JavaScript

சோரியாஸிஸ்
                                                        .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
                                                                        .

சோரியாஸிஸ் என்ற வார்த்தை கிரேக்கம் மொழியில்  இருந்து வந்ததுஇதற்க்கு சோர என்றால் அரிப்பு என்ற  அர்த்தம் . சிஸ் என்றால் நிலை என்ற  அர்த்தம் .  அரிப்பு நிலை என்ற பொருள்படும்.

தமிழில் சொரியாசிசை காளாஞ்சக படை, மீன் செதில் படை, ‘செதில் படைஎன்று அழைப்பர்.

சோரியாஸிஸ் நோய் பொதுவாக மக்கள் தொகையில் 2-4% பாதிக்கிறது.

சோரியாஸிஸ் நோய்   ஆண்கள்  பெண்கள் மற்றும் எல்லா வயதினரையும் பாதிக்கும்.

இருப்பினும் சோரியாஸிஸ் நோய்   15 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் மத்தியிலும், 60 முதல் 75 வயது வரையுள்ள முதியவர்களைப்   பொதுவாக பாதிக்கிறது .

ஆனால் ஆண்கள் அதிகமாக சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

சோரியாஸிஸ் நோய் நாள்பட்ட, திரும்ப திரும்ப வரும் நோய்.

சோரியாஸிஸ் நோய் பழங்காலத்திலேயே இருக்கிறது.

சோரியாஸிஸ் உயிர் கொல்லி நோய் அல்ல.

சோரியாஸிஸ் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, இஸ்ட், போன்ற நுண்ணுயிர்களால் வருவது இல்லை.

சோரியாஸிஸ்அடுத்தவர்களுக்கு  தொற்றும் தொற்று நோய்யல்ல.

சோரியாஸிஸ் நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன,



சோரியாஸிஸ் தீவிரத்தன்மை




 
சோரியாஸிஸ் தீவிரத்தன்மை மிக லேசான பாதிப்பு  - 65%
கடுமையான பாதிப்பு - 8%
லேசான பாதிப்பு - 2%
மிதமான பாதிப்பு -35 %


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


*
சோரியாசிஸ் நோயின் காரணங்கள்                               .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]




சோரியாசிஸ் நோய்  எதனால் ஏன்  ஏற்படுகிறது என்பதை இதுவரை முடிவாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.  இது முற்றிலும் ஒரு தோல் நோய்.

சோரியாசிஸ் நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் டி செல்கள் சொரியாசிஸ் நோயின் எதிர்ப்பு சக்தி இன்மை காரணமாகவும்சொரியாசிஸ் நோய் உருவாகிறது.

என்சைம்கள் சார்ந்த காரணிகளலூம் சொரியாசிஸ் நோய் உருவாகிறது.

சோரியாசிஸ்  நோய் ஒருமரபணு சார்ந்த பரம்பரை நோய்யாகவும்   கருதப்படுகிறது. 

சோரியாசிஸ் நோய் சுமார் மூன்றில் ஒருவருக்கு பரம்பரை  சார்ந்த  மரபணு நோய்யாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. எட்டு முக்கிய சோரியாசிஸ்   உறுவாக்கும் மரபணுக்கள் (PSORS1 to  PSORS 8 ) சோரியாசிஸ் நோய் உருவாக்குவதில் சம்பந்தப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.

சோரியாசிஸ் நோயில்  தோல் செல்கள் வாழ்க்கை சுழற்சியை மாற்றுகிறது. மேல் தோல் அடுக்கு வளக்கத்துக்கு மாறாக அதிக விரைவான வளர்ச்சியடைகிறது. பொதுவாக தோலில் காயம் ஏற்படும் பொழுது  தோல் செல்கள் காயத்தை பழுது பார்க்கும் போது வழக்கத்துக்கு மாறாக அதிக விரைவான வளர்ச்சியடையும். சரும செல்கள் மூன்று அல்லது நான்கு வாரங்கள்  வாழ்கின்றன பின்னர் புது சரும செல்கள் உறுவாகும். ஆனால் சோரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு  மூன்று அல்லது நான்கு நாட்கள் சருமம் வாழ்கின்றன பின்னர் புது சரும செல்கள் தோன்றுகிறது. இதனால் இது  சரும நிலைமையை மாற்றுகிறது . தோல் மேற்பரப்பில் வேகமாக தோல் வழர்ந்து பார்ப்பதற்கு  சிவப்பு, செதில் போன்ற திட்டுகள், பருக்கள், மற்றும் முளைகளுடன்   நமைச்சல், தோல் புண்கள், தோல்செல்கள், வெள்ளி செதில்கள், உலர்ந்த சிவப்பு திட்டுகள், உண்டாகிறது.

நோய்களுக்காக  எடுத்துக்கொள்ளும் சில மாத்திரைகளின் பக்க விளைவுகளாலும் சோரியாசிஸ் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, மனநலப் பிரச்னைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் லித்தியம்போன்ற மாத்திரைகள் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டு மருந்துகள்கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் (B.P) மருந்துகள்   கொழுப்பு குறைக்க உபயோகப் படுத்தும் மருந்துகள், கார்டிகோ ஸ்டீராய்டுகளின் மேற் பூச்சு கிரீம் காரணமாக இந்த சோரியாசிஸ் பாதிப்பு வரலாம்.

ஆய்வுகள் மன அழுத்தம் காரணமாக சோரியாசிஸ் நோய் அதிகம் ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

சோரியாசிஸ் நோய்யைக் கண்டுபிடிக்க  என்று  இரத்த பரிசோதனைகள் அல்லது கண்டறியும் ஆய்வு நடை முறைகள் தேவை இல்லை.


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]





.
சோரியாசிஸ் நோயின் அறிகுறிகள்        
                                                                 .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]



சோரியாசிஸ்  நோயின்  அறிகுறிகள் நபருக்கு  நபர்  மாறு படும்,

தோலின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

பின் அந்த தோல் தடிக்கும்.

கொப்புளங்கள்  தோன்றும்.

பின் அந்த தடித்த  தோல் இறக்கும்.

மீனின் செதில்களைப் போன்று மினுமினுப்புடன் தோல் உரியும். 

வெள்ளி நிறத்தில் செதில்கள் மூடப்பட்டிருக்கும்.

சிவப்பு  திட்டுகள்  தோலில்  உருவாகும்.

சிறு அளவில் புள்ளிகள் தோலில் உருவாகும்.

வெடிப்புஅரிப்பு, எரிச்சல், உருவாகும்.

வேதனையுடன்  கொண்ட  இரத்தம் கொண்ட   தோல் உருவாகும்.

தலை, முழங்கை, முழங்கால் முழங்கைகள், மேல் இடுப்பு எலும்பு பகுதியில் தொடைகளில்பிறப்புறுப்பு பகுதிகளில், உள்ளங்கைகளில் சோரியாசிஸ் அதிகமாக இருக்கும்.

சிலருக்கு தலையில் பொடுகு போல உருவாகி பின் மீனின் செதில்களைப் போன்று மினுமினுப்புடன் தோல் உரியும்.

சில நேரங்களில் அரிக்கும் வலிக்கும்.

சோரியாசிஸ் மாறுபட்ட தோற்றமுடைய தோல் நிலைமை உருவாகி குழப்பம் ஏற்பட்டால்    நோயறிதல் தேவைப் படின் தோல் பயாப்ஸி அல்லது தோல் ஸ்ரபிங் மூலம் சோரியாசிஸ் நோயைக் கண்டு கொள்ளலாம்.


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]




*
சோரியாசிஸ் நோயின் வகைகள்                                                .

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

பிளேக்சோரியாஸிஸ்-
இந்த வகை சோரியாஸிஸ் பொதுவான வகையாகும். இது பொதுவாகவெள்ளி செதில்கள் மூடப் பட்டிருக்கும்சிவப்பு உலர் தோல் புண்கள் (பிளேக்) ஏற்படுகிறது. இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில்  10ல்பேர் பாதிக்கப் படுகின்றனர் இது உங்கள் உடலில்  தோன்றும்ஆனாலும்  பெரும்பாலும் முழங்கைகள்முழங்கால்கள் உச்சந் தலையில் உங்கள் பிறப்பு உறுப்புகளில் வாயின் உட்புறத்தில்  தோன்றும்.



கட்டேட் தடிப்பு சோரியாஸிஸ்-

பொதுவாக கழுத்து கைகள்கால்கள் மற்றும் கையின் மேல் பகுதிகளில் உச்சந் தலையில்  தடிப்பு சிறு புண்கள். புண்கள் மீது நீர் துளி உறுவாகும். இந்த வகை பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளைஞர்களைப் பாதிக்கிறது இந்த வகை சோரியாஸிஸ் வந்தவர்களில் 10ல்2 பேருக்கு பாதிக்கப் படுகின்றனர்.



உச்சந்தலையில் சோரியாஸிஸ்
 தோலில்  வெள்ளி செதில்கள் மற்றும் வெள்ளி செதில் நீக்கப்பட்ட போது இரத்தம் கசிந்து சிவப்பு திட்டுகள் ஏற்படுகிறது. தோலில்   தடிமன் செதில் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக  உச்சந் தலையில் அரிப்பு ஏற்பட்டு  பிறகுஉங்கள் முடி அல்லது உங்கள் தோல்களில் இறந்த தோல் செதில்களைக்  கானலாம்.



இன்வேர்ஸ் சோரியாஸிஸ்-
வீக்கமான தோல் திட்டுகள்மென்மையான தோல் திட்டுகள்
ஏற்படுகிறது. இந்த வகை தோல் அற்சியுடன் கூடிய சோரியாஸிஸ்  மக்களைப் பதிக்கிறதுமுக்கியமாக இடுப்பு பகுதிமார்பின்  கீழ் மற்றும் பிறப்புறுப்புகள்அக்குள்களில் உள்ள தோலில்  பாதிக்கும்தோலில்  உராய்வு மற்றும் தோலில் வியர்த்தல் போன்ற காரணங்களால் தோல் சோரியாஸிஸ் மோசமடையும்.



பஸ்டுலர் சோரியாஸிஸ்-


 பொதுவாக சில நேரங்களில் சீழ் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும்  உங்கள் தோல் சிவந்து மென்மையாக மாறும் ,  விரைவாக பரவலாக திட்டுகள் உருவாகிறது.   கைகள்கால்கள்அல்லது விரல் சிறிய பகுதிகளில் இந்த திட்டுகள் உருவாகிறது.



பஸ்டுலர் சோரியாஸிஸ்- 





பொதுவாக சில நேரங்களில் சீழ் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும்  உங்கள் தோல் சிவந்து மென்மையாக மாறும் ,  விரைவாக பரவலாக திட்டுகள் உருவாகிறது.   கைகள்கால்கள்அல்லது விரல் சிறிய பகுதிகளில் இந்த திட்டுகள் உருவாகிறது.



ஏரித்ரோ டேர்மிக் சோரியாஸிஸ் -




பொதுவான வகையைச் சார்ந்ததாகும்,   குறைவான தடிப்பு    சிவந்த தடிப்பு  நமைச்சல் மற்றும்  அதிக  எரிச்சல் கொண்டதாய் இருக்கும் . உடல் முழுவதும் பரவிக் கிடக்கும்.



நக தடிப்பு சோரியாஸிஸ்




சோரியாஸிஸ் நகங்களில் பள்ளம்,  நிறமாற்றம் நக உடைவு மற்றும் அசாதாரண நக  வளர்ச்சி  உண்டாகும்கைகள் கால்கள்,  விரல் நகங்களைப்  பாதிக்கும் .



பிறப்பு உறுப்பு சோரியாஸிஸ் 

ஆண் பெண் பிறப்பு உறுப்பில் சில சமயங்களில் சோரியாஸிஸ் வருவதுண்டு. ஆண் குறியின்  ஒரு பகுதியாகிய சின்ன  மொட்டு  பகுதியில் பிறப்பு உறுப்பு சொரியாஸிஸ்  பாதிக்கிறது. அதே போல் பெண்களின் தொடையில்பிறப்புறுப்பு,  இடுப்புபிறப்புறுப்புகள் மேலே மற்றும்  பிறப்புறுப்பு,  மற்றும் ஆசன வாய் பகுதிகளில் பாதிக்கும்



]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]



.
சோரியாசிஸ் அதிகமாகும் காரணங்கள்                                                                              -

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
  • சோரியாஸிஸ் பொதுவாக என்ன  என்ன காரணங்களால் அதிகம் ஆகிறது என்று பார்போம்.
  • தொண்டை வீக்க நோய் அல்லது தோல் நோய் போன்ற தொற்றுநோய்கள்.
  • மூட்டை பூச்சி அல்லது கொசுக் கடி.
  • வேனிற்கட்டி.
  • மன அழுத்தம்.
  • புகைப் பழக்கம்.
  • மது அருந்தும் பழக்கம்.
  • கார்பனேட்டப் பட்ட குளிர் பானங்கள்.
  • நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளாலும் சோரியாசிஸ் பாதிப்பு ஏற்படும்.   குறிப்பாக, மனநலப் பிரச்னைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும்  ‘லித்தியம்’  போன்ற மாத்திரைகள் மலேரியா எதிர்ப்பு மருந்துகள்ஸ்டீராய்டு மருந்துகள், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் மருந்துகள், கொழுப்பு- குறைக்க மருந்துகள் கார்டிகோஸ்டீராய்டுகளின் மேற் பூச்சு கிரீம் காரணமாக இந்த சோரியாசிஸ் பாதிப்பு வரலாம். (மருந்து ஒவ்வாமை)
  • சூரிய ஒளி அதிகமாக  உடலில் படுவதால் சோரியாசிஸ் தோல் சேதம் அதிகம்    ஏற்படும்.  ஆனால் சூரிய ஒளி உடலில் குறைவாக படுவதால் சோரியாசிஸ் தோல் சேதம் குறைக்கிறது.
  • சோரியாசிஸ் நோயாளிகள் தோலைச் சொரியாதீர்கள் , செதில்களைப் பிய்காதிர்கள் ஏனெனில் சொரிந்தால் கிருமி தொற்று ஏற்பட்டு சோரியாசிஸ் நோய்யின் அகோரம் அதிகம் ஆகும்.
  • அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் பின்விளைவுகளால் சோரியாசிஸ் நோய் வரலாம்
  • அதிக அளவில் போதைப் பொருட்களைப் பயன் படுத்துவதால்  சோரியாசிஸ் நோய் வரலாம்
  • மன உளைச்சல் மன அழுத்தம் காரணமாக சோரியாசிஸ் நோய் அதிகம் ஆகும். 
  • உடற் பருமன். அதிக எடை சோரியாசிஸ் நோய் பாதிப்பு அதிகமாகிறது.
  • பருவநிலை  மற்றும் காலநிலை மாற்றங்கள் குளிர் காலநிலையால் நோய் பாதிப்பு அதிகமாகிறது.
  • எச் ஐ வி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட்வர்களுக்கு சோரியாசிஸ் நோய் அதிகம் கணப் படுகிறது
  • சின்னம்மை நோயால் பாதிக்கப் பட்ட்வர்களுக்கு சோரியாசிஸ் நோய் அதிகம் கணப் படுகிறது.
  • நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்திறனை குறைக்கும் நோய்கள் (எ.கா., எச்.ஐ.வி) நோயால் பாதிக்கப் பட்ட்வர்களுக்கு சோரியாசிஸ் நோய் அதிகம் கணப் படுகிறது
  • ஹார்மோன் மாற்றங்கள் சோரியாசிஸ் நோயை அதிகம் ஆக்கும்
  • பாக்டீரியா அல்லது வைரஸ்கள் தொற்று சிதைவின் காரணமாக குறிப்பிட்ட வகையான சோரியாசிஸ் நோய் அதிகம் ஆகும்.
 ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


,

சோரியாஸிஸ் நோய்க் காரர்கள் கவனிக்க வேண்டியவைகள்  
                         .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

சோரியாஸிஸ் பெரும்பாலும் அரிக்கும் தன்மை கொண்டதால் கம்பளி மற்றும் செயற்கையால் செய்யப்பட்ட துணிகளை தவிர்க்கவும் .  ஏனெனில் கம்பளி மற்றும் செயற்கையால் செய்யப்பட்ட துணிகள்  அதிக  வெப்பம் உண்டக்குவதால்  ஏற்கனவே வீக்கமடைந்த தோலில் எரிச்சல் அதிகமாகும்.  பருத்தி, சணல், மூங்கில் மற்றும் இலகுவான  இயற்கை இழைகளினால் ஆகிய  நெகிழ்வான மென்மையான ஆடை அணியவேண்டும்.

சுடு நீர் குளிக்க  உபயோகிப்பதால் தோலில் இரத்த ஓட்டம் அதிகரித்து சோரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு ஏற்பட்டு தோல் சிவப்பு நிறம் அடையும். இதனால் தோல் இறந்து மீனின் செதில்களைப் போன்று மினுமினுப்புடன் தோல் உரிதல் அதிகம் ஆகும்.

நைட் ஷேர்டு தாவரஉணவுகள் (உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய்.) பால் பொருட்கள் சிவப்பு இறைச்சி துரித  உணவுகள். ஆல்கஹால் உணவுகளை குறைக்க வேண்டும்.

அதிக நறுமண உணவுப் பொருள்கள். காரம், கரிமசால் மற்றும் உப்பைக் குறைத்து உணவை சாப்பிட வேண்டும். 

முட்டை, அதிக கொழுப்புச் சத்து உள்ள மாமிசங்கள், பக்குவப் படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும்.

புளிப்பு சுவையுடைய அமிலத் தன்மையுடைய உணவுகளைக் குறைக்க வேண்டும்.  சிட்ரஸ் பழங்கள். (ஆரஞ்சு , எலுமிச்சை , நார்த்தை.)

இயற்கை உந்தல்களாகிய மல ஜலத்தை அடக்காதிருத்தல்,

காய்கறிகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 

ஆரோக்கியமான உணவு

நிறைய தண்ணீர்  குடித்தல் .

உடற்பயிற்சி செய்தல்

வேண்டிய அளவு தூக்கம் ஆகியவைகள் சோரியாசிஸ் பாதிப்பைக் குறைக்கும்.



]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
.







.
.


சோரியாசிஸ் தொடர்புடைய பாதிப்புகள்-                                        .


]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]


சோரியாடிக் கீல்வாதம்
உடலில்  நோய் எதிர்ப்பு தன்மையின் குரைவு காரணமாகவும்
சோரியாசிஸ் நோயாளிகளிள் 25% வரை மூட்டு சோரியாடிக் கீல்வாதம்  உண்டாகிறது . சில சந்தர்ப்பங்களில் நகம் சார்ந்த  சோரியாசிஸ் சோரியாடிக் கீல்வாதம் நோய் காரணமாக உருவாகிறது சோரியாசிஸ் சார்ந்த கீல்வாதம் விரல், மூட்டு, விரல், முதுகுத்தண்டு, பெரிய மூட்டுகள், சிறிய மூட்டுகள் போன்ற எல்லா பகுதிகளையும் தாக்கி வலி, வீக்கம், நிறமாற்றம் உண்டாக்கும்

இதய நோய்கள்
சோரியாசிஸ் பொதுவான T- ஹெல்பர் செல்  வகை 1 (Th1) நோய்  தடுப்பாற்றலைக்  கெடுக்கும். அதலால்  மாரடைப்பு நோய் வர வாய்ப்பு உண்டு  சோரியாஸிஸ் இதய நோய்கள் தொடர்புடையது. ஆனால் முக்கிய இருதய ஆபத்து உண்டாக்கும் காரணங்கள் கண்டு கட்டுப்படுத்த முடியவில்லை என்று மருத்துவமனை சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றனர்.
வளர்சிதை மாற்றம் 

 உயர் இரத்த அழுத்தம் -  உயர் இன்சுலின் அளவு மற்றும் -அதிக கொழுப்பு, உயர்வு போன்ற காரணங்களால்  வளர்சிதை மாற்றம் ஏற்படும் .

உளவியல் சார்ந்த கோளாறுகள்
நாட்பட்ட சோரியாசிஸ் நோய் மனநிலையைப் பாதிக்கும் . தோலில் உள்ள விகாரமான தோற்றம் சமூக தொடர்புகளில் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கும் . இதனால்
தன்நம்பிக்கையை குறைக்கும். சோரியாஸிஸ் நோயாளிகள்  உணர்ச்சிவசத்தால்   கோபம்,  சோகம் அல்லது   தர்மசங்கடமான நிலையை  உருவாக்குகின்றனர். சோரியாஸிஸ் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு  இடையே வாழ்க்கை தரத்தையும் மன நிலையையும் ஒரு எதிர்மறை பாதிப்பை உறுவாக்குகிறது.

மற்ற பாதிப்புகள்
சோரியாசிஸ்  நோய், இன்சுலின் எதிர்ப்பு நீரழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய  நோய் மற்றும் வளர்சிதை மாற்றம் , உடல் பருமன், இரத்த கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பு, புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது .

சோரியாசிஸ் தொடர்புடைய  உடல் பருமன்
சோரியாசிஸ் நோய் உடையவர்கள் அதிக வேலை செய்ய இயலாதததால் எடை அதிகமாகி பருமனாக வாய்ப்பு உள்ளது உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு  சோரியாசிஸ் நோயின் கடுமை அதிகம் இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம்
பொதுவாக சோரியாசிஸ் நோயாளிகளுக்கு  உயர் இரத்த அழுத்தம்  அதிகமாக இருக்கிறது. மன நிலை பாதிப்பு உடல் செயல் பாதிப்புகலால் உயர் இரத்த அழுத்தம்  ஏற்படும்.

கண் வீக்கம் மற்றும் கண் வலி
சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு கண் சிவத்தல், கண் வீக்கம் கண் ஒளி உணர்திறன் குரைவு, மற்றும் கண் வலி, பக்க விளைவாக வருகிறது . கண்ணிமையைச் சுற்றி சிவத்தல், கண்  உலர்தல்  அதனால் கண் பார்வை குறைதல் போன்றவை ஏற்படுகின்றன . சோரியாஸிஸ் கீல்வாதம் உடைய நோயாளிகள் சுமார் 30 சதவீதம் கண் வீக்க நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

பார்கின்சன் நோய்- (நடுக்கு வாதம்)
நாள்பட்ட நரம்பு நோய் பதிப்பால் சொரியாசிஸ் நோயாளிகளுக்கு பார்கின்சன் நோய் (நரம்பியல் சார்ந்த நோய்) ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.



]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]