JavaScript


சோரியாஸிஸ் நோய்க் காரர்கள் கவனிக்க வேண்டியவைகள்  
                         .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

சோரியாஸிஸ் பெரும்பாலும் அரிக்கும் தன்மை கொண்டதால் கம்பளி மற்றும் செயற்கையால் செய்யப்பட்ட துணிகளை தவிர்க்கவும் .  ஏனெனில் கம்பளி மற்றும் செயற்கையால் செய்யப்பட்ட துணிகள்  அதிக  வெப்பம் உண்டக்குவதால்  ஏற்கனவே வீக்கமடைந்த தோலில் எரிச்சல் அதிகமாகும்.  பருத்தி, சணல், மூங்கில் மற்றும் இலகுவான  இயற்கை இழைகளினால் ஆகிய  நெகிழ்வான மென்மையான ஆடை அணியவேண்டும்.

சுடு நீர் குளிக்க  உபயோகிப்பதால் தோலில் இரத்த ஓட்டம் அதிகரித்து சோரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டு தோல் சிவப்பு நிறம் அடையும். இதனால் தோல் இறந்து மீனின் செதில்களைப் போன்று மினுமினுப்புடன் தோல் உரிதல் அதிகம் ஆகும்.

நைட் ஷேர்டு தாவரஉணவுகள் (உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய்.) பால் பொருட்கள் சிவப்பு இறைச்சி துரித  உணவுகள். ஆல்கஹால் உணவுகளை குறைக்க வேண்டும்.

அதிக நறுமண உணவுப் பொருள்கள். காரம், கரிமசால் மற்றும் உப்பைக் குறைத்து உணவை சாப்பிட வேண்டும். 

முட்டை, அதிக கொழுப்புச் சத்து உள்ள மாமிசங்கள், பக்குவப் படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும்.

புளிப்பு சுவையுடைய அமிலத் தன்மையுடைய உணவுகளைக் குறைக்க வேண்டும்.  சிட்ரஸ் பழங்கள். (ஆரஞ்சு , எலுமிச்சை , நார்த்தை.)

இயற்கை உந்தல்களாகிய மல ஜலத்தை அடக்காதிருத்தல்,

காய்கறிகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவு

நிறைய தண்ணீர்  குடித்தல் .

உடற்பயிற்சி செய்தல்

வேண்டிய அளவு தூக்கம் ஆகியவைகள் சோரியாசிஸ் பாதிப்பைக் குறைக்கும்.



]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக