொழுது எந்த ஒரு சிரமமும் இன்றி தியானம் செய்வதற்கு உரியதாக எண்ணினார். யோகாசனங்கள் உடலுக்கு நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது. உடம்பின் வலுவைக் கூட்ட உபயோகப்படுகிறது. உடம்பின் சமநிலையைக்  காக்கிறது. மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகளைக் குறைக்க உதவுகிறது. குறுக்கு வலியை குறைக்கிறது. நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் ஆஸ்துமாவுக்கு நல்ல பலனை அளிக்கிறது. உடலில் சோர்வைக் குறைத்து சுறுசுறுப்பை உருவாக்குகிறது. மகப்பேறு காலத்தில் குழந்தைப்பேற்றுக்கு பெருமளவில் உதவுகிறது. முதியவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி ஒரு நலமான வாழ்வைக் கொடுக்கிறது.
           சர்க்கரை நோயாளிகளுக்கு நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது. தூக்கமின்மை, இரத்த அழுத்தம் ஆகியவற்றை சீர் செய்கிறது. ஆசனங்கள்- அஸ்ட அங்க யோகத்தில் முதல் அங்கமாக உள்ளது. இனி ஆசனங்கள் செய்யும் முறைகளைப் பார்ப்போம்.  ஆசனங்கள் காலை அல்லது மாலை உணவுக்கு முன் செய்ய வேண்டும். அல்லது உணவுக்கு பின் மூன்று மணிநேரம் கழித்துச் செய்யலாம். ஆசனம் செய்யும் பொழுது போர்வையை விரித்து அதன் மீது செய்யவேண்டும். ஒரு எளிதான ஆடைகளை உபயோகிக்கவேண்டும். ஆசனம் செய்யும் பொழுது கண்ணாடி, கைகடிகாரம் கைச்செயின் ஆகியவற்றை அணியவேண்டாம். ஆசனம் செய்யும் பொழுது உடல் அழுத்தத்துடனோ, உடல் நடுக்கத்துடனோ செய்யக்கூடாது. பயிற்சியை முடித்த உடன் ஏதாவது பால், பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒழுங்காக பயிற்சி செய்யவேண்டும். யோகாசனங்கள் படிப்படியாக பயிலவேண்டும். தியானம், பிரணாயாமம் ஆகியவற்றை ஆசனத்துடன் சேர்த்து செய்யவேண்டும்.
 ஆசனங்கள் செய்வதற்கு பொறுமை, விடாமுயற்சி, உள்ள ஆர்வம், நேர்மை ஆகியவைத் தேவை. ஆசனத்தை ஒரு பயிற்சி செய்த நல்ல ஆசிரியரின் துணையோடு செய்யவேண்டும். அவரவர் திறன், மனோ நிலை, உடல் நிலை ஆகியவற்றை ஆய்ந்து தேவையான பயிற்சி அளிக்க செய்யலாம். ஆசனங்கள் செய்பவர்கள் ஒளிமிக்க கண்களையும், அமைதியான முகத்தையும், அழகு, வலிமை மற்றும் ஆன்மீக அருள் பெற்றவராக விளங்குவர். பொதுவாக ஆசனங்கள் செய்யும் இடம் காற்றோட்டமானதாக அமையவேண்டும். ஆசனங்கள் செய்யும் பொழுது செய்யவேண்டிய சுவாச பயிற்சியை குரு மூலம் தெரிந்து அதன்படி செய்யவேண்டும். சூரிய நமஸ்காரமே ஒரு ஆசன பயிற்சி ஆகும். இதில் 12 பயிற்சிகளும் 11 ஆசனங்களும் உள்ளன. இவைகளை முறையாக ஆசிரியரிடம் கற்று பயிற்சி செய்தாலே போதுமானதாகும். சூரிய நமஸ்காரத்தில் முதலில் பிரணாயாம ஆசனம் செய்யவேண்டும். இதனால் முதுகெலும்பு பலப்படுகிறது. அதன்பின் அஸ்ட உட்டாசனம் இரண்டாவதாகச் செய்யப்படுகிறது. இது முதுகுத் தண்டிற்கு நெகிழ்வுத் தன்மையைக் கொடுக்கிறது. பின்பு புஜங்காசனம் இளமைத் தோற்றத்தை அளிக்கவல்லது. சுலபாசனம் உடலின் கீழ்ப் பகுதியை செயல்படுத்துகிறது. சர்வாசனம்  தோளுக்கு பலம் அளிப்பதுடன் உடல் முழுவதற்கும் ஊட்டமளிப்பது. மச்சாசனம் கழுத்து மற்றும் தோல்பட்டைக்கு பலம் கொடுப்பதாகும். தனுர் ஆசனம் உடலின் முட்டுக்களுக்கு பலன் கொடுப்பதாகும். இந்த ஆசனம் பெண்களுக்கு சிறப்பான ஆரோக்கியத்தைக் கொடுக்கும். சலாசனம் பாலியல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும். கடைசியாக சூரிய நமஸ்காரத்தில் செய்யப்படுவது சவ ஆசனம் ஆகும். இது மனது மற்றும் உடலுக்கு ஒரு திருப்திகரமான அமைதியை உருவாக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக