நவீன
சிகிச்சை முறைகள். .
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
எந்த ஒரு வெளிப்பூசும் உபயகிக்கும் முன் சிறிது
உடலில் தேய்த்து பார்த்து ஒத்துக் கொண்ட பின் உபயோகிக்கவும்.
சோரியாசிஸ் நோயின் சிகிச்சையின்
முதன்மை இலக்கு மிகவும் விரைவாக வழரும் தோல் செல்களை
நிறுத்த வேண்டும். மேற் பூச்சு சிகிச்சைகள் - சோரியாசிஸ் நோயின் தோலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்பூச்சு கிரீம்கள் மற்றும் களிம்புகள் பூசி
சிகிச்சை அளிப்பதாகும். இது முதல் நிலை
சிகிச்சையாகிறது . சிலர் இந்த முதல் நிலை
சிகிச்சையிலே சோரியாசிஸ் கட்டுப்படுத்த
படுகிறது
.
மாய்ஸ்ச்சரைசர்கள்
(ஈரப்பதமாக்கும் கிரீம்கள் மற்றும் களிம்புகள்):-இந்த கடின
தோல் மற்றும் செதிலை மென்மையாக்க
உதவும். அதனால் நமைச்சல், வெடிப்பு , வலி குறையும். ஈரப்பதம் கிரீம்கள்
மற்றும் களிம்புகள் பல பிராண்டுகளில்
உள்ளன. மாய்ஸ்ச்சரைசர்கள் தோலை
மிருதுவாகவும் மற்றும் ஈரமானதாகவும் வைக்கும் .
மேற்பூச்சு
கார்டிகோஸ்டீராய்டுகள் -
மேற்பூச்சு கார்டிகோ ஸ்டீராய்டுகள் உடலின் சில பகுதிகளில் உள்ள முகம் அல்லது உடல் மடிப்புகள்
(அக்குள்களில் மற்றும் இடுப்பு பகுதியில்)
தடிப்பு ஆகிய இடங்களில் உள்ள சோரியாசிஸ் நோயின் தோலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற் பூச்சு கிரீமாக முதல் சிகிச்சையாகப் பயன்படுகிறது. மேற்பூச்சு
கார்டிகோ ஸ்டீராய்டுகள் கிரீம்கள் அல்லது களிம்புகள் தோல் அழற்சியைக்
குறைத்து வீக்கத்தைக் குறைக்கின்றன . ஸ்டீராய்டு கிரீம்கள் அல்லது களிம்புகள்
உச்சந்தலையில் மற்றும் முகத்தில் கடினமான பகுதிகளில் பயன்படுத்த எளிதான சிகிச்சையாக
இருக்கிறது . அலற்சியை குறைப்பதன்
மூலம் தோல் செல்கள் உற்பத்தி
தாமதப்படுத்தி அரிப்பைக் குறைக்கிறது. சில
ஸ்டீராய்டு கிரீம்கள் அல்லது களிம்புகள் முகத்தில் உள்ள சோரியாசிஸ்க்கு
பயன்படுத்தப் படுகிறது. மருத்துவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதை
பரிந்துரைப்பார் ஒரு ஸ்டீராய்டு கிரீம் ஒரு மருத்துவர் அனுமதி
இல்லாமல் நான்கு வாரங்கள்
தொடர்ந்து பயன்படுத்த கூடாது.
தடிப்புக்கு ஷாம்பு மற்றும் மருந்து
ஆகியவை இணைந்து பரிந்துரைக்கப்படுகிறது கார்டிகோ ஸ்டிராய் மேற்பூச்சுகள்(oilments) தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது8 வாரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . பின்னர் அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது .
ஆகியவை இணைந்து பரிந்துரைக்கப்படுகிறது கார்டிகோ ஸ்டிராய் மேற்பூச்சுகள்(oilments) தொடர்ந்து பயன்படுத்தப்படும் போது8 வாரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . பின்னர் அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது .
வைட்டமின் D அனலாக் கிரீம்கள் -
சோரியாசிஸ்
நோயின் லேசான தடிப்பு முதல் மிதமான
தடிப்புவரை வைட்டமின் D அனலாக் கிரீம்கள் பொதுவான சிகிச்சையாக
உபயோகப் படுத்தப் படுகிறது. சோரியாசிஸ் நோயின் தோல் செல்கள் வளர்ச்சி குறைந்து அரிப்பைக் குறைக்கிறது. வைட்டமின் D அனலாக் கிரீம்கள் சில நேரங்களில் கார்டிகோ ஸ்டீராய்டு மேற் பூச்சுடன் இணைந்து
பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைக்கு, கர்ப்பிணிகளுக்கு மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் வைட்டமின் D சார்ந்த களிம்புகள் அல்லது கிரிம்
சிகிச்சை எந்த பக்க விளைவுகள் இல்லாததால்
பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது
.
Dithranol - சோரியாசிஸ்
தோல் சிகிச்சைக்கு Dithranol களிம்பு 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது தோல் செல்கள் உற்பத்தி குறைப்பதில்
பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சில பக்க விளைவுகள் உண்டு, Dithranol களிம்பை மருத்துவ மனையின் மேற்பார்வையின் கீழ் ஒரு குறுகிய கால சிகிச்சைக்கு
பயன்படுத்தப்படுகிறது. Dithranol களிம்பை கையுறைகள் அணிந்து போட
வேண்டும். Dithranol களிம்பை 10 முதல் 60 நிமிடங்கள் தோலில் போட்டு பின் கழுவ வேண்டும். dithranol களிம்பு ஆரோக்கியமான தோலில் பட்டால்
எரிச்சல் வரும் . எனவே தோலில் பதிக்கப் பட்ட தடிப்பான பிளெக்ஸ் பகுதியில் மட்டும் கவனமாக போட
வேண்டும். இதனால் தோலில் ஏற்படும் எரிச்சல் குறைக்கிறது, இது குறைந்த வலிமையுடையதாக
ஆரம்பித்து படிப்படியாக ஒரு சில வாரங்களில் வலுவானதாக உபயோகிப்பது
வழக்கதில் இருக்கிறது.
மேற்பூச்சாக உள்ள கோல் தார் சோப்பு
மற்றும் ஷாம்பு (COAL TAR OINTMENT) நிலக்கரி தார் (oilments) சோரியாஸிஸ்க்கு
மட்டுப்படுத்த சிறந்ததாக காணப்படுகிறது. தோல் செல்கள் வளர்ச்சி மெதுவாகிறது.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
கோல்தார் ஆயின்மென்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
சாலிசிலிக் அமில ஜெல் -
தோல் அழற்சி இணைப்பில் தோன்றும் இறந்த தோல் செதில்களை நீக்குகிறது.
தோல் அழற்சி இணைப்பில் தோன்றும் இறந்த தோல் செதில்களை நீக்குகிறது.
நீர் (10 ml) தேங்காய் எண்ணெய்(10 ml) சமையல் உப்பு (ஒரு சிட்டிகை) பேதி உப்பு (ஒரு
சிட்டிகை) ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து குலுக்க பால் போன்ற கலவை வரும். இந்தக் கலவையை
உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து
பின் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
புற
ஊதா (UV light) ஒளியை கொண்டு ஒளிக்கதிர்
சிகிச்சை சோரியாஸிஸ்
தடிப்பைக் குறைக்கிறது. ஒளிக்கதிர் சிகிச்சை சோரியாஸிஸ்க்கு மிகவும் பயனுள்ள சிகிச்சையாக இருக்கின்றன .
புற ஊதா ஒளிக்கதிர் சிகிச்சை
வீக்கத்தை ஊக்குவிக்கும் நோய்
எதிர்ப்பு செல்ககளின் செயல்பாடு
குறைக்கிறது . இதனால் வீக்கம் குறைகிறது.
இது கட்டிகள் உருவாகுவதும் குறைகிறது .
புற ஊதா ஒளிக்கதிர் சிகிச்சை உங்கள் வீட்டில் இருந்தே செய்ய முடியும். புற
ஊதா ஒளிக்கதிர் விளக்குகள் ஆன் லைன் மார்க்கெட்டில் கிடைக்கிறது.
விலை 4000 வரைஇருக்கும்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக