நலமான வாழ்க்கைக்கு பொருளாதாரம்-
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை என்பர். ஆம் பொருளாதாரம் இன்றைய உலகுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. பள்ளி கற்கும் இளமையும், முதுமையும் ஒருவரைச் சார்ந்து வாழ வேண்டிய காலமாகும். இவைகளை மனதில் கொண்டு பொருளாதாரத்தை திட்டமிடவேண்டும். குழந்தை பிறந்ததில் இருந்து கல்வி கற்று முடியும் வரை பெற்றோரைச் சார்ந்த வாழ்கையை நடத்த வேண்டியது உள்ளது. ஆகவே பெற்றோர்களாகிய நாம் குழந்தையின் வளர்ப்பு, கல்வி ஆகிய செலவுகளுக்கு திட்டமிடப்பட வேண்டியது உள்ளது. இன்று கல்வி வியாபாரமாக ஆக்கப்பட்டதால் நாம் நமது குழந்தைகளுக்கு வளர்ப்புக்கு எனவும், கல்விக்கு எனவும் பொருளாதாரத்தை உயர்த்த திட்டமிடப்பட வேண்டியது உள்ளது.
இப்பொழுது உள்ள நுகரும் பொருளாதாரம் நம்முள் பல மாற்றங்களை உருவாக்கி உள்ளது. கடனுக்கு பொருளை வாங்குங்கள், ஆடம்பரமாக வாழுங்கள் என்று எங்கும் கூவி அழைக்கும் நுகர்வோர் பொருளாதாரம். நமது உலகத்தையே சீரழித்துக் கொண்டு இருக்கின்றது. இயற்கை வளங்களை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்லாமல் எல்லாவற்றையும் சுயநலத்துடன் அழித்து வருகிறோம். ஆகவே ஒரு பொருளை வாங்கும் முன் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து வாங்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் நமது வருமானத்தின் சக்திக்கு உட்பட்டு செயல் படுத்தவேண்டும். திருமணம் போன்ற நிகழ்வுகளில் செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். நாம் நமக்காக வாழும் வாழ்கையை நடத்த வேண்டும். பிறருக்காக ஆடம்பரமான காரியங்களைச் செய்து வறுமைக்கு உட்பட்டுவிடக் கூடாது. நம்முடைய குழந்தைகளின் கல்விக்கு என்றும், நம்முடைய முதுமைக்கு என்றும் எதிர்பாராத மருந்துச் செலவுக்கு என்றும் திட்டமிட்டு சேமிக்க பழக வேண்டும். முதுமையில் பொருள் ஈட்டுவது என்பது கடினமானச் செயல்.
நாம் சேமிக்கும் பணத்தை சரியான முதலீடுகளில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானதாகும். சூதாட்ட பொருளாதார சந்தைகளில் அதிக அனுபவம் இருந்தால் முதலீடு செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பொருளாதாரத்தை உயர்த்துவதில் நேர்மையாக இருந்து கொள்ளுங்கள். நெறியற்ற முறையில் பெற்ற செல்வம் அழிவையே கொடுக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் திட்டமிட்டு வரவு செலவுகளை செய்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையமுடியும். வரவு செலவுகளை கணக்கீடு செய்து எழுதி வந்தால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கமுடியும். எந்த ஒரு காரியத்தையும் செய்யும்முன் தேவைதானா என்று திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.

இந்த யுகத்தில் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆகவே பொருளாதாரத்தை உயர்த்துவதில் கண்ணும் கருத்துமாகவும், நேர்மையாகச் செயல்படுத்தவும். பையில் இருக்கும் பணத்துக்காக உங்களில் இருக்கும் நல்ல உணர்வுகளை விலை பேசாதீர்கள். ஒரு மனிதன் பொருளாதாரத்தால் மட்டும் வாழவில்லை. பொருளாதாரம் தேவைதான். நாம் முதுமைக்காக திட்டமிடும் பொழுது நமது வாழ்க்கை துணையையும் கருத்தில் கொள்ளவேண்டும். இதனால் அவர்கள் வாழ்வும் சிதைவு அடையாதபடி காத்துக் கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக