JavaScript


வீட்டு வைத்திய சிகிச்சை முறைகள்-                                                                                    .

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

சோரியாசிஸ் நோய்க்கு மூலிகை மருந்துகள் மற்றும் மாற்று இயற்கை சிகிச்சை முறைகளில் எந்த  பக்க விளைவுகள் இல்லை. செயற்கை மருந்துகளை ஒப்பிடும்போது. மூலிகை மருத்துவம் எளிதாகிறது மேலும் மலிவானது .  சோரியாசிஸ் மற்றும் தோல் அலற்சி நோய்க்கு .மூலிகை மருந்துகள் மற்றும் மாற்று இயற்கை சிகிச்சை முறைகள் சிறப்பானது  என்று  ஆய்வுகள் கூறுகின்றன.  உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்  சோரியாசிஸ் நோயைக் குணமாக்குகிறது

சோற்றுக் கற்றாழை -  இதன் நடுவில் உள்ள கூழ்க் கனிமங்கள்  தோலில் ஏற்படும் சோரியாசிஸ் அரிப்பை நீக்கி தோலை மிருதுவாக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றனசோற்றுக் கற்றாழையின் நடுவில் உள்ள கூழ்க் கனிமங்கள் நல்ல ஆன்டி ஆக்ஸ்ஸிடன்ட் (Anti oxidant) இந்த கூழ்க் கனிமங்களை உண்டால் சோரியாசிஸ் நன்கு குணமாக வாய்ப்பு உண்டு.

வாழை பழத்தின் உரித்த தோல்  தோல்நோயைக் குணம் ஆக்கும், மேலும் புண்களையும் தோலின் தடிமத்தையும் குணப்படுத்தும் குணம் கொண்டது. வாழை பழதித்ன் உரித்த தோலை சோரியாசிஸ் தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்க்கலாம்.

ஆமணக்கு   எண்ணெய்  சோரியாசிஸ் நோயால் உண்டாகும்    சிறிய  தடிப்பு  மற்றும்  சுற்றி உள்ள புண்களுக்கு ஆமணக்கு எண்ணெய் தடவ  உங்கள் தோல் மேம்படும். ஆமணக்கு எண்ணெய் படுக்கைக்கு செல்லும் முன் புண்கள் மீது தடவிவர .ஒரு சில வாரங்களுக்கு பிறகு அந்த பகுதியில் ஒரு முழுமையான சுகத்தைக் கண்பீர்கள்.

சாயங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உபயோகிக்க வேண்டாம் . இவைகள் சோரியாசிஸ் நோயாளிகளுக்கு எரிச்சலை உருவாக்கலாம். மேலும் தோல் தடிப்பை அதிகமாக்கும்.

வெறும் தண்ணீரில் குளிப்பது தோலைக் காயவைக்கும். உங்கள் சருமத்தின் ஈரத்தை காக்க  குளியல் நீரில்  உப்புகள்
அல்லது எண்ணெய், சிறிது சேர்த்து நன்கு கலக்கி பின் குளிக்கவும்,

இஞ்சி குடும்பத்தைச் சார்ந்த மஞ்சள் சோரியாசிஸ் கீல்வாத நோய்க்கு ஒரு  நல்ல மருந்தாகும். மஞ்சளில் உள்ள குறிப்பிட்ட வகைப் புரதங்கள் அலற்சி  அறிகுறிகளைக் குறைக்கும் .

சோரியாசிஸ் குணமடைய உதவும், மற்றும் அதிகமாக்கும்  உணவுகள் பல உள்ளன. அந்த விதத்தில் சர்க்கரையை உணவில்  தவிர்ப்பது நல்லது இனிப்பு சுவைக்கு கால்சியம் சத்து  அடங்கிய பனை வெல்லம் பனை கற்கண்டு உபயோகிக்கலாம்

ஆளிவிதையில் ஓமேக திரி உள்ளது. இது  உச்சந்தலையில் தடிப்பைக் குறைக்க ஆளிவிதை எண்ணெய்யை தடவலாம்.
ஆளிவிதை எண்ணெய்யை உட்கொள்வதால் சோரியாசிஸ் குணமடைய வாய்ப்பு உண்டு

மன அழுத்தத்தை குறைக்க  பல உத்திகள் உள்ளன. யோகாதியானம், ஆழ்ந்த சுவாசம், போன்ற காரியங்களைச் செய்யுங்கள்.

ஏன் சோரியாசிஸ் குணமாக வேண்டும் என்ற சங்கல்ப்பத்துடன் தியானம் செய்யலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மனம் வீட்டு பேசுங்கள் . நல்ல நூல்கள் படிப்பது மன அமைதியைத் தரும்.

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக