JavaScript

சோரியாசிஸ் நோயின் காரணங்கள்                               .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]




சோரியாசிஸ் நோய்  எதனால் ஏன்  ஏற்படுகிறது என்பதை இதுவரை முடிவாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.  இது முற்றிலும் ஒரு தோல் நோய்.

சோரியாசிஸ் நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் டி செல்கள் சொரியாசிஸ் நோயின் எதிர்ப்பு சக்தி இன்மை காரணமாகவும்சொரியாசிஸ் நோய் உருவாகிறது.

என்சைம்கள் சார்ந்த காரணிகளலூம் சொரியாசிஸ் நோய் உருவாகிறது.

சோரியாசிஸ்  நோய் ஒருமரபணு சார்ந்த பரம்பரை நோய்யாகவும்   கருதப்படுகிறது. 

சோரியாசிஸ் நோய் சுமார் மூன்றில் ஒருவருக்கு பரம்பரை  சார்ந்த  மரபணு நோய்யாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. எட்டு முக்கிய சோரியாசிஸ்   உறுவாக்கும் மரபணுக்கள் (PSORS1 to  PSORS 8 ) சோரியாசிஸ் நோய் உருவாக்குவதில் சம்பந்தப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.

சோரியாசிஸ் நோயில்  தோல் செல்கள் வாழ்க்கை சுழற்சியை மாற்றுகிறது. மேல் தோல் அடுக்கு வளக்கத்துக்கு மாறாக அதிக விரைவான வளர்ச்சியடைகிறது. பொதுவாக தோலில் காயம் ஏற்படும் பொழுது  தோல் செல்கள் காயத்தை பழுது பார்க்கும் போது வழக்கத்துக்கு மாறாக அதிக விரைவான வளர்ச்சியடையும். சரும செல்கள் மூன்று அல்லது நான்கு வாரங்கள்  வாழ்கின்றன பின்னர் புது சரும செல்கள் உறுவாகும். ஆனால் சோரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு  மூன்று அல்லது நான்கு நாட்கள் சருமம் வாழ்கின்றன பின்னர் புது சரும செல்கள் தோன்றுகிறது. இதனால் இது  சரும நிலைமையை மாற்றுகிறது . தோல் மேற்பரப்பில் வேகமாக தோல் வழர்ந்து பார்ப்பதற்கு  சிவப்பு, செதில் போன்ற திட்டுகள், பருக்கள், மற்றும் முளைகளுடன்   நமைச்சல், தோல் புண்கள், தோல்செல்கள், வெள்ளி செதில்கள், உலர்ந்த சிவப்பு திட்டுகள், உண்டாகிறது.

நோய்களுக்காக  எடுத்துக்கொள்ளும் சில மாத்திரைகளின் பக்க விளைவுகளாலும் சோரியாசிஸ் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மனநலப் பிரச்னைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் லித்தியம்போன்ற மாத்திரைகள் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள்கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் (B.P) மருந்துகள்   கொழுப்பு குறைக்க உபயோகப் படுத்தும் மருந்துகள், கார்டிகோ ஸ்டீராய்டுகளின் மேற் பூச்சு கிரீம் காரணமாக இந்த சோரியாசிஸ் பாதிப்பு வரலாம்.

ஆய்வுகள் மன அழுத்தம் காரணமாக சோரியாசிஸ் நோய் அதிகம் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

சோரியாசிஸ் நோய்யைக் கண்டுபிடிக்க  என்று  இரத்த பரிசோதனைகள் அல்லது கண்டறியும் ஆய்வு நடை முறைகள் தேவை இல்லை.


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக