JavaScript

நோயும் மூலிகையும்
                                                                  ...........................
மனிதனுக்கு கடவுளால் நோய்க்கு அருளப்பட்டவைகளே மூலிகைகள். எந்த ஒரு காரியத்திற்கும் தீர்வு இல்லை என்ற நிலைக கிடையாது. இன்று நவீன மருத்துவத்தின் ஆதிக்கம் இத்தகைய இயற்கை மருத்துவத்தை பின் தள்ளி விட்டது. அம்மையை ஒழித்துவிட்டோம், போலியோவை அழித்துவிட்டோம், காலராவை குறைத்துவிட்டோம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் எய்ட்சை உருவாக்கி விட்டோம். பறவைக் காய்ச்சலை உலகில் எங்கும் பரவவிட்டோம், பன்றிக் காய்ச்சலுக்கு தீர்வு இல்லாமல் முழித்துக் கொண்டு இருக்கிறோம். எப்படியோ இந்த உலகம் சமநிலையை காக்கிறது. எப்படி இருப்பினும் வெளி நாட்டு மருத்துவத்தில் ஒரு மருந்து மூலக்கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அந்த மருந்தின் அடிப்படை மூலக்கூறு எதைச் சார்ந்தது, அதன் பக்கவிளைவுகள் என்ன என்பதைப் பற்றி முடிவாக யாராலும் கூறமுடியாது. நாம் இப்பொழுது நோயற்ற சமுதாயத்தை உருவாக்கி உள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் என்னைக் கேட்டால் 

நோய் எதிர்ப்பு அற்ற ஆரோக்கியம் இல்லாத சமுதாயத்தைத் தான் உருவாக்கி உள்ளோம்.
              
இந்தியாவில் 18 சதவிகிதமக்கள் மருத்துவத்தால் வறுமை யாக்கப்பட்டுள்ளார்கள் 

என்ற ஒரு கணக்கு கூறுகின்றது. கஸ்டத்தையும், நஷ்டத்தையும் பணம் ஆக்கும் தொழில் வைத்தியமும், சட்டமும் ஆகும். ஆனால் இந்த இரண்டு தொழில்களிலும் நேர்மையானவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. எனவே வரும்முன் காப்போம் என்ற கூற்றிற்கு ஏற்ப இயற்கை மருத்துவம், தியானம், யோகா அப்பியாசம், ஆகியவைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.
        இந்த நவீன மருத்துவத்தின் பல மருந்துகள் மூலிகையில் இருந்து உருவாக்கப்பட்டது என்பது சிலருக்குத்தான் தெரியவரும். எப்படி இருப்பினும் நாங்கள் ஒரு வியாதியின் காரணம் அதற்கான மூலிகைகள் போன்றவற்றை சிறப்பாக கொடுத்துள்ளோம்.
தன்னம்பிக்கையுடன் இருங்கள். 
வாழ்க வளமுடன் வளமான வாழ்வைப் பெற நலமானதைச் செய்யுங்கள்.

                   Dr.R.S.Purusotham, 
                     செல்: 9842425780

இரத்த கொதிப்பு
            ......................
           இதை உயர் இரத்த அழுத்த நோய் என்றும் கூறுவர். இது இரத்த அழுத்தம் அதிகரித்து உறுவாகுவதாகும், இதனால் இருதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இரத்த அழுத்தம் இரண்டு வகையான அளவீடுகளுடன் கூடியது. சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் என்பது இருதயம் சுருங்கும் பொழுது ஏற்படும் அழுத்தமாகும். மற்றொன்று டயஸ்டாலிக். இது இருதயம் விரிந்து கொடுக்கும் பொழுது உருவாகும் இரத்த அழுத்தம் ஆகும்.
பொதுவாக இரத்த அழுத்தம் 120/80mm மெர்க்குறியாக இருக்கவேண்டும். அதிக இரத்த அழுத்தம் என்பது 140/90-க்கு மேல் இருப்பதாகும். வயது முதுமையானவர்களுக்கு சிறிது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இரத்த அழுத்தத்தை இரண்டு வகையாக பிரிக்கின்றனர்.
1) Essential (உயர் இரத்த அழுத்தம்) 
2) Secondary இரத்த உயர் அழுத்தம். இவற்றில் 90 to 95 சதவிகிதம் முதல்வகை இரத்தக் கொதிப்புக்கு தெளிவான மருத்துவ காரணம் அறிய முடிவதில்லை. மீதமுள்ள 5 to 10  சதவிகிதம் உள்ளவர்கள் 2-ஆம் நிலை இரத்தக் கொதிப்பு சார்ந்தவர் ஆவார். இந்த வகை இரத்தக்கொதிப்பு சிறுநீரகக் கோளாறுகள், இரத்தத்தை எடுத்து செல்லும் தமநிகளின் பாதிப்பு மற்றும் இருதய நோய்களால் வரும் பாதிப்பால் உருவாகிறது. 
அறிகுறிகள்
பின்தலைப் பகுதியில் தலைவலி, தலைச்சுற்றல், நடுக்கம், மந்தம், வெளிறிப் போதல்பலவீனம், அரைத்தூக்கம்குழப்பம்மங்கலான பார்வை, எடை இழப்புகுமட்டல் மற்றும் வாந்தி, நோய்த்தாக்குதல்எரிச்சல்தன்மை, வேகமான இதயத் துடிப்பு,  சுவாசித்தலில் தடை, மூக்கில் இரத்தம் வடிதல், மற்றும் முகக் கோணல் ஆகியவைகள் உருவாகின்றன.

தடுப்பு முறை- 
ஆங்கிலத்தில் இரத்தக்கொதிப்பிற்கு கைப்பர்டென்சன் என்று கூறுவர். கைப்பர் என்றால் அதிகமாக டென்சன் என்றால் உணர்ச்சி வசப்படுவதாகும்.  அதிக உணர்ச்சி வசப்படுவதால் இந்த நோய் வருகிறது. அதிக உணர்ச்சி வசப்படாமல் அமைதியான வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது இரத்தக் கொதிப்பு குறைகிறது. ஆகவே இரத்தக் கொதிப்பிற்கு தியானம் ஒரு சிறந்த மருந்தாகும். அமைதியைத் தேடி ஆண்டவனைக் கும்பிடும்போது எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக கடவுளைக் கும்பிடுவதே ஒரு சிறந்த வழியாகும். 
1) உணவு முறைகளிலும் இரத்தத்தின் அடர்த்தியைக் கூட்டும் உப்பு, கொழுப்புப் பொருள்கள் குறைத்தால் இரத்தக் அழுத்தம் குறையும். இது 33 சதவிகித மக்களிடத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது       
2)  எடை குறைப்பு 
3) தொடர்ச்சியான உடற்பயிற்சி, நடைப் பயிற்சி,  இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
4)  உணவில் சர்க்கரை உள்ளெடுப்பைக் குறைப்பது  இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
5) புகையிலைப் பயன்படுத்துவது மற்றும் ஆல்கஹால் நுகர்வை   நிறுத்துவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகள்-
      1)      இதயச் செயலிழப்பு
      2)      பக்கவாதம்
      3)    மாரடைப்பு
      4)     உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் இதய செயலிழப்பு
      5)  இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளுடைய மையோகார்டியம்
     (தசை) கெட்டிப்படுதல்
     6)    விழித்திரை சேதம்
     7)    நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு
  8) உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஏற்படும் குழப்பம்தலைவலிவலிப்பு.
இத்தகைய இரத்தக் கொதிப்புக்கு சிறந்த மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.
மருதமரம்:- இது சுமார் 25-மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பெரிய மரமாகும். இதன் பட்டை இருதய நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. இந்த மரத்திற்கு அர்ஜுனன் இதய பலம் வாய்ந்த ஒரு வீரன். ஆகவே மருதமரத்திற்கு அர்ஜுன மரம் என்று கூறுகின்றனர். இந்த மரத்தின் பட்டை பல நாடுகளில் பற்பல ஆய்வுகளுக்கு உட்பட்டது.  
அர்ஜுனா பட்டை  கொழுப்பையும், உடம்பில் உள்ள நச்சுப் பொருள்களையும் வெளியேற்றுவதால் இரத்தத்தின் அடர்த்தி குறைகிறது. இதனால் இருதயம் அதிக அழுத்தம் கொடுத்து இரத்த ஓட்டத்தைச் செயல்படுத்த தேவையில்லாமல் போகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. மேலும் அர்ஜுன பட்டை இருதய கிளர்ச்சியுட்டியாகவும் இதய தசையை வலிமையூட்டுவதாகவும் அமைகிறது. இதனால் இருதய செயல்பாடு சிறப்புறுகிறது. மேலும் அர்ஜுன பட்டை ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாகும். இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனை தொடர்ந்து 60-நாள் உபயோகித்தால் கொழுப்பு பொருள் 64-சதவிகிதம் குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இது இருதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த வரபிரசாதமாகும். அர்ஜுன பட்டை மாரடைப்பில் இருந்து காக்கிறது. அர்ஜுன பட்டையில் சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் விட்டமீன்கள் பல குளுக்கோசைடுகள் உள்ளன. இவைகள் இருதயத்தைநன்றாக பராமரித்து இதயச் செயல்பாடைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது.
     அடுத்து இருதயத்திற்கு சிறந்த மருந்து பூண்டு ஆகும். பூண்டில் பல வகை இருக்கலாம். நமது உபயோகத்தில் நாட்டு பூண்டு, வடைபூண்டு என்ற இருவகை உபயோகப்படுத்தப்படுகிறது. உலகெங்கும் பூண்டு சமையலுக்கும், மருத்துவத்திற்கும் பெரிய அளவில்  உபயோகப்படுத்தப்படுகிறது. உலக உற்பத்தியிலும், உபயோகப்படுத்துவதிலும் சீனா முதல் இடமும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. வெளி நாடுகளிலும் பூண்டு பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக பூண்டுக்கு ஒரு விரும்பத்தகாத நாற்றம் உண்டு. இஸ்லாமிய வரலாற்றிலும் பூண்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஐரோப்பிய கலாச்சாரத்திலும் உணவில் பூண்டுக்கு தனி மதிப்பு  உண்டு. பூண்டுக்கு  பேய், பிசாசு, இரத்தக்காட்டேரி போன்றவைகள் பயந்து ஒதுங்கும் ஒதுங்கும் என்ற எண்ணம் உண்டு.
           ஆகவே அவர்கள் பூண்டை வீட்டு வாசல் முன் கோர்த்து தொங்க விடுவது வழக்கம். தீய சக்திகள் வீட்டில் வராமல் இருக்க பூண்டை நசுக்கி அதன் சாற்றை புகைகூண்டு, ஜன்னல்கள் ஆகியவற்றில் தடவும் பழக்கம் இப்பொழுதும் உண்டு. 415 இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களிடம் பூண்டின் பொடியைக் கொடுத்து சோதித்ததில் எல்லோருக்கும் இரத்த அழுத்தம் பெரிய அளவில் குறைந்ததை ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. 1994-ஆம் ஆண்டு ஆய்வு செய்ததில் பூண்டு இரத்தத்தில் உள்ள கொழுப்புப் பொருள்களை பெரிய அளவில் குறைத்து இருதயத்திற்கு பலம் சேர்ப்பதுடன் இரத்த அழுத்தத்தை பெரிய அளவில் குறைக்கிறது.
           மேலும் பல ஆய்வுகளில் பூண்டு உடல் பருமனை குறைக்கிறது என்று ஆய்வு செய்துள்ளனர். இரத்த நாளங்களை விரித்துக் கொடுப்பதுடன் இரத்த நாளங்களைப் பலமடையச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. மேலும் பூண்டு நோய்க்கிருமிகளை பென்சிலீன் மருந்தைப் போல் அழிக்கிறது. உலகப் போர்களில் காயம் அடைந்தவர்களுக்கு ரஸ்சிய பூண்டை பெரும் அளவில் உபயோகித்ததால் பூன்டிற்கு ரஸ்சிய பென்சிலீன் என்ற பெயர் உண்டு. 

ஏதேனும் தேவைக்கு அணுகவும்

Dr.R.S.Purusotham, 
செல்: 9842425780
சிறுநீரகக் கற்கள்                                .
இடுப்புக்கு மேல் முதுகுத் தண்டில் இருபுறமும் சிறு நீரகங்கள் உள்ளன. பொதுவாக இவை நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலம் ஒரு அங்குல பருமனும் கொண்டதாக இருக்கும். சிறுநீரகம் தான் உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் தேவையற்றப் பொருள்களை வெளியேற்றுகிறது. உலகில் இப்பொழுது பெரும் அளவில் மக்கள் சிறுநீரக்கல் நோயால்  அவதிப்படுகின்றனர். சிறுநீரகத்தில் சில வேதியல் பொருள்கள் படிகம் ஆகி கல்லாக மாறுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள கால்சியம், மங்கினிசியம், பாஸ்பைட்டு, யூரிக்காசிடு போன்ற மூலக்கூறுகள் கற்களாக மாறுகின்றன. கால்சியம் சத்தை உடம்பு முறையாக உபயோகப்படுத்தாவிட்டாலும் அல்லது கால்சியம் உடம்பில் அதிகம் இருந்தாலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சில மருந்துகளும் சிறுநீரகத்தில் கற்களாக உருவாகின்றன. சிறுநீரக கற்கள் அறிகுறிகள் இனி பார்ப்போம்.
     சிறுநீரகக் கற்கள் வந்தால் நீர்க் கடுப்பு அதிகமாக இருக்கும். இந்த வலி இடுப்பில் இருந்து ஆரம்பித்து பிறப்பு உறுப்பு வரைச் செல்லும். சிலருக்கு அந்த வலி வயிற்றில் இருந்து பிறப்பு உறுப்பு வரைச் வலி இருக்கும். வலி அதிக அளவில் இருக்கும். வலியின் காரணமாக வியர்வை வாந்தி, உடல் சில்லிடுதல் போன்றவைகள் இருக்கும். சிறு நீர் அடிக்கடி கழிப்பதற்கான உணர்வு ஏற்படும். சில சமயங்களில் இரத்தத்துடன் சிறுநீர் பிரியலாம். பொதுவாக சிறுநீரில் கல் உள்ளவர்கள் அதிக நீர் அருந்த வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள் பருப்பு மற்றும் விதைகள் தினமும் சேர்க்க வேண்டும். கொழுப்புச் சத்தான பொருள்கள், உப்பு, இனிப்பு, மற்றும் இறைச்சி வகைகள், பொறிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுகளைக் குறைக்க வேண்டும். ஆப்பிள், எலுமிச்சை, தர்பூசினி மற்றும் பழச்சாறுகள், வாழைத்தண்டு, வெள்ளைப் பூசணிக்காய், சவ்சவ், புடலங்காய் சுரைக்காய் போன்ற நீர்ச்சத்தான காய்கறிகளை அதிகம் சேர்த்தால் சிறுநீரகக் கற்கள் வராது.
 வாழைதண்டுச் சாறு, முள்ளங்கிக் கிழங்கின் சாறு சிறுநீரகக்கற்களுக்கு ஒரு நல்ல மருந்தாகும். சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் சிறுபிளை வேர் சிறந்ததாகும்.

சிறுபிளை
சிறுபிளை என்பது பொங்கல் காலத்தில் வீட்டின் முன் கட்டி வைக்கும் பொங்கல் பூச்செடியாகும். இது பொதுவாக சமவெளிகளிலும், காடுகளிலும், வளரும் ஒரு சிறு செடியாகும். இதன் வேர் சிறிது கற்பூர    வாசத்தைப் போல் இருக்கும். இதன் பூக்கள் இலையின் முடிவில்  வெண்மையாக சிறிதாகப் பூத்திருக்கும். இதன் வேர் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி. சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை உடையது, மேலும் கல்லடைப்பு, நீர் எரிச்சல், நீர் அடைப்பு, போன்றவைகளுக்கு சிறந்ததாகும்.
 இதன் வேரை ஒன்றிரண்டாக பொடி செய்து கசாயம் செய்து காலையும், இரவும் குடிக்க சிறு நீரகக் கற்கள் வெளியேறும். இந்த மூலிகைப்பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகள் மூலம் சிறுநீரக கற்களைக் கரைக்கவும் மேக நோயை குணமாக்குவதில் ஒரு சிறந்த மூலிகை என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

மாவலிங்கப் பட்டை
  சிறுநீரகக் கற்களுக்கு அடுத்து சிறந்த மூலிகை மாவலிங்கப்பட்டை ஆகும். இது ஒரு மரமாகும். இது இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. இதன் பூக்கள் சிலந்திப்பூச்சியின் கூட்டைப்போல்  இருப்பதால் இதற்கு  சிலந்திமரம் என்ற பெயரும் உண்டு. இந்த மரம் இந்தியா, இலங்கை, மயாமி போன்ற நாடுகளில் பெரும் அளவில் காணப்படுகிறது. இதன் பட்டை மருத்துவத்திற்கு பெரும் அளவில் உபயோகப்படுகிறது.
           இதன் பட்டை வாதவலிக்கும், காய்சலுக்கும், சிறுநீரகக்  கற்களுக்கும் பெரும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி, உடலில் உள்ள வீக்கத்தை வற்ற வைப்பதுடன் உடலில் ஏற்படும் வாத வலியையும் போக்குவதாகும். இந்த மூலிகை பல  வருடங்களாக சிறுநீரகக் கற்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையின் பட்டையை கசாயம் வைத்து குடித்தவுடன் வலியுடன் உள்ள   சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரோடு வெளியே வர ஆரம்பித்து விடும். வலியும் உடனே குறைந்துவிடும். மேலும் இந்த மூலிகை ஒரு சிறந்த மலம் இளக்கி. வயிற்றில் உள்ள புழுக்களையும் வெளியேற்றும். 

நோய் எதிர்ப்பு இன்மையும், மூலிகையும்   .........

     நோய் எதிர்ப்பு தன்மை என்பது உடல் சார்ந்த ஒரு நிகழ்வு ஆகும். நோய் எதிர்ப்பு என்பது நோய்க்கு காரணமான கிருமிகளை அழித்து நோய் வராது காத்தல். நோய் வந்தபின் நோய்க்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி நோயின் தீமைகளில் இருந்து காத்தல் ஆகியவை ஆகும். ஒருவருக்கு நோய் எதிர்ப்பின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. நீர், காற்று, நிலம் ஆகியவைகள் நச்சு ரசாயணங்களால் மாசுப்பட்டுள்ளது. ஏன் நமது சுற்றுப்புற சூழ்நிலைகளில் கூட கதிர்வீச்சுகள் போன்ற காரணங்களாலும் மாசுபட்டுள்ளது. நமது பூமியின் சுற்றுப்புற சுழல் மட்டும் மாசு அடையவில்லை, நாமும் “தான் என்ற சுயநலத்தின் அடிப்படையில் மாசுப்பட்டுள்ளோம்.
     அதனால்தான் நமது  சுற்றுப்புற சூழ்நிலையையும் மாசுபாடுத்தியுள்ளோம். மருத்துவம் பல அறிய சாதனைகள் புரிந்து உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மனிதனின் சராசரி வாழும் வயது உயர்ந்துள்ளது. ஆனால் ஆரோக்கியமான ஒரு வாழ்வை எதிர் நோக்கி உள்ளோமா? என்பது கேள்விகுறி தான். ஏன் நமது உடலும் கூட மாசுப்பட்டுள்ளது. அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அற்ற ஒரு சமுதாயம் உருவாகி உள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
           பொத்தி பொத்தி பாதுகாப்பாக வளர்க்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி வாழுகின்றன. இப்பொழுது உள்ள குழந்தைகளுக்கு நோய்க்கான காரணம்  ஒரு பையில் போடபடுகிறது. என்னுடைய கடந்தகால வாழ்க்கையை யோசித்தால் எப்பொழுதாவது காய்ச்சல் வரும். சிறுசிறு உபாதைகள் வரும். இரண்டு நாட்கள் மருந்து சாப்பிட்டால் சுகமாகி விடும். ஆனால் இப்பொழுது நோய் எதிர்ப்பு அற்ற ஒரு சமுதாய அமைப்பு உருவாகி உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.   
     நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவுக்கு காரணங்களைப் பேச வேண்டும் என்றால் நேரம் போதாது. நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு உருவாக்கலாம் என்று இனி பார்ப்போம். உணவு முறையில் கிருமினல் உணவாகிய அசைவ உணவில் மீன் ஒரு நல்ல எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உணவாகும். மீனில் விட்டமீன்கள் A,D மற்றும் ஓமேகாதிரி போன்ற மூலக்கூறுகள் உள்ளன. சிவில் உணவாகிய சைவ உணவில் கீரைவகைகள், காய்கறிகள், பருப்புவைகைகள் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவை.
     முருங்கைக் கீரையில் எல்லாவித விட்டமீன்கள், தாது உப்புக்கள் தேவையான அமினோ ஆசிடுகள் அதிகம் உள்ளன. இந்த கீரையை குழந்தைகளுக்கு சூப்பாகவோ, கீரையாகவோ கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் கூடிய குழந்தையாக வளரும்.
     நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் ஒரு மூலிகையை இப்பொழுது பார்ப்போம். சீந்தில் என்ற குடிச்சி நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஒரு சிறந்த மூலிகையாகும். சீந்தில் உடலில் நோய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை மிகப்படுத்துகிறது. சீந்தில் சிறுநீரகத்தை பலபடுத்தி சீராக வேலை செய்ய வைத்து உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது. சீந்தில் தோட்டத்தின் வேலிகளிலும், காட்டிலும் வளரக்கூடிய ஒரு மூலிகையாகும். இது கொடியாக வளரும் தன்மை உடையது. இதன் கொடியும் வெறும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
                                            
Dr R.S.Purusotham 
Cell No- 9842425780

சோரியாசிஸ்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும், மனநிலை சார்ந்தும் வருவதாக கருதுகின்றனர். சோரியாசிஸ்
என்பது தோலில் ஏற்படும் ஒரு சிதைவு ஆகும். தோலில் சிகப்பு நிற திட்டுகளுடன் இருக்கும். அந்த இடத்தில் ஒருவித உறுத்தல் இருக்கும். தோல் தடித்து அத மேல் இறந்த தோல் செதில்களுடன் இருக்கும். இந்த நோய் வறண்ட காற்று, மற்றும் சில மருந்துகள், உணர்ச்சி வசப்படுதல், அதிக சூரிய ஒளி, மதுபானங்கள் உபயோகித்தல், அடிக்கடி வைரஸ் மற்றும் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுபவர்களுக்கு அதிக வருகிறது. இதற்க்க் மருத்துவத்தில் எங்களை விட்டால் யாரும் கிடையாது என்று கூறுவர் பலர் உண்டு.
                        நாங்கள் உள் சாப்பிடுவதற்கும், வெளியே போடுவதற்கும் மருந்தும் செயமுரைகளைக் கூறியுள்ளோம். செய்து வெற்றி அடையுங்கள்.
சோரியாசிஸ்சுக்கு போடப்படும் தைலம்:
தேவையான பொருட்கள்:
1) நீர் வெட்டி முத்து எண்ணெய்,
2) வேப்ப எண்ணெய்
3) புங்க எண்ணெய்
4) சம்பங்கி விதை
5) அருகம்புல்,
6) வேப்பாலை இலை ஆகியவைகள்.
செய்முறை: தேங்காய் எண்ணையை எடுத்து அதில் தூளாக்கப்பட்ட சம்பங்கி விதையை போட்டு கலக்கி 10 நாள் வெயிலில் வைத்து எடுக்கவும். பின்னர் புங்கை எண்ணெய்க்கு சம அளவு அருகம்புல் சாறு விட்டு பதமாக காய்ச்சி எடுக்கவும். பின்னர் எல்லா எண்ணெய்களையும் ஒரு பாத்திரத்தில் விட்டு வேப்பாலை இலையை கையால் சிறு துண்டுகளாக்கி அந்த இலையில் உள்ள பால் எந்த ஒரு சேதாரம் ஆகாமல் பார்த்து எண்ணையில் போட்டு வெயிலில் 15 நாள் வைத்து எடுத்து உபயோகப்படுத்தவும். காலை, இரவு இரு வேளை குளித்த பின் போடவும். வேலைக்குச் செல்லும் முன் துணியால் துடைத்து விடவும்.
உள்ளே சாப்பிடும் மருந்து:                       
கருஞ்சீரகம், வேப்பிலை, நெல்லிக்காய் காய்ந்தது, மஞ்சள், கருசாலை, சீனப்பாவு ஆகியவைகளைச் சேர்த்து அரைத்து இரு வேளை வேளைக்கு ஒரு கிராம் வீதம் சாப்பிடவும். அதிக அளவு தண்ணீர் குடிக்கவும்.
சோரியாசிஸ் வருவதற்கான காரணங்கள்:
1.       நோய் எதிர்ப்பு சக்தி அதிவேகமாக செயல்படுதல்,
2.       தோல் வளரும் நிகழ்வு அதிகமாக செயல்படுதல்,
3.       பாரம்பரிய காரணங்கள்,
4.       சூரிய ஒளி,
5.       அதிக உணர்ச்சி வசப்படுதல்,
6.       சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களை தோல் தாங்கிக் கொள்ள முடியாமை.
உணவு முறைகள்:
தயிர், மோர், உபயோகித்தல், இயற்கை உந்தல்களாகிய மலஜலத்தை அடக்காதிருதல், காரம், கரிமசால் மற்றும் உப்பைக் குறித்த உணவை சாப்பிடவேண்டும். புளிப்பு சுவையுடைய அமிலத்தன்மையுடைய உணவுகளைக் குறைக்க வேண்டும். காய்கறிகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். முட்டை, கொழுப்புச் சத்து உள்ள மாமிசங்கள், பக்குவப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும். மீன் எண்ணெய், முளைகட்டிய பயிர்கள் துத்தநாக உலோகம் சேர்ந்த உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும்.
                சோப்புக்கு பதிலாக மூலிகைப் பொடிகளை உடம்பில் தேயித்து குளிக்கவேண்டும். உங்களுக்கு என்று தனியாக துண்டு, போர்வைகள் வைத்துக் கொள்ளவேண்டும். உணவில் பாகற்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். புண்ணை சுரண்டுவது, செதில்களைப் பிய்ப்பது, போன்ற செயல்கள் நோயின் அகோரத்தை அதிகப்படுத்தும். மனநிலை, ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். மனநிலை ஆரோக்கியத்திற்காக தினமும் தியானமும் சுவாச பயிற்சியும், ஒரு முப்பது நிமிடமாவது செய்யவேண்டும்.
சோரியாசிஸ் குளிக்கும் பவுடர்: சீயக்காய், பூலான் கிழங்கு, கோஸ்டம், சம்பங்கி விதை ஆகியவைகளைக் கலந்து அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்க வேண்டும்.    
ஏதேனும் தேவைக்கு அணுகவும்

Dr.R.S.Purusotham, 
24th 4th Cross Street, 
Santhi Nager,  
Palayamkottai-627002. 
செல்: 9842425780

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலையும், மூலிகையும்
           தினமும் உடலில் இரத்த சிகப்பு அணுக்கள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அழிக்கப்படுகின்றன. இது ஒரு நிகழ்வாக அமைகிறது. அவ்வாறு செயல் இழக்கப்பட்ட இரத்த சிகப்பு அணுக்களை ஈரல் பைலுரிபின் என்ற வேதியல் பொருளாக மாற்றி இரத்தத்தை விட்டு பிரித்து மலத்துடன் வெளியேற்றுகிறது. ஈரல் செயல்பாட்டை இழக்கும் பொழுது பைலுரிபின் வெளியேற்றப்படாமல் இரத்தத்தில் தேங்குகிறது. இதைதான் மஞ்சள் காமாலை என்கிறோம். பைலுரிபின் நச்சுத் தன்மை கொண்ட மஞ்சள் வேதியல் பொருளாகும். இது இரத்தத்தில் அதிகமாவதால் கண், வாய், தோல், சிறுநீர் ஆகியவைகள் மஞ்சள் நிறமாகிறது. மலம் வெண்மை நிறத்தை அடைகிறது. மஞ்சள் காமாலைக்கு பல காரணங்கள் உண்டு. வைரஸ் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை, சில மருந்துகளால் உருவாகும் மஞ்சள் காமாலை, மதுவினால் உருவாகும் மஞ்சள் காமாலை மற்றும் ஈரல் அடைப்பினால் உருவாகும் மஞ்சள் காமாலை என்று பலவகை உண்டு. பொதுவாக வைரசினால் வரும் மஞ்சள் காமாலை சுகமாவதற்க்கு சில நாட்கள் எடுக்கலாம். இவற்றில் வைரஸ் கெப்படையிஸ் பிரச்சனைகுரியதாகும். வைரஸ் கெப்படையிஸ் பெரும் அளவில் நீரினால் பாதிப்பை உருவாக்குவதாக அமைகிறது. அப்ஸ்ட்ராக்டி மஞ்சள் காமாலை என்பது பித்த நீர் செல்லும் குழாய் அடைக்கப்படுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும்.
மஞ்சள் காமாலையின் அறி குறிகள்     1) சிறுநீர் மஞ்சளாகுவதால்,
     2) தோல், கண், நகம், வாய், முதலிய பகுதிகள் மஞ்சள் ஆகுதல்,
     3) பசியின்மை, சோர்வு, களைப்பு, வாந்தி, குமட்டல், தலைவலி,
     4) உடல் எடை குறைதல் ஆகியவை ஆகும்.
        சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படுவதும் உண்டு. இதற்குகெனத்       
        தனிப்பட்ட மருத்துவம் இல்லாவிடினும் மூலிகை மருத்துவத்தில்
        சிறப்பான பல மூலிகைகள் உள்ளன. இவற்றில் இரண்டு  
        மூலிகைகளை இனிக் காண்போம்.
 கரிசலாங்கண்ணி
         இந்த மூலிகை வெள்ளை நிறம், மற்றும் மஞ்சள் நிறம் பூக்கும் இருவகை உண்டு. இந்த மூலிகை நீர்வளம் உள்ள இடங்களில் செழித்து வளரும் ஒரு குருஞ்செடியாகும். இது ஒரு குத்துரோமம் கொண்ட செடி. இது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மைக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும் ஒரு ஈரல் தேற்றியாக கூறுகின்றனர். மேலும் இந்த மூலிகை பெரும் அளவில் தலைமுடிக்கான தைலங்களில் உபயோகப்படுத்தபடுகிறது. இது ஒரு கர்ப்ப மூலிகையாக கூறுவதுண்டு. இந்த மூலிகையில் இரும்புச் சத்தும், தாமரச் சத்தும், பெரும் அளவில் உள்ளது. இரத்தச் சோகைக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். சளி, ஆஸ்துமா, போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக  உபயோகப்படுத்தபடுகிறது. இந்த மூலிகை மஞ்சள் காமாலைக்கும், கல்லீரல் பலப்படுவதற்க்கு ஒரு சிறந்த மருந்தாகும்.  
 கரிசலாங்கண்ணியின் வேர், இலை, காய், பூ ஆகியவற்றை நிழலில் காய வைத்து இடித்து காலையும், இரவும் உண்ண வேண்டும். தற்காலத்தில் பல ஆய்வுகளில் இது மஞ்சள் காமாலைக்கு ஒரு சிறந்த மருந்து என்று கூறுகின்றனர். மஞ்சள் காமாலையால் வரும் வாந்தி, வயிற்றுபொருமல், போன்ற எல்லாவித பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் கரிசலாங்கண்ணி மஞ்சள் காமாலையால் ஏற்படும் ஈரல் வீக்கத்தைக் குறைக்கிறது. சர்க்கரை நோய்க்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.
கீழா நெல்லி
           மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி ஒரு சிறந்த மூலிகையாகும். இது தமிழகமெங்கும் வளரும் செடியாகும். இது ஒரு குறுஞ்செடி. இதன் இலையின் அடியில் வரிசையாக காய் இருப்பதால் இதற்கு கீழா நெல்லி என்று பெயர் வந்தது. இந்த மூலிகை தொன்றுதொட்டு பல நோய்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை இந்தியாவிலும், உலகெங்கிலும் பெரும் அளவில் சோதனைச் சாலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பல அறிக்கைகளுடன் கூடியது. இந்த மூலிகை மஞ்சள் காமாலைக்கு பல காலமாகவே உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை வைரஸ் கெப்பட்டைஸ் B-யை செயல் இழக்க வைத்து மஞ்சள் காமாலையை சுகமாக்கும் குணம் கொண்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கீழா நெல்லியில் இரும்பு சத்து, விட்டமீன்கள், தாதுப் பொருள்கள், புரதச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள பைலான்தஸ் என்ற வேதியல் பொருள் ஈரலை பாதுகாக்கும் தன்மை உடையது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கீழாநெல்லி நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது என்று ஆய்வுகள் செய்துள்ளனர். மேலும் சர்க்கரை நோய் மலேரியா, யானைக்கால் போன்ற நோய்களுக்கும் சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றனர். பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கார்கள் இந்த இலையுடன் 4-மிளகு சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். 

Dr.R.S.Purusotham, 

24th 4th Cross Street,
Santhi Nager, 
Palayamkottai-627002,
செல்: 9842425780.
சர்க்கரை நோய்

சர்க்கரை நோயை உடலியல் ரீதியாக சொல்ல வேண்டும் என்றால் மண்ணீரலானது தேவையான அளவோ அல்லது முற்றிலும் இன்சுலின் உருவக்கப்படாமல் இருப்பதும், அவ்வாறு உருவாக்கப்பட்டாலும் அதை உடல் முழுவதுமாக உபயோகிக்கப்படாமல் இருப்பதை சர்க்கரை நோய்  என்கிறோம்.
           சர்க்கரை நோயை உயர்வேதியல் ரீதியாக சொல்லவேண்டும் என்றால் இரத்தத்தில் தேவையான அளவுக்கு மேல் சர்க்கரைச் சத்து உயர்வதும், அதனால் சர்க்கரைச் சத்து சிறுநீரில் வெளியேறுவதை சர்க்கரை நோய் என்கிறோம்.
         உலக சுகாதார அமைப்பு உலகில் 5 சதவீகித மக்கள் சர்க்கரை நோயாலும், சர்க்கரை நோய் சார்ந்த வியாதிகளாலும் இறப்பதாக கூறுகின்றனர். உலகில் 8700-பேர் தினமும் சர்க்கரை நோயாலும், சர்க்கரை நோய் சார்ந்த வியாதிகளாலும் இறப்பதாக கூறுகின்றனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 6-பேர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் 5.12-கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை உறுவாகும் என்று புள்ளி விவரம் கூறுகிறது. சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு உடல் மெலிதல் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதனால் அதிக தாகம் எடுத்தல் பிறப்பு உறுப்புகளில் சொறி அல்லது அரிப்பு, வெடிப்பு காணுதல், அதிகப் பசி, ஒருவித மயக்கம், பார்வையில் தெளிவின்மை ஓங்கரிப்பு, வாந்தி போன்றவைகள் நோயின் அறிகுறியாக இருக்கின்றன. சர்க்கரை நோயை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வெறும் வயிற்றில் இரத்தச் சர்க்கரை அளவு 100 மில்லி கிராமுக்கு குறைவாகவும், சாப்பிட்டு 2-மணி நேரம் கழித்து இரத்தச் சர்க்கரை அளவு 140-மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோயிக்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் சிறுநீரகக் கோளாறு, இருதய நோய், கண்பார்வை இழப்பு, இரத்த நரம்புகள் பழுதடைதல், கால் மற்றும் உறுப்புகள் சரியான இரத்த ஓட்டம் இன்மையால் செயல் இழந்து பாதிப்புக்கு உட்பட்டு அகற்ற வேண்டிய நிலைமை ஏற்படும். நீரிழிவு நோய் இருவகைப்படும்.
   1- மன்நீரலில் உள்ள லங்கர்கானா திசுக்கள் செயல் இழப்பினால் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இல்லாமல் சென்று விடும். இத்தகைய நோயாளிகள் இன்சுலின் ஊசியைச் சார்ந்துதான் இருக்கவேண்டும். இது பெரும்பாலும் இளம்வயதினருக்குத்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
  2-வது வகை நீரிழிவு நோய் இன்சுலின் குறைவாக சுரப்பதினாலோ அல்லது இன்சுலினை உடம்பு உபயோகித்துக் கொள்ளாததினாலோ (IIIiInsulin Resistence) இந்த நோய் வருகிறது. பொதுவாக 2-ஆம் வகை சர்க்கரை நோய் 45 வயதிற்கு மேல் தான் வருகிறது. இதற்கான காரணங்கள் 1) மறபு சார்ந்து வருதல், 2) உடல் பருமனால் வருதல், 3) மன அழுத்தத்தால் வருதல், 4) உடல் பயிற்சி இன்மையால் வருதல் ஆகியவைகள் ஆகும். சர்க்கரை நோய்காரர்களுக்கு 3 விதமான முக்கிய பிரச்சனைகள் வருவதுண்டு. 1) இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்து விடுதல், 2) இரத்தத்தில் சர்க்கரைச் சத்து அதிகமாகுதல், 3) கிட்டே அசிடோசிஸ் ஆகியவை ஆகும்.
    சர்க்கரை நோய் பற்றி பேசி கொண்டு இருந்தால் அதிகம் பேசலாம். இருப்பினும் நமக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சர்க்கரை நோயும் மூலிகையும். ஆகவே நாம் முதலில் மூலிகையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
        இன்றைய நவீன மருத்துவத்தில் பல உயிர் காக்கும் மருந்துகள் மூலிகையின் அடிப்படையில் உறுவானது என்பது பலருக்குத் தெரியாது என்பது ஒரு வேதனையான நிகழ்வாகும். உலக சுகாதார அமைப்பின் டிபுனல் மெடிசன் என்ற அமைப்பு மற்றும் வெளி நாட்டு மருத்துவ அமைப்புகள் உலகில் பாரம்பரியமாக உபயோகப்படுத்தும் மூலிகைகளை ஆய்வு செய்து அதில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்து ஆய்வு செய்து மருந்தாக வெளி வருகிறது.
        பொதுவாக நவீன மருத்துவத்தின் அடிப்படை மூலக்கூறு எங்கிருந்து வந்தது எவ்வாறு உருவாக்கப்பட்டது போன்ற பல கேள்விகளுக்கு முறையான பதில் கிடைப்பது சற்றுக் கடினமே. உலக  மூலிகைகளை ஆய்வு செய்து அதன் முடிவானக் கருத்துக்களை வெளி நாட்டினர் வைத்துள்ளனர். ஆகவே மூலிகைகள் நிச்சயமாக நோய்களுக்கு அதிக பக்கவிளைவின்றி செயல்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
மூலிகைகள்
ஆராக்கீரை
          மனநிலைச் சார்ந்த சர்க்கரை நோயைப் பற்றி பார்ப்போம். பொதுவாக பல புது சர்க்கரை நோயாளிகளை விசாரிக்கும் போது பலர் தற்சமயம் தான் இரத்தத்திலும், நீரிலும் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. ஆனால் இந்த மூன்று மாதத்திற்குள் எவ்வாறு நீரிழிவு நோய் உறுவானது என்ற வினாவை எழுப்புவர். அவர்களை தீவிரமாக விசாரித்தால் அவர்களுக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் மன சோர்வையும், மன அழுத்தத்தையும் உருவாக்கின ஒரு நிகழ்வால் மனச் சுமையுடன் இருந்து இருப்பர். இத்தகைய மன அழுத்தம் உடம்பில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் கார்ட்டிசேன் என்ற என்செம் அதிகம் சுரப்பதால் இன்சுலின் உடம்பிற்கு தேவையான அளவு சுரந்தாலும் உடல் அதனை உபயோகப்படுத்தாததால் இரத்தத்தில் சர்க்கரை சத்து கூடுகிறது. இதை (IIIiInsulin Resistence)  என்பர். இப்படிப்பட்டவர்கள் கவலையை விட்டு வெளியே வாருங்கள். மன அழுத்தத்தைக் குறைத்து மன நிம்மதியைப் பெற நினையுங்கள். இதற்க்கு எல்லாம் எனக்கு வேண்டும் என்ற பேராசையை முதலில் ஒழிக்கவேண்டும்.
                      சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதிலும்,மன நிலையை சீற்படுத்துவதிலும் ஒரு சிறந்த மூலிகை ஆராக்கீரையாகும். இக்கீரை நீரில் வளரும் ஒரு சிறு பூண்டாகும். இது நெல் மற்றும் தண்ணீர் உள்ள இடங்களில் 4 இலைகளுடன் மேலே மிதக்கும். இப்பொழுது சந்தைகளிலும் கிடைக்கிறது. இந்த மூலிகை ஆயூர்வேதத்தில் மனநிலைத்தாக்கம் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். இதைப் பற்றி உலகில் எங்கும் பல ஆய்வுகளுக்கு உட்பட்டு இருக்கிறது. பனாரஸ் பல்கலைகழகத்தில் நீரே பார்மகாலேஜ் ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் இது மன அழுத்தத்தை குறைப்பதில் ஒரு சிறந்த மூலிகை என்று கண்டறிந்து உள்ளனர். தைவாரி என்பவர் மன அழுத்தத்தைப் பற்றிய ஆய்வு அறிக்கையில் ஆராகீரையுடைய சபாம் என்ற மூலக்கூறு சிறப்பாக வேளை செய்கிறது என்று கூறியுள்ளார். இதை வீட்டில் கீரையாக சமைத்து உண்பத வழக்கம். ஆராக்கீரையை காயவைத்து பொடிசெய்து காலையும், இரவும் உன்ன மன அழுத்தம் குறைந்து சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். இந்த கீரை உண்ணும் பொழுது கருவுருவதைத் தடுக்கும் குணம் உடையதாகும். குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பவர்களும், கருவுற்ற பெண்களும் இந்த மூலிகையை உண்பது நல்லதல்ல.

சிறு குறிஞ்சான்
               இது பற்றிப் படரும் ஒரு கோடி இனத்தைச் சார்ந்ததாகும். இதற்க்கு சர்க்கரை கொல்லி என்று பெயர். இந்த மூலிகையின் இலையை வாயில் இட்டு சுவைத்தால்  நாக்கில் உள்ள சுவை அரும்புகளை மதமதக்கச் செய்து விடும். பின்னர் சீனியை வாயில் போட்டு சுவைத்தாலும் சீனி இனிப்புத் தன்மையின்றி சுவையற்று இருக்கும். இதை சரி செய்ய வெற்றிலையை வாயில் போட்டு மென்ற பின்பு சுவை தெரிய ஆரம்பிக்கும். இந்த மூலிகை சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் உடலில் உள்ள வீக்கத்தை வற்ற வைப்பதில் ஒரு சிறந்த மூலிகையாகும். இதில் இருந்து பிரிக்கப்பட்ட கிளைகோசிட் ஆகிய ஜிம்னிக் ஆசிட் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைப் பெறும் அளவில் குறைக்கிறது. மேலும் இது மாவுச் சத்தை ஜீரணமாகி இரத்தத்தில்  சேர்ப்பதை தடுப்பதால் இது ஒரு சிறந்த சர்க்கரை நோய்க்கு உரிய மருந்தாக மட்டும் இல்லாமல் பருமனான உடலை மெலிய வைப்பதற்கு ஒரு சிறந்த மருந்தாகும். உலகெங்கிலும் தயாரிக்கப்படும் பருமனைக் குறைக்கும் மூலிகை மருந்தில் சிறு குறிஞ்சான் ஒரு முக்கிய மருந்தாகும். இந்த மூலிகைப் பற்றி உலகெங்கும் பல ஆய்வுகள் நடத்தி முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த மூலிகை உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது. 2005-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த மூலிகையை ஆய்வு செய்ததில் உடலில் சுண்ணாம்பு சத்தை அதிகமாக்குகிறது. மேலும் இந்த ஆய்வில் பீட்டாசெல் மற்றும் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்குகிறது. adrenaline harmone –ஐ சமநிலை செய்து கல்லீரலை சிறப்புற வேளை செய்ய வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இந்த மூலிகை முதல் வகை மற்றும் இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
             மேற்படி கிங்ஸ் மருத்துவ கல்லூரியில் 2010-ஆம் ஆண்டு செய்த ஆய்வில் இன்சுலின் இரத்தத்தில் கலந்து சிறப்பாக எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்வதில் பெறும் அளவில் உபயோகிக்கப்படுகிறது. இது இந்தியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் பெறும் அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதற்கு குர்மார் என்று பெயர். இதற்கு இனிப்பை கொல்லும் என்று அர்த்தமாம்.
1)      இது நமது உடலில் பாங்கிரியாசின் வேலையை அதிகப்படுத்துகிறது.
2)      இரத்த ஓட்டத்தை மிகப்படுத்தி சிறுநீர் மூலம் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுகிறது.
3)      வீக்கமுற்ற சுரபிகளின் வீக்கத்தை வற்ற வைக்கிறது.
4)      காய்ச்சலுக்கும், இருமலுக்கும் ஒரு சிறந்த மருந்தாகும்.
5)      உடல் பருமனை குறைக்கிறது.
உடல் பருமனுக்கு 200-மில்லி கிராம் 2-வேளை உணவுக்குப் பின் எடுக்கவேண்டும். சர்க்கரை நோயாளிகள் 2 முதல் 4 கிராம் வரை உணவுக்குப் பின் 2 வேலையாக பிரித்து உன்ன வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய, குறைய இதன் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மூலிகைக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்த மூலிகை இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை குறைப்பதால் கண்டிப்பாக உணவிற்கு பின்தான் எடுக்கவேண்டும். 1ம் வகை நோயாளிகள் 400 மில்லி கிராம் வீதம் இருவேளை எடுத்தால் இன்சுலின் தேவையை குறைக்கிறது என்று 1990-ஆம் ஆண்டு செய்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெந்தயம்
இது கீரை வகையைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி ஆகும். நம் நாட்டில் வெந்தய கீரையை வைத்து சப்பாத்தி செய்து சாப்பிடுவது பல இடங்களில் பழக்கமாகும். இதன் விதையை சமயல்களில் சேர்ப்பது நமது வழக்கமாகும். இதற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயம் மூட்டுவலிக்கு ஒரு சிறந்த மருந்தாகும். சீனாவில் இதை பெறும் அளவில் பயன்படுத்துகின்றனர். அவர்கள் இதை Hu Lu Ba என்று அழைப்பர். சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு வலி நிவாரணியாக இதை உபயோகப்படுத்துவர். இன்றும் நமது ஊர்களில் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை நீராகாரத்துடன் உண்ணும் பழக்கம் இருக்கிறது. வெந்தயம் உடலில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்கு உள்ள கனணச் சூடை போக்கும். வெந்தயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்தை குறைக்கிறது. சர்க்கரை நோய்க்கு காரணமான உடல் பருமனை சீர் செய்கிறது. வெந்தயமத்தை 21- நாட்கள் நீரழிவு நோயாளிகளுக்கு கொடுத்ததில் வெறும் வயிற்றில் பார்க்கப்படும் சர்க்கரையின் அளவு குறைந்து நல்ல பலனை கொடுத்துள்ளது. மேலும் வெந்தயம் கல்லீரலையும், சிறுநீரகத்தையும் சீர்செய்து இரத்தத்தில் சர்க்கரைச் சத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. வெந்தயம் உலகளவில் கிரேக்க நாடுகள், அரபு நாடுகளில் பெறும் அளவில் உணவிற்காக பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் வெந்தய கீரையை டீயாக பயன்படுத்துகின்றனர். மேலும் வெந்தயம் பசியைத் தூண்டும் குணம் உடையது. தாய்ப்பால் இல்லாதவர்களுக்கு வெந்தயம் ஒரு நல்ல வரப்பிரசாதமாகும். மெலிந்து ஒல்லியாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வெந்தயம் கொடுத்தால் உடல் வைப்பதுடன் வனப்பான மார்பழகைப் பெறுவார்கள். வெந்தயம் இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதிலுள்ள அமினே ஆசிட் 4 hydroxyl sine என்ற மூலக்கூறு ஈரலில் உள்ள இனிப்புச் சத்தை குறைய வைத்து இன்சுலின் உபயோகத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் இன்சுலின் நிலைத்து நின்று சர்க்கரைச் சத்தை குறைக்கிறது. மேலும் Insulinemia என்ற இன்சுலின் குறைபாட்டை சீர் செய்கிறது என்று பல் ஆய்வுகள் கூறுகின்றன.

பாகற்காய்
பாகற்காய் பழங்காலத்தில் இருந்தே சர்க்கரை நோய்க்கு ஒரு மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. பாகற்காயில் உள்ள விட்டர் குளுக்கோடைடு, மற்றும் மேமரோசின் போன்ற சில வேதியல் பொருள்கள் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1985 –ஆம் ஆண்டு எடின்புரோவில் உள்ள Foundation for Diabetes Research என்ற கழகம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை 50 சதவீகிதத்திற்கு 5 மணி நேரத்தில் குறைப்பதாக ஆய்வு செய்துள்ளனர். 1986- ஆம் வருடம் Ethnopharmacology  என்ற ஆய்வு இதழில் 73 சதவிகித சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் உ;ல்ல சர்க்கரையை குறைக்கிறது. மேலும் சர்க்கரை நோயால் கண்ணில் வரும் கேட்ராக் நோய் வருவதைத் தாமதப்படுத்தும் குணம் பாகற்காய்க்கு உண்டு என்று 1988-ஆம் ஆண்டு Department of Biochemistry Asarba உறுப்பினர்கள் ஆய்வு   செய்து 2002-ஆம் வரோம் அந்த ஆய்வை நிலை நிறுத்தினர். பாகற்காய் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தைக் குறைத்து உடலை பலவீனப் படுத்துவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாகற்காய்  பற்றி உலகளவில் பல ஆய்வு அறிக்கையின் படி பாகற்காய்:
1)      உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது.
2)      உடலில் ல்ல தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
3)      புரதச் சத்தை உடம்பிற்கு உகந்ததாக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
4)      பசியைத் தூண்டுகிறது.
5)      புற்று நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உறுவாக்குகிறது.
6)      உடலுக்கு தீமை செய்யும் நோய் கிருமிகளை அழிக்கும் குணம் வாய்ந்தது.
7)      சர்க்கரை சத்தை உடம்பில் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் சிறப்பாக செயல்படுகிறது.
8)      இது ஒரு சிறந்த மலமிளக்கியாகும்.
9)      இதன் விதையில் Polypeptide என்ற மூலக்கூறு P-Insulin என்ற மாற்று இன்சுலினை சார்ந்ததாக உள்ளது.
10)   இதிலுள்ள MAP-30 என்ற வேதியல் பொருள் மார்பக புற்று நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். இது எய்ட்ஸ் நோயின் தாக்கத்தையும் குறைக்கும்.
காய்ந்த பாகற்காயை காலை, மதியம், இரவு 500 மில்லி கிராமில் இருந்து 1கிராம் வரை உபயோகிக்கலாம். பாகற்காய் குழந்தைபேற்றைத் தடுக்கும் குணம் வாய்ந்தது. சீனர்கள் இதன் சாற்றை கருச்சிதைவுக்கு பயன்படுத்துவர். குழந்தையை எதிர்ப்பார்த்து இருப்பவர்களும், கருவுற்ற பெண்களும் பாகற்காயை உணவாக எடுப்பது சிறப்பல்ல. மேலும் இதிலுள்ள வேதியல் பொருட்கள் தாய்ப்பாலில் கலக்கும் தன்மை உடையதால் தாய்பால் கொடுப்பவர்கள் இதைத் தவிர்க்கலாம்.
              பாகற்காய் ஒரு கோடி இனத்தைச் சார்ந்ததாகும். பாகற்காய் எல்லோருக்கும் தெரிந்த ஒரு காய் ஆகும். தமிழகத்தில் பலரால் விரும்பப்படும் ஒரு காயாகும். இதில் மிது பாவை என்ற சிறு இனமும், கொம்பம் பாவை என்ற பெரிய வகையும் உண்டு. பொதுவாக மிது பாவை என்ற சிறு பாகற்காய் தான் பெறும் அளவில் மக்களால் விரும்ப்படுகிறது. பாகற்காய் சாறு ஒரு பங்கும் பசும்பால் ஒரு பங்கும் சேர்த்து 40 நாள் குடித்தால் உடம்பு நல்ல திட்டமாகும். அதாவது இதை கற்பம் என்பர்.