JavaScript

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயை உடலியல் ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் மண்ணீரலானது தேவையான அளவோ அல்லது முற்றிலும் இன்சுலின் உருவக்கப்படாமல் இருப்பதும், அவ்வாறு உருவாக்கப்பட்டாலும் அதை உடல் முழுவதுமாக உபயோகிக்கப்படாமல் இருப்பதை சர்க்கரை நோய்  என்கிறோம்.
           சர்க்கரை நோயை உயர்வேதியல் ரீதியாக சொல்லவேண்டும் என்றால் இரத்தத்தில் தேவையான அளவுக்கு மேல் சர்க்கரைச் சத்து உயர்வதும், அதனால் சர்க்கரைச் சத்து சிறுநீரில் வெளியேறுவதை சர்க்கரை நோய் என்கிறோம்.
         உலக சுகாதார அமைப்பு உலகில் 5 சதவீகித மக்கள் சர்க்கரை நோயாலும், சர்க்கரை நோய் சார்ந்த வியாதிகளாலும் இறப்பதாக கூறுகின்றனர். உலகில் 8700-பேர் தினமும் சர்க்கரை நோயாலும், சர்க்கரை நோய் சார்ந்த வியாதிகளாலும் இறப்பதாக கூறுகின்றனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 6-பேர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் 5.12-கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை உறுவாகும் என்று புள்ளி விவரம் கூறுகிறது. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு உடல் மெலிதல் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதனால் அதிக தாகம் எடுத்தல் பிறப்பு உறுப்புகளில் சொறி அல்லது அரிப்பு, வெடிப்பு காணுதல், அதிகப் பசி, ஒருவித மயக்கம், பார்வையில் தெளிவின்மை ஓங்கரிப்பு, வாந்தி போன்றவைகள் நோயின் அறிகுறியாக இருக்கின்றன. சர்க்கரை நோயை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வெறும் வயிற்றில் இரத்தச் சர்க்கரை அளவு 100 மில்லி கிராமுக்கு குறைவாகவும், சாப்பிட்டு 2-மணி நேரம் கழித்து இரத்தச் சர்க்கரை அளவு 140-மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோயிக்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் சிறுநீரகக் கோளாறு, இருதய நோய், கண்பார்வை இழப்பு, இரத்த நரம்புகள் பழுதடைதல், கால் மற்றும் உறுப்புகள் சரியான இரத்த ஓட்டம் இன்மையால் செயல் இழந்து பாதிப்புக்கு உட்பட்டு அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படும். நீரிழிவு நோய் இருவகைப்படும்.
   1- மன்நீரலில் உள்ள லங்கர்கானா திசுக்கள் செயல் இழப்பினால் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாமல் சென்று விடும். இத்தகைய நோயாளிகள் இன்சுலின் ஊசியைச் சார்ந்துதான் இருக்கவேண்டும். இது பெரும்பாலும் இளம்வயதினருக்குத்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
  2-வது வகை நீரிழிவு நோய் இன்சுலின் குறைவாக சுரப்பதினாலோ அல்லது இன்சுலினை உடம்பு உபயோகித்துக் கொள்ளாததினாலோ (IIIiInsulin Resistence) இந்த நோய் வருகிறது. பொதுவாக 2-ஆம் வகை சர்க்கரை நோய் 45 வயதிற்கு மேல் தான் வருகிறது. இதற்கான காரணங்கள் 1) மறபு சார்ந்து வருதல், 2) உடல் பருமனால் வருதல், 3) மன அழுத்தத்தால் வருதல், 4) உடல் பயிற்சி இன்மையால் வருதல் ஆகியவைகள் ஆகும். சர்க்கரை நோய்காரர்களுக்கு 3 விதமான முக்கிய பிரச்சனைகள் வருவதுண்டு. 1) இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்து விடுதல், 2) இரத்தத்தில் சர்க்கரைச் சத்து அதிகமாகுதல், 3) கிட்டே அசிடோசிஸ் ஆகியவை ஆகும்.
    சர்க்கரை நோய் பற்றி பேசி கொண்டு இருந்தால் அதிகம் பேசலாம். இருப்பினும் நமக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சர்க்கரை நோயும் மூலிகையும். ஆகவே நாம் முதலில் மூலிகையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
        இன்றைய நவீன மருத்துவத்தில் பல உயிர் காக்கும் மருந்துகள் மூலிகையின் அடிப்படையில் உறுவானது என்பது பலருக்குத் தெரியாது என்பது ஒரு வேதனையான நிகழ்வாகும். உலக சுகாதார அமைப்பின் டிபுனல் மெடிசன் என்ற அமைப்பு மற்றும் வெளி நாட்டு மருத்துவ அமைப்புகள் உலகில் பாரம்பரியமாக உபயோகப்படுத்தும் மூலிகைகளை ஆய்வு செய்து அதில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்து ஆய்வு செய்து மருந்தாக வெளி வருகிறது.
        பொதுவாக நவீன மருத்துவத்தின் அடிப்படை மூலக்கூறு எங்கிருந்து வந்தது எவ்வாறு உருவாக்கப்பட்டது போன்ற பல கேள்விகளுக்கு முறையான பதில் கிடைப்பது சற்றுக் கடினமே. உலக  மூலிகைகளை ஆய்வு செய்து அதன் முடிவானக் கருத்துக்களை வெளி நாட்டினர் வைத்துள்ளனர். ஆகவே மூலிகைகள் நிச்சயமாக நோய்களுக்கு அதிக பக்கவிளைவின்றி செயல்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மூலிகைகள்
ஆராக்கீரை
          மனநிலைச் சார்ந்த சர்க்கரை நோயைப் பற்றி பார்ப்போம். பொதுவாக பல புது சர்க்கரை நோயாளிகளை விசாரிக்கும் போது பலர் தற்சமயம் தான் இரத்தத்திலும், நீரிலும் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. ஆனால் இந்த மூன்று மாதத்திற்குள் எவ்வாறு நீரிழிவு நோய் உறுவானது என்ற வினாவை எழுப்புவர். அவர்களை தீவிரமாக விசாரித்தால் அவர்களுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் மன சோர்வையும், மன அழுத்தத்தையும் உருவாக்கின ஒரு நிகழ்வால் மனச் சுமையுடன் இருந்து இருப்பர். இத்தகைய மன அழுத்தம் உடம்பில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் கார்ட்டிசேன் என்ற என்செம் அதிகம் சுரப்பதால் இன்சுலின் உடம்பிற்கு தேவையான அளவு சுரந்தாலும் உடல் அதனை உபயோகப்படுத்தாததால் இரத்தத்தில் சர்க்கரை சத்து கூடுகிறது. இதை (IIIiInsulin Resistence)  என்பர். இப்படிப்பட்டவர்கள் கவலையை விட்டு வெளியே வாருங்கள். மன அழுத்தத்தைக் குறைத்து மன நிம்மதியைப் பெற நினையுங்கள். இதற்க்கு எல்லாம் எனக்கு வேண்டும் என்ற பேராசையை முதலில் ஒழிக்கவேண்டும்.
                      சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதிலும்,மன நிலையை சீற்படுத்துவதிலும் ஒரு சிறந்த மூலிகை ஆராக்கீரையாகும். இக்கீரை நீரில் வளரும் ஒரு சிறு பூண்டாகும். இது நெல் மற்றும் தண்ணீர் உள்ள இடங்களில் 4 இலைகளுடன் மேலே மிதக்கும். இப்பொழுது சந்தைகளிலும் கிடைக்கிறது. இந்த மூலிகை ஆயூர்வேதத்தில் மனநிலைத்தாக்கம் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். இதைப் பற்றி உலகில் எங்கும் பல ஆய்வுகளுக்கு உட்பட்டு இருக்கிறது. பனாரஸ் பல்கலைகழகத்தில் நீரே பார்மகாலேஜ் ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் இது மன அழுத்தத்தை குறைப்பதில் ஒரு சிறந்த மூலிகை என்று கண்டறிந்து உள்ளனர். தைவாரி என்பவர் மன அழுத்தத்தைப் பற்றிய ஆய்வு அறிக்கையில் ஆராகீரையுடைய சபாம் என்ற மூலக்கூறு சிறப்பாக வேளை செய்கிறது என்று கூறியுள்ளார். இதை வீட்டில் கீரையாக சமைத்து உண்பத வழக்கம். ஆராக்கீரையை காயவைத்து பொடிசெய்து காலையும், இரவும் உன்ன மன அழுத்தம் குறைந்து சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இந்த கீரை உண்ணும் பொழுது கருவுருவதைத் தடுக்கும் குணம் உடையதாகும். குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பவர்களும், கருவுற்ற பெண்களும் இந்த மூலிகையை உண்பது நல்லதல்ல.

சிறு குறிஞ்சான்
               இது பற்றிப் படரும் ஒரு கோடி இனத்தைச் சார்ந்ததாகும். இதற்க்கு சர்க்கரை கொல்லி என்று பெயர். இந்த மூலிகையின் இலையை வாயில் இட்டு சுவைத்தால்  நாக்கில் உள்ள சுவை அரும்புகளை மதமதக்கச் செய்து விடும். பின்னர் சீனியை வாயில் போட்டு சுவைத்தாலும் சீனி இனிப்புத் தன்மையின்றி சுவையற்று இருக்கும். இதை சரி செய்ய வெற்றிலையை வாயில் போட்டு மென்ற பின்பு சுவை தெரிய ஆரம்பிக்கும். இந்த மூலிகை சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் உடலில் உள்ள வீக்கத்தை வற்ற வைப்பதில் ஒரு சிறந்த மூலிகையாகும். இதில் இருந்து பிரிக்கப்பட்ட கிளைகோசிட் ஆகிய ஜிம்னிக் ஆசிட் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைப் பெறும் அளவில் குறைக்கிறது. மேலும் இது மாவுச் சத்தை ஜீரணமாகி இரத்தத்தில்  சேர்ப்பதை தடுப்பதால் இது ஒரு சிறந்த சர்க்கரை நோய்க்கு உரிய மருந்தாக மட்டும் இல்லாமல் பருமனான உடலை மெலிய வைப்பதற்கு ஒரு சிறந்த மருந்தாகும். உலகெங்கிலும் தயாரிக்கப்படும் பருமனைக் குறைக்கும் மூலிகை மருந்தில் சிறு குறிஞ்சான் ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மூலிகைப் பற்றி உலகெங்கும் பல ஆய்வுகள் நடத்தி முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த மூலிகை உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது. 2005-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த மூலிகையை ஆய்வு செய்ததில் உடலில் சுண்ணாம்பு சத்தை அதிகமாக்குகிறது. மேலும் இந்த ஆய்வில் பீட்டாசெல் மற்றும் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்குகிறது. adrenaline harmone –ஐ சமநிலை செய்து கல்லீரலை சிறப்புற வேளை செய்ய வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இந்த மூலிகை முதல் வகை மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
             மேற்படி கிங்ஸ் மருத்துவ கல்லூரியில் 2010-ஆம் ஆண்டு செய்த ஆய்வில் இன்சுலின் இரத்தத்தில் கலந்து சிறப்பாக எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்வதில் பெறும் அளவில் உபயோகிக்கப்படுகிறது. இது இந்தியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் பெறும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதற்கு குர்மார் என்று பெயர். இதற்கு இனிப்பை கொல்லும் என்று அர்த்தமாம்.
1)      இது நமது உடலில் பாங்கிரியாசின் வேலையை அதிகப்படுத்துகிறது.
2)      இரத்த ஓட்டத்தை மிகப்படுத்தி சிறுநீர் மூலம் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுகிறது.
3)      வீக்கமுற்ற சுரபிகளின் வீக்கத்தை வற்ற வைக்கிறது.
4)      காய்ச்சலுக்கும், இருமலுக்கும் ஒரு சிறந்த மருந்தாகும்.
5)      உடல் பருமனை குறைக்கிறது.
உடல் பருமனுக்கு 200-மில்லி கிராம் 2-வேளை உணவுக்குப் பின் எடுக்கவேண்டும். சர்க்கரை நோயாளிகள் 2 முதல் 4 கிராம் வரை உணவுக்குப் பின் 2 வேலையாக பிரித்து உன்ன வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய, குறைய இதன் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மூலிகைக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த மூலிகை இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை குறைப்பதால் கண்டிப்பாக உணவிற்கு பின்தான் எடுக்கவேண்டும். 1ம் வகை நோயாளிகள் 400 மில்லி கிராம் வீதம் இருவேளை எடுத்தால் இன்சுலின் தேவையை குறைக்கிறது என்று 1990-ஆம் ஆண்டு செய்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெந்தயம்
இது கீரை வகையைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி ஆகும். நம் நாட்டில் வெந்தய கீரையை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடுவது பல இடங்களில் பழக்கமாகும். இதன் விதையை சமயல்களில் சேர்ப்பது நமது வழக்கமாகும். இதற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயம் மூட்டுவலிக்கு ஒரு சிறந்த மருந்தாகும். சீனாவில் இதை பெறும் அளவில் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இதை Hu Lu Ba என்று அழைப்பர். சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு வலி நிவாரணியாக இதை உபயோகப்படுத்துவர். இன்றும் நமது ஊர்களில் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை நீராகாரத்துடன் உண்ணும் பழக்கம் இருக்கிறது. வெந்தயம் உடலில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்கு உள்ள கனணச் சூடை போக்கும். வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்தை குறைக்கிறது. சர்க்கரை நோய்க்கு காரணமான உடல் பருமனை சீர் செய்கிறது. வெந்தயமத்தை 21- நாட்கள் நீரழிவு நோயாளிகளுக்கு கொடுத்ததில் வெறும் வயிற்றில் பார்க்கப்படும் சர்க்கரையின் அளவு குறைந்து நல்ல பலனை கொடுத்துள்ளது. மேலும் வெந்தயம் கல்லீரலையும், சிறுநீரகத்தையும் சீர்செய்து இரத்தத்தில் சர்க்கரைச் சத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. வெந்தயம் உலகளவில் கிரேக்க நாடுகள், அரபு நாடுகளில் பெறும் அளவில் உணவிற்காக பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் வெந்தய கீரையை டீயாக பயன்படுத்துகின்றனர். மேலும் வெந்தயம் பசியைத் தூண்டும் குணம் உடையது. தாய்ப்பால் இல்லாதவர்களுக்கு வெந்தயம் ஒரு நல்ல வரப்பிரசாதமாகும். மெலிந்து ஒல்லியாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வெந்தயம் கொடுத்தால் உடல் வைப்பதுடன் வனப்பான மார்பழகைப் பெறுவார்கள். வெந்தயம் இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதிலுள்ள அமினே ஆசிட் 4 hydroxyl sine என்ற மூலக்கூறு ஈரலில் உள்ள இனிப்புச் சத்தை குறைய வைத்து இன்சுலின் உபயோகத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் இன்சுலின் நிலைத்து நின்று சர்க்கரைச் சத்தை குறைக்கிறது. மேலும் Insulinemia என்ற இன்சுலின் குறைபாட்டை சீர் செய்கிறது என்று பல் ஆய்வுகள் கூறுகின்றன.

பாகற்காய்
பாகற்காய் பழங்காலத்தில் இருந்தே சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. பாகற்காயில் உள்ள விட்டர் குளுக்கோடைடு, மற்றும் மேமரோசின் போன்ற சில வேதியல் பொருள்கள் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1985 –ஆம் ஆண்டு எடின்புரோவில் உள்ள Foundation for Diabetes Research என்ற கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை 50 சதவீகிதத்திற்கு 5 மணி நேரத்தில் குறைப்பதாக ஆய்வு செய்துள்ளனர். 1986- ஆம் வருடம் Ethnopharmacology  என்ற ஆய்வு இதழில் 73 சதவிகித சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் உ;ல்ல சர்க்கரையை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயால் கண்ணில் வரும் கேட்ராக் நோய் வருவதைத் தாமதப்படுத்தும் குணம் பாகற்காய்க்கு உண்டு என்று 1988-ஆம் ஆண்டு Department of Biochemistry Asarba உறுப்பினர்கள் ஆய்வு   செய்து 2002-ஆம் வரோம் அந்த ஆய்வை நிலை நிறுத்தினர். பாகற்காய் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைக் குறைத்து உடலை பலவீனப் படுத்துவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாகற்காய்  பற்றி உலகளவில் பல ஆய்வு அறிக்கையின் படி பாகற்காய்:
1)      உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது.
2)      உடலில் ல்ல தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
3)      புரதச் சத்தை உடம்பிற்கு உகந்ததாக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
4)      பசியைத் தூண்டுகிறது.
5)      புற்று நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உறுவாக்குகிறது.
6)      உடலுக்கு தீமை செய்யும் நோய் கிருமிகளை அழிக்கும் குணம் வாய்ந்தது.
7)      சர்க்கரை சத்தை உடம்பில் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் சிறப்பாக செயல்படுகிறது.
8)      இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும்.
9)      இதன் விதையில் Polypeptide என்ற மூலக்கூறு P-Insulin என்ற மாற்று இன்சுலினை சார்ந்ததாக உள்ளது.
10)   இதிலுள்ள MAP-30 என்ற வேதியல் பொருள் மார்பக புற்று நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். இது எய்ட்ஸ் நோயின் தாக்கத்தையும் குறைக்கும்.
காய்ந்த பாகற்காயை காலை, மதியம், இரவு 500 மில்லி கிராமில் இருந்து 1கிராம் வரை உபயோகிக்கலாம். பாகற்காய் குழந்தைபேற்றைத் தடுக்கும் குணம் வாய்ந்தது. சீனர்கள் இதன் சாற்றை கருச்சிதைவுக்கு பயன்படுத்துவர். குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பவர்களும், கருவுற்ற பெண்களும் பாகற்காயை உணவாக எடுப்பது சிறப்பல்ல. மேலும் இதிலுள்ள வேதியல் பொருட்கள் தாய்ப்பாலில் கலக்கும் தன்மை உடையதால் தாய்பால் கொடுப்பவர்கள் இதைத் தவிர்க்கலாம்.
              பாகற்காய் ஒரு கோடி இனத்தைச் சார்ந்ததாகும். பாகற்காய் எல்லோருக்கும் தெரிந்த ஒரு காய் ஆகும். தமிழகத்தில் பலரால் விரும்பப்படும் ஒரு காயாகும். இதில் மிது பாவை என்ற சிறு இனமும், கொம்பம் பாவை என்ற பெரிய வகையும் உண்டு. பொதுவாக மிது பாவை என்ற சிறு பாகற்காய் தான் பெறும் அளவில் மக்களால் விரும்ப்படுகிறது. பாகற்காய் சாறு ஒரு பங்கும் பசும்பால் ஒரு பங்கும் சேர்த்து 40 நாள் குடித்தால் உடம்பு நல்ல திட்டமாகும். அதாவது இதை கற்பம் என்பர்.

Dr.R.S.Purusotham, 

செல்: 9842425780










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக