நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும், மனநிலை சார்ந்தும் வருவதாக கருதுகின்றனர். சோரியாசிஸ்
என்பது தோலில் ஏற்படும் ஒரு சிதைவு ஆகும். தோலில் சிகப்பு நிற திட்டுகளுடன் இருக்கும். அந்த இடத்தில் ஒருவித உறுத்தல் இருக்கும். தோல் தடித்து அத மேல் இறந்த தோல் செதில்களுடன் இருக்கும். இந்த நோய் வறண்ட காற்று, மற்றும் சில மருந்துகள், உணர்ச்சி வசப்படுதல், அதிக சூரிய ஒளி, மதுபானங்கள் உபயோகித்தல், அடிக்கடி வைரஸ் மற்றும் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுபவர்களுக்கு அதிக வருகிறது. இதற்க்க் மருத்துவத்தில் எங்களை விட்டால் யாரும் கிடையாது என்று கூறுவர் பலர் உண்டு.
நாங்கள் உள் சாப்பிடுவதற்கும், வெளியே போடுவதற்கும் மருந்தும் செயமுரைகளைக் கூறியுள்ளோம். செய்து வெற்றி அடையுங்கள்.
சோரியாசிஸ்சுக்கு போடப்படும் தைலம்:
தேவையான பொருட்கள்:
1) நீர் வெட்டி முத்து எண்ணெய்,
2) வேப்ப எண்ணெய்
3) புங்க எண்ணெய்
4) சம்பங்கி விதை
5) அருகம்புல்,
6) வேப்பாலை இலை ஆகியவைகள்.
செய்முறை: தேங்காய் எண்ணையை எடுத்து அதில் தூளாக்கப்பட்ட சம்பங்கி விதையை போட்டு கலக்கி 10 நாள் வெயிலில் வைத்து எடுக்கவும். பின்னர் புங்கை எண்ணெய்க்கு சம அளவு அருகம்புல் சாறு விட்டு பதமாக காய்ச்சி எடுக்கவும். பின்னர் எல்லா எண்ணெய்களையும் ஒரு பாத்திரத்தில் விட்டு வேப்பாலை இலையை கையால் சிறு துண்டுகளாக்கி அந்த இலையில் உள்ள பால் எந்த ஒரு சேதாரம் ஆகாமல் பார்த்து எண்ணையில் போட்டு வெயிலில் 15 நாள் வைத்து எடுத்து உபயோகப்படுத்தவும். காலை, இரவு இரு வேளை குளித்த பின் போடவும். வேலைக்குச் செல்லும் முன் துணியால் துடைத்து விடவும்.
கருஞ்சீரகம், வேப்பிலை, நெல்லிக்காய் காய்ந்தது, மஞ்சள், கருசாலை, சீனப்பாவு ஆகியவைகளைச் சேர்த்து அரைத்து இரு வேளை வேளைக்கு ஒரு கிராம் வீதம் சாப்பிடவும். அதிக அளவு தண்ணீர் குடிக்கவும்.
சோரியாசிஸ் வருவதற்கான காரணங்கள்:
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிவேகமாக செயல்படுதல்,
2. தோல் வளரும் நிகழ்வு அதிகமாக செயல்படுதல்,
3. பாரம்பரிய காரணங்கள்,
4. சூரிய ஒளி,
5. அதிக உணர்ச்சி வசப்படுதல்,
6. சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களை தோல் தாங்கிக் கொள்ள முடியாமை.
உணவு முறைகள்:
தயிர், மோர், உபயோகித்தல், இயற்கை உந்தல்களாகிய மலஜலத்தை அடக்காதிருதல், காரம், கரிமசால் மற்றும் உப்பைக் குறித்த உணவை சாப்பிடவேண்டும். புளிப்பு சுவையுடைய அமிலத்தன்மையுடைய உணவுகளைக் குறைக்க வேண்டும். காய்கறிகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். முட்டை, கொழுப்புச் சத்து உள்ள மாமிசங்கள், பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும். மீன் எண்ணெய், முளைகட்டிய பயிர்கள் துத்தநாக உலோகம் சேர்ந்த உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும்.
சோப்புக்கு பதிலாக மூலிகைப் பொடிகளை உடம்பில் தேயித்து குளிக்கவேண்டும். உங்களுக்கு என்று தனியாக துண்டு, போர்வைகள் வைத்துக் கொள்ளவேண்டும். உணவில் பாகற்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். புண்ணை சுரண்டுவது, செதில்களைப் பிய்ப்பது, போன்ற செயல்கள் நோயின் அகோரத்தை அதிகப்படுத்தும். மனநிலை, ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். மனநிலை ஆரோக்கியத்திற்காக தினமும் தியானமும் சுவாச பயிற்சியும், ஒரு முப்பது நிமிடமாவது செய்யவேண்டும்.
சோரியாசிஸ் குளிக்கும் பவுடர்: சீயக்காய், பூலான் கிழங்கு, கோஸ்டம், சம்பங்கி விதை ஆகியவைகளைக் கலந்து அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்க வேண்டும்.
ஏதேனும் தேவைக்கு அணுகவும்
Dr.R.S.Purusotham,
24th 4th Cross Street,
Santhi Nager,
Palayamkottai-627002.
செல்: 9842425780
24th 4th Cross Street,
Santhi Nager,
Palayamkottai-627002.
செல்: 9842425780
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக