JavaScript


உணவு மற்றும் சோரியாஸிஸ்                                                                                              .

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

 சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு எனத்  தனிப் பட்ட உணவுக் கட்டுப் பாடு கிடையாது என்றாலும்  ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி தேவை . சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு   நீரிழிவு,  புற்றுநோய் மற்றும் இதய நோய் பாதிப்பு அதிகம் உண்டாகும். ஆகவே உடல் ஆரோக்கியதிற்கு  உடற்பயிற்சி மற்றும்  ஆரோக்கியமான சம  சீரான  உணவுகள் தேவை.

 எதாவது உணவு சாப்பிட்டு அரிப்பு ஏற்பட்டால் அந்த உணவை சாப்பிடுவதை  தவிர்க்கவும் .

  திரவங்கள், நீர் நிறைய குடிக்க வேண்டும். அது தோலின் ஈரத்தைக் காக்கும்.

 முழு தானிய உணவுகளைச்  சாப்பிட வேண்டும் . முழு தானியங்களில் உள்ள  பி வைட்டமின்கள்  தோலுக்கு தேவை . பி நீரிழிவு,  புற்றுநோய்தோலின் வனப்பைக் கூட்டி தோலின்  அமைப்புமுறையை  மேம்படுத்தி தோல் வளர்சியைக் கூட்ட  உதவும்.

 பருப்புகள் மற்றும் விதைகள் இரண்டு முறை தினமும் உட்கொள்ள  வேண்டும். அதில் உள்ள  துத்தநாகம், பாக்டீரியாக்களைக் அழித்து தோல் எண்ணெய் உற்பத்தியை  அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜனேற்றம்  வைட்டமின் ஈ உள்ள  நல்ல ஆதார உணவாக  உள்ளது
 
 காபி கலந்த பானங்கள் மதுகார்பனட்டர் பானங்கள் சோரியாசிஸ் நோய்யை அதிகம் ஆக்கும் .

கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, உளுந்து, துவரை போன்ற பருப்பினங்களையும்உணவில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.

     கருங் காணம் சோரியாஸிஸ் நோய்க்கு  நல்லது.

   வைட்டமின் ஏ வைட்டமின் டி நிறைந்த உணவுகளும் மீன் எண்ணெய் ,- எண்ணெய் வலுவூட்டப்பட்ட தானியங்கள், பால் பொருட்கள், முட்டை ஆகியவை உணவில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.

துத்தநாகம் நிறைந்த உணவுகள் பூசனிக்காய் விதை, தர் பூசனி  விதைகள்.  பாதாம் பருப்புகள், அக்ரூட் பருப்புகள், கடல் உணவுகள், கோதுமை, பச்சிலைக் கீரை, வேர்கடலை, பீன்ஸ், ஆகியவைகள் உணவில் தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம். 

     கால்சியம்  சத்துக்கள்  நிறைந்த பச்சை  இலை  கீரைகள்,  சோயா, சோயா பால்,  செறிவூட்டப்பட்ட ரொட்டி, தானியங்கள், சீஸ். தயிர். பால், மத்தி மீன்  உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். 

    ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் :- ஆராய்ச்சியின் படி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு சோரியாசிஸ் நோயாளிகளின்  வீக்கத்தை குறைத்து  உடல் ஆரோக்கியத்தைக் காக்கும்.   ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்  இயற்கையாகவே மீன், சோயாபீன்ஸ், பால் உணவுகள், முட்டை, கருங்குறுவை  அரிசி, அக்ரூட் பருப்பு, பீன்ஸ்மற்றும் ஆளிவிதைகளில்  காணப்படுகிறது. 


   சோரியாஸிஸ் நோய்  காரணமாக  தோல் மற்றும்  உடல் தோற்றம் விரும்பத்தகாததாக  இருக்கும்.  சுய மரியாதை குறைந்த எண்ணங்கள் மனப்  பதட்டமும் மன அழுத்தமும் ஏற்படும். சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் மனத்தாக்கம் ஏற்படுவதைப் போக்க மருத்துவர் மற்றும் கூட இருப்பவர்களும்  அவர்களின்  உணர்ச்சியின் தாக்கத்தை புரிந்து அவர்களுக்கு மன ஆறுதல் கூறவேண்டும் 
.

   ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக