சிறுநீரகக் கற்கள் .
இடுப்புக்கு மேல் முதுகுத் தண்டில் இருபுறமும் சிறு நீரகங்கள் உள்ளன. பொதுவாக இவை நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலம் ஒரு அங்குல பருமனும் கொண்டதாக இருக்கும். சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் தேவையற்றப் பொருள்களை வெளியேற்றுகிறது. உலகில் இப்பொழுது பெரும் அளவில் மக்கள் சிறுநீரக்கல் நோயால் அவதிப்படுகின்றனர். சிறுநீரகத்தில் சில வேதியல் பொருள்கள் படிகம் ஆகி கல்லாக மாறுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள கால்சியம், மங்கினிசியம், பாஸ்பைட்டு, யூரிக்காசிடு போன்ற மூலக்கூறுகள் கற்களாக மாறுகின்றன. கால்சியம் சத்தை உடம்பு முறையாக உபயோகப்படுத்தாவிட்டாலும் அல்லது கால்சியம் உடம்பில் அதிகம் இருந்தாலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சில மருந்துகளும் சிறுநீரகத்தில் கற்களாக உருவாகின்றன. சிறுநீரக கற்கள் அறிகுறிகள் இனி பார்ப்போம்.
சிறுநீரகக் கற்கள் வந்தால் நீர்க் கடுப்பு அதிகமாக இருக்கும். இந்த வலி இடுப்பில் இருந்து ஆரம்பித்து பிறப்பு உறுப்பு வரைச் செல்லும். சிலருக்கு அந்த வலி வயிற்றில் இருந்து பிறப்பு உறுப்பு வரைச் வலி இருக்கும். வலி அதிக அளவில் இருக்கும். வலியின் காரணமாக வியர்வை வாந்தி, உடல் சில்லிடுதல் போன்றவைகள் இருக்கும். சிறு நீர் அடிக்கடி கழிப்பதற்கான உணர்வு ஏற்படும். சில சமயங்களில் இரத்தத்துடன் சிறுநீர் பிரியலாம். பொதுவாக சிறுநீரில் கல் உள்ளவர்கள் அதிக நீர் அருந்த வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள் பருப்பு மற்றும் விதைகள் தினமும் சேர்க்க வேண்டும். கொழுப்புச் சத்தான பொருள்கள், உப்பு, இனிப்பு, மற்றும் இறைச்சி வகைகள், பொறிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுகளைக் குறைக்க வேண்டும். ஆப்பிள், எலுமிச்சை, தர்பூசினி மற்றும் பழச்சாறுகள், வாழைத்தண்டு, வெள்ளைப் பூசணிக்காய், சவ்சவ், புடலங்காய் சுரைக்காய் போன்ற நீர்ச்சத்தான காய்கறிகளை அதிகம் சேர்த்தால் சிறுநீரகக் கற்கள் வராது.
வாழைதண்டுச் சாறு, முள்ளங்கிக் கிழங்கின் சாறு சிறுநீரகக்கற்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும். சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் சிறுபிளை வேர் சிறந்ததாகும்.
சிறுபிளை
சிறுபிளை என்பது பொங்கல் காலத்தில் வீட்டின் முன் கட்டி வைக்கும் பொங்கல் பூச்செடியாகும். இது பொதுவாக சமவெளிகளிலும், காடுகளிலும், வளரும் ஒரு சிறு செடியாகும். இதன் வேர் சிறிது கற்பூர வாசத்தைப் போல் இருக்கும். இதன் பூக்கள் இலையின் முடிவில் வெண்மையாக சிறிதாகப் பூத்திருக்கும். இதன் வேர் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி. சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை உடையது, மேலும் கல்லடைப்பு, நீர் எரிச்சல், நீர் அடைப்பு, போன்றவைகளுக்கு சிறந்ததாகும்.
இதன் வேரை ஒன்றிரண்டாக பொடி செய்து கசாயம் செய்து காலையும், இரவும் குடிக்க சிறு நீரகக் கற்கள் வெளியேறும். இந்த மூலிகைப்பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகள் மூலம் சிறுநீரக கற்களைக் கரைக்கவும் மேக நோயை குணமாக்குவதில் ஒரு சிறந்த மூலிகை என்று கண்டுப்பிடித்துள்ளனர்.
மாவலிங்கப் பட்டை
சிறுநீரகக் கற்களுக்கு அடுத்து சிறந்த மூலிகை மாவலிங்கப்பட்டை ஆகும். இது ஒரு மரமாகும். இது இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. இதன் பூக்கள் சிலந்திப்பூச்சியின் கூட்டைப்போல் இருப்பதால் இதற்கு சிலந்திமரம் என்ற பெயரும் உண்டு. இந்த மரம் இந்தியா, இலங்கை, மயாமி போன்ற நாடுகளில் பெரும் அளவில் காணப்படுகிறது. இதன் பட்டை மருத்துவத்திற்கு பெரும் அளவில் உபயோகப்படுகிறது.
இதன் பட்டை வாதவலிக்கும், காய்சலுக்கும், சிறுநீரகக் கற்களுக்கும் பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி, உடலில் உள்ள வீக்கத்தை வற்ற வைப்பதுடன் உடலில் ஏற்படும் வாத வலியையும் போக்குவதாகும். இந்த மூலிகை பல வருடங்களாக சிறுநீரகக் கற்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையின் பட்டையை கசாயம் வைத்து குடித்தவுடன் வலியுடன் உள்ள சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியே வர ஆரம்பித்து விடும். வலியும் உடனே குறைந்துவிடும். மேலும் இந்த மூலிகை ஒரு சிறந்த மலம் இளக்கி. வயிற்றில் உள்ள புழுக்களையும் வெளியேற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக