சோம்பு .
சோம்பு
அஞ்சரப் பெட்டியில் உள்ள அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக சோம்பை இன்று பார்ப்போம் = சோம்பு நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் =. சுமார் 2 அடி உயரம் வரை வளரும்.= சோம்பின் பூக்கள் ஜூலை மாதத்தில் வேண்மை நிறத்தில் பூத்து அதன் விதை முதிர்ச்சி அடைந்த பின் அறுவடை செய்யப்படுகிறது. = சோம்பு ஒரு தனித்துவமான வாசனையும் இனிப்பு சுவையைக் கொண்டது= கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியாப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது=.
சோம்பு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் பயிரிட்டு உணவுக்காகவும் மருந்துக்காகவும் உபயோகித்துள்ளனர்=
மருத்துவ உலக தந்தை ஹிப்போகிரட்டிஸ் சோம்பின் மருத்துவக் குணத்தைக் கூறி உள்ளார்= இந்திய மருத்துவத்தில் சோம்பு அதிகம் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது = ஓம வாட்டரைப் போல் சோம்பை வடித்து எடுக்கப்படும் சோம்புத் தீ நீர் = ஜீரண சக்தியை உரு வாக்க நல்ல மருந்து=
சோம்புவின் எண்ணை தலை பேன் , பூச்சிகள், செள் மற்றும் உன்னியைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.=
கண்புரை நோய்க்கு சோம்பு ஒரு நல்ல மருந்து = 6 கிராம் சோம்பை காலையிலும், மாலையிலும் உண்ண ஆரம்பகால கண்புரை நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் =
சோம்பு மெலடோனின் என்னும் நேச்சுரல் ஹார்மோனை பிட்யூட்டரி சுரப்பியால் சீராக சுரக்க வைத்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.= இதன் மூலம் தூக்கம் இன்மை, மன நோய், மன அழுத்தம், வலிப்பு நோய்களுக்கு சோம்பு ஒரு நல்ல மருந்து =
சோம்பு செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து = இரப்பை சார்ந்த வாந்தியெடுத்தல், குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயு பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து = சோம்பு பசியைத் தூண்டுகிறது. சில அசைவ உணவகங்களில் சோம்பை உணவுக்கு பின் கொடுப்பார் = வாய் மற்றும் பற்களின் ஆரோகியத்துக்கு நல்லமருந்து = வாய் கொப்பளிக்கும் மருந்துகளில் சோம்பு எண்ணையைச் சேப்பர் = சோம்பு எண்ணை வாயில் உறுவாகும் கிரிமிகளைக் கொல்லும் =
சோம்பு இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு நல்லமருந்து = சோம்பு ஆண்மைக் குறைவுக்கு நல்ல மருந்து = தாய்மார்களுக்கு சோம்பு தாய்ப் பாலைக் கூட்டும்= தாய்ப் பால் மேம்படுத்தும் எஸ்ட்ரோஜெனிக் விளைவுகளைக் சோம்பு கொண்டுள்ளது.= குழந்தை இன்மைக்கு சோம்பு நல்லமருந்து = மாதவிடய் காலத்தில் ஏற்ப்படும் பிடிப்பையும் வலியையும் சோம்பு நீக்கும் = மாதவிடை சுழற்சியை சரி செய்கிறது = மாதவிடை தாமதத்திற்கு சோம்பு ஒரு நல்ல மூலிகை =
சோம்பு நுரை ஈரல் சார்ந்த நோய்களுக்கு நல்லமருந்து = சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. = சோம்பு இருமல் மருந்துகளிலும் தொண்டைப்புண் குணமாக்கும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றது=. நுரையீரல் சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, இன்ப்ளுன்சா காய்ச்சல், நிமோனியா மற்றும் பினிசத்திற்கு ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகும் =
விளைவுகளும் உட்கொள்ளும் அளவு இனி பார்ப்போமா = கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பெரியவர்கள் குழந்தைகளுக்கு இயல்பான உணவின் பகுதியாக பயன்படுத்தப்படும் போது சோம்பு பாதுகாப்பானது.எந்த பக்க விளைவுகள் இல்லாதவை = பொதுவாக 5௦௦ மில்லி கிராம் சோம்பை முன்று வேளை மருந்தாக உபயோகிக்கலாம்= சோம்பை கசாயமாக வேக வைத்து உண்ணக்கூடாது= ஏன் எனில் சோம்பில் உள்ள எண்ணை எளிதில் ஆவியாகும் =ஆகவே சோம்பைச் சூரணம் பண்ணிச் சாப்பிட வேண்டும்=
சோம்பு பற்றிய சில காப்புரிமைகள்
சோம்பு கொசு போன்ற இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளை விரட்டும் தன்மை உடையது என்று ஆய்வு செய்து டொனால்ட் ஈ ப்ளம்மர் சோனா ஏ ப்ளம்மர் என்பவர்கள் ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளனர்=
சோம்பு பொடி முகத்தில் உருவாகும் சுருக்கத்திற்கு நல்ல மருந்து என்று ஆய்வு செய்து பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஜீன் பாபிகி என்பவர் காப்புரிமை பெற்றுள்ளனர்=
சோம்பு கொசு போன்ற இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளை விரட்டும் தன்மை உடையது என்று ஆய்வு செய்து டொனால்ட் ஈ ப்ளம்மர் சோனா ஏ ப்ளம்மர் என்பவர்கள் ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளனர்=
சோம்பு பொடி முகத்தில் உருவாகும் சுருக்கத்திற்கு நல்ல மருந்து என்று ஆய்வு செய்து பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஜீன் பாபிகி என்பவர் காப்புரிமை பெற்றுள்ளனர்=
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக