JavaScript


நோய் எதிர்ப்பு இன்மையும், மூலிகையும்   .........

     நோய் எதிர்ப்பு தன்மை என்பது உடல் சார்ந்த ஒரு நிகழ்வு ஆகும். நோய் எதிர்ப்பு என்பது நோய்க்கு காரணமான கிருமிகளை அழித்து நோய் வராது காத்தல். நோய் வந்தபின் நோய்க்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி நோயின் தீமைகளில் இருந்து காத்தல் ஆகியவை ஆகும். ஒருவருக்கு நோய் எதிர்ப்பின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. நீர், காற்று, நிலம் ஆகியவைகள் நச்சு ரசாயணங்களால் மாசுப்பட்டுள்ளது. ஏன் நமது சுற்றுப்புற சூழ்நிலைகளில் கூட கதிர்வீச்சுகள் போன்ற காரணங்களாலும் மாசுபட்டுள்ளது. நமது பூமியின் சுற்றுப்புற சுழல் மட்டும் மாசு அடையவில்லை, நாமும் “தான் என்ற சுயநலத்தின் அடிப்படையில் மாசுப்பட்டுள்ளோம்.
     அதனால்தான் நமது  சுற்றுப்புற சூழ்நிலையையும் மாசுபாடுத்தியுள்ளோம். மருத்துவம் பல அறிய சாதனைகள் புரிந்து உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மனிதனின் சராசரி வாழும் வயது உயர்ந்துள்ளது. ஆனால் ஆரோக்கியமான ஒரு வாழ்வை எதிர் நோக்கி உள்ளோமா? என்பது கேள்விகுறி தான். ஏன் நமது உடலும் கூட மாசுப்பட்டுள்ளது. அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அற்ற ஒரு சமுதாயம் உருவாகி உள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
           பொத்தி பொத்தி பாதுகாப்பாக வளர்க்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி வாழுகின்றன. இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு நோய்க்கான காரணம்  ஒரு பையில் போடபடுகிறது. என்னுடைய கடந்தகால வாழ்க்கையை யோசித்தால் எப்பொழுதாவது காய்ச்சல் வரும். சிறுசிறு உபாதைகள் வரும். இரண்டு நாட்கள் மருந்து சாப்பிட்டால் சுகமாகி விடும். ஆனால் இப்பொழுது நோய் எதிர்ப்பு அற்ற ஒரு சமுதாய அமைப்பு உருவாகி உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.   
     நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவுக்கு காரணங்களைப் பேச வேண்டும் என்றால் நேரம் போதாது. நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு உருவாக்கலாம் என்று இனி பார்ப்போம். உணவு முறையில் கிருமினல் உணவாகிய அசைவ உணவில் மீன் ஒரு நல்ல எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவாகும். மீனில் விட்டமீன்கள் A,D மற்றும் ஓமேகாதிரி போன்ற மூலக்கூறுகள் உள்ளன. சிவில் உணவாகிய சைவ உணவில் கீரைவகைகள், காய்கறிகள், பருப்புவைகைகள் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவை.
     முருங்கைக் கீரையில் எல்லாவித விட்டமீன்கள், தாது உப்புக்கள் தேவையான அமினோ ஆசிடுகள் அதிகம் உள்ளன. இந்த கீரையை குழந்தைகளுக்கு சூப்பாகவோ, கீரையாகவோ கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் கூடிய குழந்தையாக வளரும்.
     நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் ஒரு மூலிகையை இப்பொழுது பார்ப்போம். சீந்தில் என்ற குடிச்சி நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஒரு சிறந்த மூலிகையாகும். சீந்தில் உடலில் நோய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை மிகப்படுத்துகிறது. சீந்தில் சிறுநீரகத்தை பலபடுத்தி சீராக வேலை செய்ய வைத்து உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது. சீந்தில் தோட்டத்தின் வேலிகளிலும், காட்டிலும் வளரக்கூடிய ஒரு மூலிகையாகும். இது கொடியாக வளரும் தன்மை உடையது. இதன் கொடியும் வெறும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
                                            
                                              
                                                       
  

Dr R.S.Purusotham 
Cell No- 9842425780

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக