JavaScript



சோரியாசிஸ் தொடர்புடைய பாதிப்புகள்-                                        .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


சோரியாடிக் கீல்வாதம்
உடலில்  நோய் எதிர்ப்பு தன்மையின் குரைவு காரணமாகவும்
சோரியாசிஸ் நோயாளிகளிள் 25% வரை மூட்டு சோரியாடிக் கீல்வாதம்  உண்டாகிறது . சில சந்தர்ப்பங்களில் நகம் சார்ந்த  சோரியாசிஸ் சோரியாடிக் கீல்வாதம் நோய் காரணமாக உருவாகிறது சோரியாசிஸ் சார்ந்த கீல்வாதம் விரல், மூட்டு, விரல், முதுகுத்தண்டு, பெரிய மூட்டுகள், சிறிய மூட்டுகள் போன்ற எல்லா பகுதிகளையும் தாக்கி வலி, வீக்கம், நிறமாற்றம் உண்டாக்கும்

இதய நோய்கள்
சோரியாசிஸ் பொதுவான T- ஹெல்பர் செல்  வகை 1 (Th1) நோய்  தடுப்பாற்றலைக்  கெடுக்கும். அதலால்  மாரடைப்பு நோய் வர வாய்ப்பு உண்டு  சோரியாஸிஸ் இதய நோய்கள் தொடர்புடையது. ஆனால் முக்கிய இருதய ஆபத்து உண்டாக்கும் காரணங்கள் கண்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்று மருத்துவமனை சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றனர்.
வளர்சிதை மாற்றம் 

 உயர் இரத்த அழுத்தம் -  உயர் இன்சுலின் அளவு மற்றும் -அதிக கொழுப்பு, உயர்வு போன்ற காரணங்களால்  வளர்சிதை மாற்றம் ஏற்படும் .

உளவியல் சார்ந்த கோளாறுகள்
நாட்பட்ட சோரியாசிஸ் நோய் மனநிலையைப் பாதிக்கும் . தோலில் உள்ள விகாரமான தோற்றம் சமூக தொடர்புகளில் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கும் . இதனால்
தன்நம்பிக்கையை குறைக்கும். சோரியாஸிஸ் நோயாளிகள்  உணர்ச்சிவசத்தால்   கோபம்,  சோகம் அல்லது   தர்மசங்கடமான நிலையை  உருவாக்குகின்றனர். சோரியாஸிஸ் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு  இடையே வாழ்க்கை தரத்தையும் மன நிலையையும் ஒரு எதிர்மறை பாதிப்பை உறுவாக்குகிறது.

மற்ற பாதிப்புகள்
சோரியாசிஸ்  நோய், இன்சுலின் எதிர்ப்பு நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய  நோய் மற்றும் வளர்சிதை மாற்றம் , உடல் பருமன், இரத்த கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பு, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது .

சோரியாசிஸ் தொடர்புடைய  உடல் பருமன்
சோரியாசிஸ் நோய் உடையவர்கள் அதிக வேலை செய்ய இயலாதததால் எடை அதிகமாகி பருமனாக வாய்ப்பு உள்ளது உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு  சோரியாசிஸ் நோயின் கடுமை அதிகம் இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம்
பொதுவாக சோரியாசிஸ் நோயாளிகளுக்கு  உயர் இரத்த அழுத்தம்  அதிகமாக இருக்கிறது. மன நிலை பாதிப்பு உடல் செயல் பாதிப்புகலால் உயர் இரத்த அழுத்தம்  ஏற்படும்.

கண் வீக்கம் மற்றும் கண் வலி
சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு கண் சிவத்தல், கண் வீக்கம் கண் ஒளி உணர்திறன் குரைவு, மற்றும் கண் வலி, பக்க விளைவாக வருகிறது . கண்ணிமையைச் சுற்றி சிவத்தல், கண்  உலர்தல்  அதனால் கண் பார்வை குறைதல் போன்றவை ஏற்படுகின்றன . சோரியாஸிஸ் கீல்வாதம் உடைய நோயாளிகள் சுமார் 30 சதவீதம் கண் வீக்க நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

பார்கின்சன் நோய்- (நடுக்கு வாதம்)
நாள்பட்ட நரம்பு நோய் பதிப்பால் சொரியாசிஸ் நோயாளிகளுக்கு பார்கின்சன் நோய் (நரம்பியல் சார்ந்த நோய்) ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.



]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக