உடல் ஆரோக்கியம் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மன ஆரோக்கியமும் தேவையானதாகும். மனதின் தன்மைகள் யாவன :- ஒரு காரியத்தை கிரகித்தல், அந்த காரியத்தின் காரணங்களை ஆய்வு செய்தல், ஒரு காரியத்தை யோசித்தல், அதை மனதில் நிறுத்தி வைத்தல், ஒரு காரியத்தை சார்ந்து உணர்ச்சிவசப்படுதல், ஒரு காரியத்தின் மீது கருத்துன்றல் ஆகியவை மனதாகிய மூளையின் வேலையாகும்.
மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய தத்துவங்கள் மனதை பிரம்மம் ஆகிய உயர் நெறியில் வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாது மனதை பிரமையாகிய உணர்வுகளில் வைத்தால் சித்த பிரம்மையாகும் என்று கூறுவர். மனதின் அற்புத ஆற்றலில் ஒன்று ஞாபக சக்தியாகும். பொதுவாக மனித மூளையில் 100 பில்லியன் நீயூரான்ஸ் உள்ளது என்று கூறுகின்றனர். மன ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை உருவாக்குவதற்கும் தியானம் ஒரு நல்ல பயிற்சியாகும். பொதுவாக தியானம் செய்கிறவர்கள் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
ஞாபக சக்தியை மூன்று விதமாக பிரிக்கின்றனர்.
1) உணர்வு சார்ந்த ஞாபக சக்தி,
2) குறைந்த நாள் கொண்ட ஞாபக சக்தி,
3) நெடுநாள் கொண்ட ஞாபக சக்தி என்று பிரித்துள்ளனர்.
ஞாபக சக்திக்கு என்று ஆங்கில மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் இல்லை என்பது உண்மை.
நீர் பிரம்மி
ஞாபக சக்தியைக்கு சிறந்த மருந்து நீர் பிரம்மி ஆகும். இது இந்தியாவில் நீர்க்கரைகளில் அதிகம் வளரும் ஒரு குறுஞ்செடியாகும். தமிழ் நாட்டிலும் இந்த மூலிகை பெரும் அளவில் கிடைக்கிறது. இதன் இலைகள் நீர்ச்சத்துடன் தடியாக சிறிய நீளவட்டவடிவில் இருக்கும். இதன்பூக்கள் சிறிதாக வெண்மை நிறத்தில் நான்கு அல்லது ஐந்து இதழ்களுடன் இருக்கும்.
இது தமிழ் நாட்டில் பெரும் அளவில் ஆற்று ஓரங்களில் வளர்ந்து இருக்கும். இந்த மூலிகையை காக்கா வலிப்புக்கும், ஆஸ்துமாவுக்கும் பெரும் அளவில் இந்திய மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூலிகையைப் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மூலிகையைப் பற்றி லக்னோவில் உள்ள இந்திய ஆய்வுக் கழகம் ஆய்வு செய்து இந்த மூலிகை ஞாபக சக்தியை அதிகமாக்குகிறது என்று கூறுகின்றனர். மேலும் இந்த மூலிகையில் உள்ள Bacopaside என்ற மூலப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூலக்கூறை வைத்து ஆய்வு செய்ததில் இது மந்த நிலையில் இருப்பவரின் ஞாபக சக்தியை கூட்டுகிறது.
மேலும் ஞாபக சக்தியை உருவாக்குவதற்கு வசதி செய்து கொடுக்கிறது. அதிக நாள் ஞாபக சக்தியை நிலைத்திருக்கச் செய்கிறது. பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியின் ஆய்வாளர் C.P.Dupe என்பவர் ஞாபக சக்தி மற்றும் ஞாபக சக்தி சார்ந்த காரியங்களுக்கு இது ஒரு ஆச்சரியப்படத்தக்க மருந்து என்று கூறுகிறார். ஞாபக சக்தியின்மை மற்றும் படிப்பின் மீது கவனம் இன்மை ஆகியவற்றை போக்கும் ஒரு அற்புத மருந்தாகக் கூறுகின்றார்.
மேலும் பிரம்மி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உறுவாக்கும் இன்னோ குளோபினை அதிகப்படுத்துகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டு அறிந்துள்ளனர். இந்த மூலிகை நீர்ச்சத்து உடையதால் ஓரளவு காயும் வரை வெயிலில் போட்டு சிறிது காய்ந்த பின் நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, இரவு சாப்பிட்டு வந்தால் நல்ல மன ஆரோக்கியம் கிடைக்கும். இந்த மூலிகையின் சிறப்பை அறிந்த ஆயுர் வேதம் கல்வியின் கடவுளாகிய சரஸ்வதியின் பெயரை இந்த மூலிகைக்கு சூட்டியுள்ளனர். மன ஆரோக்கியத்தை குறைப்பது தன்னம்பிக்கையின்மையால் வரும் பய உணர்வு ஆகும்.
Dr.R.S.Purusotham,
24th 4th Cross Street,
Santhi Nager,
Palayamkottai-627002,
செல்: 9842425780
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக