JavaScript

ஏலக்காய்

ஏலக்காய்                                                                                                                                    .

ஏலக்காய்
அஞ்சரப் பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் = இன்று ஏலக்காய் பற்றி பார்ப்போம் = ஏலக்காய் இஞ்சிக் குடும்ப்பத்தைச் சார்ந்தது = ஏலத்தில் சிறிய ஏலம் பெரிய ஏலம் என்ற இரண்டு வகை உண்டு = இந்த இரு இனமும் இந்தியாவுக்கு சொந்தமானது = கி.மு. 720 ல் பாபிலோன் அரசர்களின் தோட்டங்களில் ஏராளமாக ஏலத்தை வளர்த்து வந்தனர் என்று கூறப்படுகிறது .= பண்டைய எகிப்தியர்கள் தங்கள் பற்கள் வெளுப்பதற்கும் சுவாசப் புத் உணர்வுக்காகவும்  ஏலக்காயை மெல்லும் பழக்கம் இருந்துள்ளது = ஏலக்காய் இனிமையான வாசனை மற்றும் ருசியைக் கொண்டுள்ளது, எனவே இது பொதுவாக சுவையூட்டும் உணவுக்காகவும் மருந்துக்காகவும் இந்தியாவில் பயன்படுத்தி உள்ளனர்=
ஏலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மைக்கு நல்லமருந்து = ஏலம் சிரிங்கார உணர்வை தூண்டும் சக்தி கொண்டது=.
ஏலம் மற்றய வாசனைப் பொருள்கள் போல் குமட்டல், வாந்தி, வயிற்று வலி மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு வாய் புண் போன்ற செரிமானக் கோளாறுகளுக்கும் தொண்டை வலி, காசநோய் போன்ற  நுரையீரல் நோய்களுக்கும் ஒரு நல்லமருந்து=.
சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக் கற்களுக்கு ஏலக்காய் நல்ல மருந்து.
ஏலக்காயில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டங்கள். சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், மற்றும் துத்தநாகம் ஆகியவைகள் உள்ளன=
ஏலாக்காய் பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி கற்க்கும் திறனை அதிகரிக்கவும் நினைவு ஆற்றலை அதிகரிக்கவும் நுண்ணறிவு உண்டாக்கவும் பயன்படுத்தி உள்ளனர்=
ஏலாக்காயின் மென்மையாக்கும் குணமும் வலியைக் குணமாக்கும் குணமும் உதரவிதானத்தை நிதானமாக்கி விக்கலைக் குறைக்கும் குணம் கொண்டது=
ஏலக்காய் அதிகப்படியான தாகத்தை குறைக்கும் தன்மை கொண்டது= தாகத்தைக் குறைக்க ஏல விதைகளை சுவைத்துக் கொள்ளலாம் = ஏலக்காய் கலந்த காபி மற்றும் தேநீர் அதிகமான தாகத்தை உடனடியாக குறைக்கிறது=.
ஏலக்காய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இரத்தத்தில் உள்ள நச்சுகளை குறைக்கிறது,
ஏலக்காய் ஒவ்வாமை விளைவுகளான தோல்அழற்சிகள் மூச்சித் திணறல் போன்றவைகளைக் குணமாக்கும்=
ஏலக்காய் தலை சுற்றுக்கு நல்ல மருந்து= ஜந்து அல்லது ஆறு ஏல அரிசியை ஜந்து கிராம் கருப்பட்டியுடன் நுனிக்கி இரண்டு அல்லது மூன்று வேளை தினமும் சாப்பிட வேண்டும்=
ஏல அரிசியை தயிரில் கலந்து உண்ண சிறு நீர் கடுப்பு நீங்கும்=
புகைப் பிடிப்பவர்க்கு புகை பழக்கத்திலிருந்து விடுபட இரு மடங்கு நன்கு பொடித்த ஏல அரிசியையும் ஒரு மடங்கு விதை எடுத்த விதை முந்திரியை ஒன்றாக அரைத்து புளியங் கோட்டை அளவு உருட்டி வைத்து புகை பிடிக்கும் நோக்கம் வரும்போது ஒரு உருண்டையை சுவைக்க   தூக்கம் அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தம் குறைகிறது = இதனால் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம் =
ஏலக்காயினால் உண்டாகும் விளைவுகளும் உட்கொள்ளும் அளவையும் இனி பார்ப்போமா
ஏலக்காய்க்கு எந்தவித பக்க விளைவுகள் கிடையாது = பித்தப்பையில் கல் இருந்தால் ஏலக்காய் அதிகம் உண்ண வேண்டாம் = ஏன் எனில் ஏலக்காய் விதை பித்தப்பை அழற்சியைத் தூண்டும் = ஏலக்காயை மருந்தாக உண்ணும் அளவை - வயது மற்றும்  வியாதியின் தன்மை கொண்டு நிர்னையக்கலாம்=
ஏலக்காய் சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகள்
ஏலக்காய் எண்ணை பல்லை சுத்தம் செய்யவும் பல்லில் துர்நாற்றத்துக்கு காரணமான நுண்ணுயிர்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது என்றும் ஏலக்காய் எண்ணையை சுயிங்கம் மற்றும் பல்லை சுத்தம் செய்யும் ஸ்ப்ரே களுக்கு உபயோகிக்கலாம் என்று ஜேம்ஸ் மேக்ஸ்வெல் என்பவர் ஆய்வு செய்து வேம் ரிங்லர் என்ற நிறுவனம் சார்பாக காப்புரிமை பெற்றுள்ளர்

கிராம்பு                                                                                                                                            .

கிராம்பு
அஞ்சரப் பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக .கிராம்பை இன்று பார்ப்போம் = கிராம்பு மரத்திலிருந்து பெறப்படும் பூவின் மொடு  ஒரு நறுமண மிக்க ஆகும் = கிராம்பு இந்தோனேசியாவில் உள்ள மாலுக் தீவுகளுக்கு அவை சொந்தமானதாகும்= கிராம்பு 8-12 மீ உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமையான மரம் = பெரிய இலைகள் மற்றும் சிவப்பு நிற கொத்து கொத்தான மலர்கள் கொண்டது = மொட்டுகள் ஆரம்பத்தில் ஒரு மங்கலான நிறம் கொண்டது படிப்படியாக பச்சை நிறமாகி, பின்னர் ஒரு பிரகாசமான சிவப்பாக மாறும் போது கிராம்பு அறுவடை செய்யப் படுகிறது =. பற்பசை, சோப்புகள், ஒப்பனைப் பொருள்கள், வாசனை திரவியங்கள், மற்றும் சிகரெட்.தயாரிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது=
கிராம்பு காலராவைப் பரப்பும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது.
கிராம்பை இள வறுவல் செய்து தேனுடன் கலந்து சாப்பிடும்போது காலராவைக் கட்டுப்படுத்தும் =  கிராம்பு  செரிமானக் கோளாறு இரைப்பை எரிச்சலுக்கு நல்ல மருந்து -
கிராம்பு மற்றும் உப்பைச் சேர்த்து சுவைக்கும் பொது இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் தொண்டை வீக்கம் குணமாகும் = ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கிராம்பின் இலையுடன் தேன் சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்= 

கிராம்புடன் நல்லஎண்ணையைக் கலந்து காதில் ஊற்றினால் காதில் உள்ள வலி போகும்.= பீநிசத்திற்கு கிராம்பு ஒவ்வாமையை சரி செய்து மூக்கு அடைப்பை சரி செய்கிறது =
இப்போதும் பல் மருத்துவர்கள் கிராம்பு எண்ணையை சிதைந்த சொத்தைப் பற்களுக்கு உபயோகிக்கிறார்கள்= கிராம்பு எண்ணை பல் வலியை நீக்குவதுடன் பல் வலிக்கு காரணமான பாக்டீரியாக்களை கொல்கிறது =
கிராம்பில் உள்ள யுசினால் என்ற ரசாயன எண்ணை உடல் மற்றும் முட்டு வலியைக் குணமாக்கும் வீக்கத்தை வற்றவைக்கும் = மூட்டுகளின் இயக்கத்தை அதிகரிக்கிறது =
கிராம்பு இன்சுலின் செயல்பாட்டை மூன்று மடங்கு தூண்டுகிறது. அதனால் உடலில் உள்ள நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.=
கிரம்பினால் செய்த களிம்பு மூலத்தில் வலியைக் குறைக்கிறது மூலத்தைக் குணமாக்கிறது=
கிராம்பு எண்ணை மற்றும் களிம்பு ஒரு நல்ல கொசு விரட்டி= சுமார் 5 மணிநேரம் வரை கொசுக்களைத் தடுக்கும் .குணம் கொண்டது என்று. ஆய்வுகள் கூறுகின்றன=
கிராம்பு சேர்க்கப் பட்ட சிகரெட்கள் புகையிலையினால் வரும் தீமைகளைக் குறைகிறது=
கிராம்பு எலும்பை பாது காக்கும் குணம் கொண்டது = எலும்பின் அடர்த்தி குறையும் தன்மையாகிய ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் கிராம்பு எலும்பின் அடர்த்தியைக் கூட்டி எலும்பை பாதுகாக்கிறது=
கிராம்பை அரைத்து பாலில் கலந்து உண்ண தலை வலி விரைவாக குறைகிறது=
கிராம்பினால் உண்டாகும் விளைவுகளும் உட்கொள்ளும் அளவு இனி பார்ப்போமா
கிராம்பை உணவாக வாயில் எடுத்துக் கொண்டால் பாதுகாப்பானது. எந்த பக்க வளைவுகள் இல்லாதது= கிராம்பு எண்ணை வாய் உணர்திறனைக் குறைக்கும்,
கிராம்பு சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகள்
மண்ணால் பரவும் பூஞ்சை நோய்களைக் கட்டுப்படுத்தும் குணம் கிராம்பு எண்ணெய்க்கு உண்டு என்று பிராஸ் நாட்டைச் சேர்ந்தஆர் ஜேம்ஸ் ஃபிரடெரிக் வால்டர் என்பவர் தெர்மோ ட்ரைலோகி என்ற நிறுவனம் சார்பாக காப்புரிமை பெற்றுள்ளனர்=

கால்நடைகளின்  இரைப்பை  நுண்ணுயிரிகளில் உள்ள நுண்ணுயிரிகள் கட்டுப்படுத்துவதற்கு கிராம்பு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு செய்து நைகல் ப்ளம்மர் என்பவர் இன்டர்வியஸ் லிமிடெட் சார்பாக காப்புரிமை பெற்றுள்ளனர்=






சோம்பு                                                                                                                                          .
சோம்பு
அஞ்சரப் பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக சோம்பை இன்று பார்ப்போம் = சோம்பு நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் =. சுமார் 2 அடி உயரம் வரை வளரும்.= சோம்பின் பூக்கள் ஜூலை மாதத்தில் வேண்மை நிறத்தில் பூத்து அதன் விதை முதிர்ச்சி அடைந்த பின் அறுவடை செய்யப்படுகிறது. = சோம்பு ஒரு தனித்துவமான வாசனையும் இனிப்பு சுவையைக் கொண்டது= கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியாப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது=.
சோம்பு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் பயிரிட்டு உணவுக்காகவும் மருந்துக்காகவும் உபயோகித்துள்ளனர்=
மருத்துவ உலக தந்தை ஹிப்போகிரட்டிஸ் சோம்பின் மருத்துவக் குணத்தைக் கூறி உள்ளார்= இந்திய மருத்துவத்தில் சோம்பு அதிகம் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது = ஓம வாட்டரைப் போல் சோம்பை வடித்து எடுக்கப்படும் சோம்புத் தீ நீர் = ஜீரண சக்தியை உரு வாக்க நல்ல மருந்து=
சோம்புவின் எண்ணை தலை பேன் , பூச்சிகள், செள் மற்றும் உன்னியைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.=
கண்புரை நோய்க்கு சோம்பு  ஒரு நல்ல மருந்து =  6 கிராம் சோம்பை காலையிலும், மாலையிலும் உண்ண ஆரம்பகால கண்புரை நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் =
சோம்பு மெலடோனின் என்னும் நேச்சுரல் ஹார்மோனை பிட்யூட்டரி சுரப்பியால் சீராக சுரக்க வைத்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.= இதன் மூலம் தூக்கம் இன்மை, மன நோய், மன அழுத்தம், வலிப்பு நோய்களுக்கு சோம்பு ஒரு நல்ல மருந்து =
சோம்பு செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து = இரப்பை சார்ந்த வாந்தியெடுத்தல், குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயு பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து = சோம்பு பசியைத் தூண்டுகிறது. சில அசைவ உணவகங்களில் சோம்பை உணவுக்கு பின் கொடுப்பார் = வாய் மற்றும் பற்களின் ஆரோகியத்துக்கு நல்லமருந்து = வாய் கொப்பளிக்கும் மருந்துகளில் சோம்பு எண்ணையைச் சேப்பர் = சோம்பு எண்ணை வாயில் உறுவாகும் கிரிமிகளைக் கொல்லும் =
சோம்பு இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு நல்லமருந்து = சோம்பு ஆண்மைக் குறைவுக்கு நல்ல மருந்து = தாய்மார்களுக்கு சோம்பு தாய்ப் பாலைக் கூட்டும்= தாய்ப் பால் மேம்படுத்தும் எஸ்ட்ரோஜெனிக் விளைவுகளைக் சோம்பு கொண்டுள்ளது.=  குழந்தை இன்மைக்கு சோம்பு நல்லமருந்து = மாதவிடய் காலத்தில் ஏற்ப்படும் பிடிப்பையும் வலியையும்  சோம்பு நீக்கும் = மாதவிடை சுழற்சியை சரி செய்கிறது = மாதவிடை தாமதத்திற்கு சோம்பு ஒரு நல்ல மூலிகை =
சோம்பு நுரை ஈரல் சார்ந்த நோய்களுக்கு நல்லமருந்து = சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. =  சோம்பு இருமல் மருந்துகளிலும் தொண்டைப்புண் குணமாக்கும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றது=. நுரையீரல் சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, இன்ப்ளுன்சா காய்ச்சல், நிமோனியா மற்றும் பினிசத்திற்கு ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகும் =
விளைவுகளும் உட்கொள்ளும் அளவு இனி பார்ப்போமா = கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பெரியவர்கள் குழந்தைகளுக்கு இயல்பான உணவின் பகுதியாக பயன்படுத்தப்படும் போது சோம்பு பாதுகாப்பானது.எந்த பக்க விளைவுகள் இல்லாதவை = பொதுவாக 5௦௦ மில்லி கிராம் சோம்பை முன்று வேளை மருந்தாக உபயோகிக்கலாம்= சோம்பை கசாயமாக வேக வைத்து உண்ணக்கூடாது= ஏன் எனில் சோம்பில் உள்ள எண்ணை எளிதில் ஆவியாகும் =ஆகவே சோம்பைச் சூரணம் பண்ணிச் சாப்பிட வேண்டும்=
சோம்பு பற்றிய சில காப்புரிமைகள்
சோம்பு கொசு போன்ற இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளை விரட்டும் தன்மை உடையது என்று ஆய்வு செய்து டொனால்ட் ஈ ப்ளம்மர் சோனா ஏ ப்ளம்மர் என்பவர்கள் ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளனர்=
சோம்பு பொடி முகத்தில் உருவாகும் சுருக்கத்திற்கு நல்ல மருந்து என்று ஆய்வு செய்து பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஜீன் பாபிகி என்பவர் காப்புரிமை பெற்றுள்ளனர்=
இலவங்கப்பட்டை                                                                                                                           .

 

இலவங்கப்பட்டை
அஞ்சரப்பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக .இலவங்கப்பட்டையை இன்று பார்ப்போம் = இலங்கை, இந்தியா, ஜாவா, சுமத்திரா, வியட்நாம், பிரேசில் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் பயிரிடப்படும் மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள் =  இது 10 -15 மீட்டர் உயரம்வரை வளரும். இதில் மிக உயர்ந்த தரம் இலங்கையின் இலவங்கமே = இதற்கு ரொம்ப வெப்பமோ அதிக குளிரோ ஆகவே ஆகாது. மிதமான வெப்பம், ஈரப் பதமான சீதோஷ்ணநிலையில் பட்டை மரம் வளமாக வளரும் = இலவங்கத்தின் மலர்களும் பச்சையாகவே இருக்கும். ஆனால் நல்ல மணத்தைக் கொண்டிருக்கும். = நன்கு முதிர்ந்த மரத்தின் உள்பகுதி பட்டையை உரித்து வெயிலில் உலர வைப்பார்கள். பட்டை மெலிதாக சூரிய வெப்பத்தில் காயும்போதே சுருள் சுருளாக மெல்லிய குழல் போல சுருண்டுவிடும். இதனை 5 -10 செ.மீ நீளமுள்ள சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிவிடுவார்கள்.
சுருள் பட்டை மென்பானங்களிலும், மருந்துப் பொருளிலும், அழகு சாதனப் பொருள்களிலும், உணவுப் பொருளிலும் இதன் வாசனைக்காக கலக்கின்றனர்., இலவங்கப் பட்டை தயிர் பானத்திலும் தேநீரிலும் கலந்து உண்பது உண்டு.
இலவங்கப் பட்டை உணவுப் பொருள்களை, பதப்படுத்தும் குணம் கொண்டது.  உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. = இலவங்கப்  பட்டை பல்வலிக்கும் வாயின் துர் நாற்றத்தைப் போக்க பயன் படுத்தப்படுகிறது.
நரம்பியல் நோய்களுக்கு இலவங்கப்பட்டை நல்லமருந்து =  மூளையில் பிராண வாயுவை அதிகரிக்க வைத்து நரம்பு சார்ந்த சிதைவுகளில் இருந்து காக்கிறது = மேலும் இலவங்கப்பட்டை மூளையில் ஏற்ப்பட்டுள்ள வீக்கத்தை குறைய வைத்து பிராண வாயு உபயோகத்தை கூட்டுகிறது = இதனால் நரம்பு மற்றும் மூளையில் ஏற்ப்படும் திசுக்களின் சேதம் அல்லது செயலிழப்பிலிருந்து காக்கிறது=
பார்கின்சன் நோய் என்ற நடுக்குவாதம் இரண்டாவது பெரிய நரம்பியல் நேய்யாகும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களில் 2% பேர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.= பார்கின்சன் நோயில் மத்திய நரம்பு மண்டலத்தில் சேதமடைந்த செல்களைப் இலவங்கப் பட்டை பாதுகாக்கிது = அல்சீமர் என்ற மறதி நோய்க்கும் இலவங்கப்பட்டை ஒரு நல்லமருந்து என்று ஆய்வுகள் கூறுகின்றன =

இலவங்கப் பட்டையின் எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பி பூஞ்சையகற்றி = இரத்தத்தில் உள்ள  குளுக்கோஸ், இரத்த அழுத்தம் மற்றும் சீரம் கொழுப்பை இலவங்கப் பட்டை குறைக்கும் =பசியின்மை, வயிற்று உப்பிசம் செரியாமை ஆகியவைகளுக்கு இலவங்கப்பட்டை நல்லமருந்து = பெருங்குடல், மற்றும் வயிறில் உள்ள மென்மையான தசை சுருக்கங்களை குறைத்து = குடல் புண்ணுக்கு நல்ல மருந்தாகஉள்ளது=
இலவங்கப்பட்டை பற்றிய விளைவுகளும் உட்கொள்ளும் அளவு இனி பார்ப்போமா
இலவங்கப்பட்டை பக்க விளைவுகளை ஏற்படுத்தாது =. இலவங்கப்பட்டை பயன்படுத்துவதன் மூலம் சிலருக்கு வாய் மற்றும் உதடுகள் எரிச்சல், புண்கள் ஏற்படலாம்.= தோலில் தடவும் பொது சிலருக்கு தோல் சிவத்தல் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
இலவங்கப்பட்டை சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்=
தோலில் நிறத்தை வெண்மையாக்க இலவங்கப்பட்டையின் எண்ணை வெளி உபயோகத்துக்கு  ஒரு நல்ல மருந்து = தோலில் உள்ள  மெலனின் செயல்பட்டைக் குறைத்து தோலை வெண்மை யாக்குகிறது = தோலில் சூரிய ஒளியால் ஏற்ப்படும் தாக்கங்களையும் தோலில் ஏற்ப்படும் மாசுகளையும் சுருக்கங்களையும் குறைக்கும் என்று ஆய்வு செய்து ஜப்பான் நாட்டைச்சேர்ந்த மசகோ நாகுணு என்பவர் ஷிஸிடோடோ என்ற கம்பெனி சார்பில் காப்புரிமை பெற்றுள்ளார்= இலவங்கப்பட்டை வயிற்றில் இரைப்பை அமிலம் உற்பத்தியைக் குறைக்கிறது=   வயிற்று புண்னை ஆற்றும் குணம் கொண்டது = பைலோரஸ் வைரஸ்ஸல் பாதிக்கப்பட்ட குடல் புண்ணுக்கும் இலவங்கப்பட்டை ஒரு நல்ல மருந்து= இரைப்பை சுவர் சளிப் படலத்தை சரி செய்கிறது= வயிற்றுப்போக்குக்கு இலவங்கப்பட்டை ஒரு நல்ல மருந்து என்று அல்கசோமி என்பவர் ஆய்வு செய்துள்ளார்

வெந்தயம்                                                                                                                                    .


வெந்தயம்
அஞ்சரப் பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக வெந்தயத்தை இன்று பார்ப்போம்== வெந்தயம் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளுக்கு சொந்தமான பயிர்= ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
இப்போது கீறைக்காகவும் மற்றும் விதைக்காகவும் உலகெங்கிலும் பரவலாக பயிரிடப்படும் மூலிகைச்செடி= சமையலில்பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள்= இது உணவுப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது.= வெந்தயம் ஒரு தண்டிலிருந்து பல கிளைகள் கொண்ட செடி = 2 அடி உயரமாக வளரும் = இலைகள் சிறியதாய் ஊதா மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் = இதன் பூக்கள் வெள்ளை அல்லது இளம் ஊதா நிறம் கொண்டது =
வெந்தயம் சக்கரை நோய்க்கு நல்ல மருந்து- வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ஹைட்ராக்ஸி ஐசோலினின் குடலில் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைகிறது- இதனால் ஒன்றாம் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு உணவுக்கு முன் உள்ள இரத்த சர்க்கரை அளவையும் உணவுக்கு பின் உள்ள இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் இன்சுலின் சுரப்பதைக் கூட்டுகிறது= நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளின் தேவையைக் குறைக்கிறது=
வெந்தயம் நோய்களிலிருந்து மீளுபவர்களுக்கு  பசியைத் தூண்டும்- இதனால் எடை அதிகரிகிறது-
வெந்தயத்தில் உள்ள நார் மற்றும் விளுவிளுப்புத்தன்மை காரணமாக ஒரு நல்ல  மலமிழக்கியாக செயல்படுகின்றது=.
சோகை வயிற்று கோளாறுகள், மூச்சுத்திணறல், சுவாச கோளாறுகள், வாய் புண்கள், தொண்டை தொற்று, வீக்கம், காயங்கள் மற்றும் தூக்கமின்மை ஆகிய நோய்களுக்கு வெந்தயம் நல்ல மருந்து-==வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து முடிக்கும் முடியின் கால்களுக்கும் தடவி ஊற வைத்துக் குளிக்க முடி பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். முடியும் வளரும் பொடுகுகள் போகும்=
வெந்தயம் பல நூற்றாண்டுகளாக தாய்மார்களுக்கு ஒரு சிறந்த தாய் பால் கூட்டும் மருந்தாக உபயோகிக்கப் பட்டுள்ளது-  இதை பல ஆய்வுகள் உறுதி செய்கின்றன- தாய்மார்களின் மார்பக அளவு அதிகரிப்பதற்கு வெந்தயம் ஒரு நல்ல மருந்து- வெந்தயம் உண்பதால் நல்ல அழகான வனப்பான மார்பகம் கிடைக்கும்- வெந்தத்தின் எண்ணையை கொண்டும் மார்பக வளர்ச்சிக்கு மசாஜ் செய்யும் வழக்கம் உண்டு- வெந்தயம் குழந்தைஇன்மைக்கு நல்ல மருந்து= 

வெந்தயத்தில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், செலினியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் ஃபோலிக் அமிலம், ரிபோபலாவின், பைரிடாக்ஸின் (வைட்டமின் B6), நியாசின் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற வைட்டமின்கள் உள்ளன= 

பெருங்குடலில் பித்த உப்புகளின் மூலம் கொழுப்புச் சத்து உறிஞ்சப் படுவதை வெந்தயம் தடுக்கிறது.= வெந்தயம் குடல் புண்ணுக்கு நல்ல மருந்து-
உலகளவில் மரணத்தை உறுவாக்குவதில் இரண்டாம் இடத்தில் இருப்பது புற்றுநோய். = புற்றுநோய்க்கு வழக்கமான சிகிச்சைகள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நோயாளியின் ஆயுளை ஒரு சில வருடங்கள் நீட்டிக்க வைக்க முடிகிறது.= ஆனால் வெந்தயம் புற்று வராமல் காக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது=
வெந்தயம் பற்றிய விளைவுகலையும் உட்கொள்ளும் அளவுகலையும் இனி பார்ப்போமா = தினமும் 3.5 கிராம் வெந்தயத்தை மருந்தாக  எடுத்தால் எந்த விளைவையும் ஏற்படுத்தாது-  அதிகமாக எடுத்தல் உடலில் ஒரு நாற்றம் ஏற்ப்படும் வயிற்றுப்போக்கு, வயிறு சரியின்மை, வாயு தொந்திரவு ஏற்ப்படும்=,
வெந்தயம் சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்= வெந்தயம் பெண்களின் மார்பக-மேம்படுத்தும் என்று ஆய்வுகள் செய்து ஜோசப் மைக்கேல் எர்னஸ்ட் ஆலன் ஸ்மித் என்பவர்கள்  = வைட்டல் டைனமிக்ஸ் இன்க் என்ற நிறுவனம் சார்ந்து காப்புரிமை பெற்றுள்ளார்=
நீரிழிவு நோய்க்கு வெந்தயம் நல்ல மருந்து என்று ஆய்வு செய்து
= கார்டியன் ஹோவர்ட் என்பவர் காப்புரிமை பெற்றுள்ளார்=

சீரகம்                                                                                                                                            .



சீரகம்
நமது சமயல் அறையில் உள்ள அஞ்சரப் பெட்டியில் உள்ள அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் இன்று சீரகம் பற்றி பார்ப்போம்= சீரகம் 30-50 செ.மீ. (12-20 அங்குல) உயரம் வரை வளரம் செடியாகும். தண்டு சாம்பல் அல்லது இருண்ட பச்சை நிறத்தில் உள்ளது. இலைகள் 5-10 செ.மீ. (2-4 அங்குலம்) நீண்டு நூல் போன்று இருக்கும். மலர்கள் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு, நிறத்தில் கூட்டாக குடை வடிவில் இருக்கும்.
 
எகிப்தியர்கள்  சீரகத்தை மருந்துகள் செய்வதற்கு மூலப்பொருளாக உபயோகித்துள்ளனர் = சீராக விதைகள் எகிப்திய பிரமிடுகளில் கண்டுபிடித்துள்ளனர்=
 
சீரகம் மணம்,சுவை,செரிமானத்தன்மைக்காக உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.= கேரளா நாட்டில் சீரக வென்னீர் அதிக அளவில் உபயோகிப்பர்=
 
சீரகம் பசியை அதிகரிக்க உதவுகிறது= மற்றும் உணவை செரிமானம் செய்ய  உதவுகிறது. இது சுவை மொட்டுகளைத் தூண்டி உமிழ்நீர் சுரப்பை ஊக்குவிக்கிறது. = சீரகம் வாந்தி மற்றும் குமட்டலுக்கு நல்லமருந்து= சீரகம் குடலில் பயனுள்ள பாக்டீரியங்களை அதிகரிக்க வைக்கும் -  இரைப்பை மற்றும் குடல் ரீதியான நேய்களுக்கு  சீரகம் ஒரு நல்லமருந்து,
சீரகம் புற்றுநோயைத் தடுக்கும் வல்லமை கொண்டது ,ஈரல் மற்றும் வயிற்று பெருங்குடல் பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.
 
பாலூட்டும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள் தாது உப்புக்கள் சீரகத்தில் உள்ளது = மேலும் சீரகம் பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப் படுத்தும் = இது ஆண்மக்களின் ஆண்மைக் குறைவை சரி செய்வதுடன் விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது=
எடை இழப்புக்கான மருந்துகள் தயாரிப்புகளில் சீரகம் அதிகம் சேர்க்கப்படுகிறது= சீரகம் உடலில் கொழுப்பு அளவைக் குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது.
 
சீரகம் ஒரு நல்ல சிறுநீர் பெறுக்கி = சீரக தண்ணீர் கொடுத்த 24 மணி நேரத்தில் உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் சிறுநீர்ப் பெருக்கம் அதிகமாகும் = உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசிய உப்புக்கள் அதிகமாக இருந்தால் சீரகம் வெளியேற்றுகிறது = சீரகம் சிறுநீரகத்தில் நச்சுத்தன்மையோ அல்லது வேறு எந்த எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
சீரகம் T செல்களின் செயல்பாட்டை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன=
சீரகம் கிராம்-பாஸ்சிட்டிவ் மற்றும் கிராம்-நெகட்டிவ் எச் பைலோரி பாக்டீரியக்களை அழிக்கும் மேலும் வளர்ச்சியைத் தடுக்கும் குணம் கொண்டது =
 
சீரகம் சோதனையில் நீரிழிவு நோய்க்கு நல்லமருந்து என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது=சீரகம் இன்சுலின் தேவைக்கு சுரக்க வைப்பதுடன் இன்சுலினை உடலில் உபயோகிக்க வைக்கிறது = 

அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சீரகம் புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் சீரகம் பெருங்குடல் புற்று நோயைத் தடுக்கும் என்றும் ஆய்வு செய்துள்ளனர்=
வெங்காயச் சாறு சீராக தூள் சேர்த்த கலவையை தேள் கடிக்கு கடி வாயில் பூசுவது தேள் கடிக்கு நல்ல நிவாரணமாக அமைகிறது=

சீரகம் பற்றிய விளைவுகளையும் உட்கொள்ளும் அளவுகளையும் இனி பார்ப்போம் 
வாய்மூலம் எடுக்கும் போது முற்றிலும் பாதுகாப்பானது= இரத்த சர்க்கரையை சீரகம் குரைக்கும்=
 
சீரகம் சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்=
=சீரகம் உணவு மருந்துகள் வைட்டமின்கள் ஊட்டச்சத்துக்கள் தாது உப்புக்களை உடலில் செமிக்க வைத்து உடலில் சேர்க்கும் தன்மை கொண்டது என்று ஆய்வு செய்து அதற்க்கான காப்புரிமையை French ==Council Of Scientific And Industrial Research பெற்றுள்ளனர்
==சிகரெட் குட்கா, பான் மசாலா மற்றும் பிற ஒத்த புகையிலையின் நச்சுத்தன்மைக்கு ஒரு மாற்று மருந்தாகவும் சீரகம் உள்ளது = என்று அருண் குமார் மற்றும் கரீத் அவர்கள் ஆய்வுகள் செய்து காப்புரிமை பெற்றுள்ளனர்=




இஞ்சி                                                                                                                                            .


 இஞ்சி
நமது சமயல் அறையில் உள்ள அஞ்சரப் பெட்டியில் உள்ள மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் = இன்று இஞ்சைப் பற்றி பார்ப்போம்= இஞ்சி  உலகெங்கும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண மருத்துவ மூலிகை ஆகும். = இஞ்சி பச்சை நிற இலை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டது – சுமார் ஒரு மீட்டர் உயரம் வளரும் செடியாகும் = இதுவும் மஞ்சள் குடும்பத்தைச் சார்ந்தது =  உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' =  சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) இஞ்சி "பொதுவாக பாதுகாப்பானது" என்று அறிவித்துள்ளனர் = இஞ்சியின் நல்ல குணங்கள் காரணமாக, சமீப காலத்தில் வளர்ந்த நாடுகளின் கவனத்தை இஞ்சி பெற்றிருக்கிறது,

இஞ்சி ஒரு நல்ல வலிக் குறைக்கும் மூலிகை = இஞ்சி தினம்,2 கிராம் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், தசை வலியைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது=
 
இஞ்சி மாதவிடாய் காலங்களில் ஏற்ப்படும் வலியைக் குறைக்கும் =
இஞ்சி கீல்வாதத்திற்கு ஒரு நல்ல மருந்து – கீல்வாதத்தினால் ஏற்ப்படும் மோசமான விளைவுகளை மேம்படுத்துகிறது, 
 
இஞ்சி ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்து . ஆஸ்துமாவினால் ஏற்ப்படும் நுரையீரல் சுருக்கத்தை சரி செய்கிறது. இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியைக் உருவாக்கி ஆஸ்துமா நோயின் அகோரத்தைக் குறைக்கிறது=
 
இஞ்சி வயிற்றில் உண்டாகும் புண்ணுக்கு நல்லமருந்து  =வயிற்று புண்னை உருவாக்கும் H பைலரிஸ் வைரஸ்ஸின் வளர்ச்சியைத் தடுக்தும், வயிற்றின் அமில சுரப்பைக் குறைப்பதன் மூலம் வயிற்று புண்னைச் சுகமாக்க இஞ்சி நல்லமருந்து=

இஞ்சி குமட்டல் வாந்தி மற்றும் செரியாமையால் ஏற்ப்படும் அசௌகரியத்துக்கு நல்லமருந்து. = இஞ்சி வயிற்றின் செரிமான திசுக்களை சாந்தப் படுத்தி குமட்டல் மற்றும் வாந்தியைக்குறைக்கிறது= கீமோதெரபி மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளினால் ஏற்ப்படும் குமட்டல் மற்றும் வாந்திக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்து= குமட்டல் வாந்தி மற்றும் செரியாமைக்கு இஞ்சி முரபா சாப்பிடும் வழக்கம் நம்மிடம் உண்டு=
இஞ்சி கல்லீரலை பாதுகாக்கிறது. காசநோய் நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் மருந்துகள் காரணமாக ஏற்ப்படும் கல்லீரல் நச்சுத்தன்மையிலிருந்து இஞ்சி பாதுகாக்கிறது = இஞ்சி காட்மியம் அலுமினியம் போன்ற உலோக நச்சுத்தன்மையில்லிருந்து கல்லீரலை பாதுகாக்கிறது என்று ஆய்வுகள் கூருகிறது= கல்லீரலில் சேரும் கொழுப்புக்கு இஞ்சி நல்லமருந்து =
இஞ்சி- தோல் , கல்லீரல் எலும்பு , கணையம், கருப்பை, மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு நல்லமருந்து – புற்றுநோய் செல்களை அளிக்கிறது = கதிர் வீச்சு கொடுக்கும்போது இஞ்சி புற்றுநோய் செல்களை அழிப்பதில் உறுதுணையாக இருக்கிறது = புற்றுநோய் செல்களை வளர அனுமதிக்கும் புதிய இரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது =
இஞ்சி இரத்தக் கொழுப்பு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது- இஞ்சி நரம்பு மண்டலத்தின் செயல் திறனை அதிகரிக்கிறது. இரத்தக் குழாய்களின் செல்களை கடினமாகத படி பாதுகாக்கிறது=
இஞ்சி ஒரு பயனுள்ள, நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு. சக்தியைக் கொண்டது= 

விளைவுகளையும் உட்கொள்ளும் அளவுகளையும் இனி பார்ப்போம் = இஞ்சி சரியான முறையில் சாப்பிடும் போது பாதுகாப்பானது. = சிலருக்கு நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, மற்றும் வயிற்று அசௌகரியம் உட்பட லேசான பக்க விளைவுகளை எற்ப்படுத்தும். சில பெண்களுக்கு இஞ்சி எடுத்துக் கொண்டால் கூடுதல் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.= இஞ்சி 1-2 கிராம் தூள் உட்கொள்ளலாம்=

இஞ்சி சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்=
இஞ்சி ஜலதோசத்துக்கு காரணமன  வைரஸ் தடுக்கும் சக்தியைக் கொண்டது ஸ்டேஃபிளோகோகஸ் நியூமேனியா,  இன்ஃப்ளுயன்ஸா , சூடோமோனாஸ் , சால்மோனெல்லா இ கோலி போன்ற நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தியைக் கொண்டது என்று ஆய்வுகள் கூறுகிறது
பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பில் ஏற்ப்படும் வீக்கம் மற்றும் வலிக்கு இஞ்சி ஒரு பயனுள்ள மருந்து என்று கிம் கார்லேடன் க்ருமார் என்பவர் மெட்டாகேஜிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் சார்ந்து ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளார்,
இஞ்சி தலைவலிக்கு மேற்பூச்சாக போட்டால் தலை வலி விடும் என்று டான் சார்ரான் என்பவர் அமெரிக்க நாட்டைச் சாந்த  அமர்ஷிர் முதலீட்டு நிறுவனம் சார்பில் ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளார்=



பூண்டு                                                                                                                                              .


பூண்டு

நமது சமயல் அறையில் உள்ள அஞ்சரப் பெட்டியில் உள்ள மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் = இன்று புண்டைப் பற்றி பார்ப்போம்= பூண்டு ஒரு குமிழ் தாவரமாகும். 1 அடி உயரமாக வளரும். பூண்டு வெங்காயம் குடும்பத்தைச் சார்ந்தது= ஏப்ரல் முதல் மே மாதங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும்= இலைகள் வாள் வடிவத்துடன் பச்சை நிறத்துடன் தண்டுடன் இனைக்கப் பட்டு இருக்கும்=
பூண்டு மத்திய ஆசியா மற்றும் வடகிழக்கு ஈரானுக்கு சொந்தமானது, உணவு ரீதியாகவும் ஒரு பாரம்பரிய மருத்தாகவும் பயன்படுத்தப்பட்டது.
பூண்டில் உடலுக்கு தேவையான புரோட்டீன் கார்போஹைட்ரேட்., வைட்டமின் B1, B2, B3, B6, ஃபோலேட், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவைகள் உள்ளன. பூண்டில் கந்தகச் சத்து அதிகம் உள்ளது =
பூண்டு சாறு ஆஸ்துமா, தொண்டை வலி, இருமல், மூச்சு சிரமம், ஆகிய குறைபாடுகளுக்கு ஒரு நல்ல மருந்து = உடலில் அதிகப்படியான வாயு மற்றும் வயிற்றுப் உப்பிசம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது=
பூண்டு இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்துகிறது எனவே பூண்டு நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து =
பூண்டின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக இரத்தத்தில் உள்ள அதிகமாக கொழுப்பைக் குறைத்து தமனிகளின் சுவர்கள் தடித்தல் மற்றும் கடினப்படுத்துதலில் இருந்து காக்கிறது = இதனால் இரத்த நாளங்கள் விரிந்து இரத்த ஓட்டம் அதிகரிக்க வைக்கிறது = இரத்த அழுத்தம் உயராமல் காக்கிறது =  இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் பூண்டு  காக்கிறது =
பூண்டின் மணத்திற்கு காரணமான டயலலில் சல்பைட் என்ற மூலக் கூறு பெருங்குடல் மற்றும் வயிறு புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.= புற்றுநோய்யை வராமல் தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது = பூண்டு குடல் புன்னை உருவாக்கும் H பைலோரிஸ் வைரஸ்ஸை அழிக்கும் குணம் கொண்டது = பூண்டு 7,000 ஆண்டுகளுக்கு முன்பே பூண்டு பாக்டீரியா, பூஞ்சை வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகளைக் குணமாக்க பயன்படுத்தப்பட்டது= பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில், நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது=
பூண்டின் மணத்திற்கு இரத்தத்தை உருஞ்சும் அட்டையை விலகிச் செல்லும்=
.பூண்டின் எண்ணை கொசுவைக் கட்டுப்படுத்தும் குணம் கொண்டது என்று ஆக்ஸ்போர்டு பல்களைக் கழகத்தில் ஆய்வு செய்துள்ளனர்=
ஐரோப்பாவில் மாந்திரிகத்துக்கு பூண்டு பயன்படுத்துகின்றனர் = மத்திய ஐரோப்பிய நாடுகளில் பூண்டு பேய்கள், காட்டேரிகள் ஆகியவைகளை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது என்று கருதி. பூண்டை அணிதல், ஜன்னல்கள் புகைபோக்கிகள் மற்றும் சாவியில் தொங்கவிடப் படும் மூடப் வழக்கம் உண்டு=
விளைவுகளையும் உட்கொள்ளும் அளவுகளையும் இனி பார்ப்போம் = பூண்டை பச்சையாக உண்டல், சிலருக்கு நெஞ்செரிச்சல், வாயு, குமட்டல், வாந்தியெடுத்தல் வயிற்றுப்போக்கு ஆகியவைகள் உண்டாகும்= பூண்டை தோலில் தடவினால் சிலருக்கு தோல் எரிச்சல் ஏற்படலாம்.
பூண்டை சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்=
பூண்டு எண்ணெய் ஒட்டுண்ணிகள், உண்ணி மற்றும் பிற இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளை விரட்டக்கூடிய சக்தி வாய்ந்தது என்று ஆய்வு செய்து ரிச்சர்ட் வீஸ்லர் என்பவர் காப்புரிமை பெற்றுள்ளார்=
இரத்தத்தில் உள்ள சீரம் ஹோமோசைடீன் செறிவு குறைப்பதில் பூண்டு சிறப்பாக செயல் படுகிறது - இதனால் இருதய நோய் வராமல் காத்துக் கொள்ளலாம் என்று ஆய்வு செய்து வாங்குநா ஆப் அமெரிக்காவைச் சார்ந்த-  அமாகஸ் – அவர்கள் காப்புரிமை பெற்றுள்ளார்=


பெருங் காயம்                                                                                                                           .

                                                                                                                                                     

பெருங் காயம்
அஞ்சரப் பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக பெருங் காயத்தைப் இன்று பார்ப்போம் = பெருங் காயம் உலகெங்கும் பயன் படுத்தப் படும் ஒரு மசாலா மற்றும் மருத்துவப் பொருளாகும் =
பெருங் காயம் அஸ்பஃபீடிடா என்ற மூலிகையிலிருந்து பெறப்படும் ஒருவகைப் பிசின் ஆகும் = இந்த மூலிகை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை தாயமாகக் கொண்டதாகும்= அஸ்பஃபீடிடா மூலிகை 1 முதல் 1.5 மீ உயரம் வரை வளரும் =  பெருங் காயம் இந்த அஸ்பஃபீடிடா மூலிகையின் வேரிலிருந்து பெறப் படும் பாலை கட்டியாக்கி பெருங் காயம் தயாரிக்கப் படுகிறது =
பெருங் காயம் நீண்டகால மூச்சுக்குழாய் அழற்சி, கக்குவா இருமல்  H1N1 "பன்றி காய்ச்சல்", மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத் திணறல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மனச்சோர்வு, சில நரம்புத் தளர்ச்சிக்கு பெருங் காயம் நல்ல மருந்து. பெருங் காயம் வயிறு வலி மற்றும் வயிற்றின் உப்பிசத்தைக் நீக்கக் கூடியது = ஒரு நல்ல மல மிலக்கி = செரிமானத்தை அதிகப் படுத்தும் = .இரைப்பை புண்களுக்கு ஒரு நல்ல மருந்து=
பெருங் காயம் இரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதாலும் தூக்கத்தை உருவாக்குவதாலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் குணம் கொண்டது. பெருங் காயம் வாதத்தையும் மற்றும் கபத்தையும் சமநிலைப்படுத்தும். பித்தத்தையும் அதிகரிக்கிறது, இதனால் பசி, சுவை மற்றும் செரிமானத்தை அதிகரிக்கிறது.= பெருங் காயம் புற்றுநோய்க்கு நல்ல மருந்து = மனித லிம்போசைட்டுகளில் செயல்பட்டு புற்றுநோயைக் குனமாக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன=
பெருங் காயம் பெண்களின் பல நேய்களுக்கு நல்ல மருந்து = குழந்தை இன்மை கருச்சிதைவு, குறைப் பிரசவம், வலியுடன் கூடிய மாத விலக்கு ஆகிய கர்ப்பப்பை சார்ந்த நேய்களைக் குணமாக்கும்=
பெருங் காயம் பல அமானுஸ்ய சக்திகள் இருப்பதாக டச் மக்கள் நம்புகின்றனர் = ஜமாக்க மக்கள் தீய சக்திகள் குழந்தைகளை அனுகாதிருக்க   பெருங் காயத்தை உச்சிக் குழியில் தடவும் மூடப் பழக்கம் உண்டு,
மருந்தியல் மற்றும் உயிரியல் உட்பட சமீபத்திய ஆய்வுகள் பெருங் காயம்  வைரஸ் நோய், பூஞ்சை நோய் மற்றும் புற்றுநோய்களைக் குணமாக்கும் = பெருங் காயம் ஒரு நல்ல வலி நிவாரணி என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பெருங் காயம் வலி உணர்வை எடுத்துச்செல்லும் நரம்புகளை தடுத்து வலி உணர்வை இல்லாமல் ஆக்கும் குணம் கொண்டது=
பெருங் காயத்தை கிரேக்கர்கள் அரபியர்கள் ஆண்மையை அதிகரிக்கும் மூலிகை என்று ஆய்வில் கணித்துள்ளனர்= ஆண்கள் சார்ந்த குழந்தை இன்மைக்கு பெருங் காயத்தை ஒரு நல்ல மருந்து என்று ஆய்வு செய்துள்ளனர்=
பெருங் காயத்தால் உண்டாகும் விளைவுகளையும் உட்கொள்ளும் அளவுகளையும்  இனி பார்ப்போம்= பெருங் காயம் இரத்த உரைவைக் குறைக்கும்= எனவே அறுவை சிகிச்சையின் போது பெருங் காயத்தை எடுத்தால் இரத்தப்போக்கு ஆபத்து அதிகரிக்கக்கூடும் ஆகவே அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்னர் பெருங் காயம் எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள்.= சிலருக்கு பெருங் காயம் ஒவ்வாமை ஏற்ப்பட்டு உதடுகள் வீக்கம் ஏற்படும்=
பெருங் காயம்  மருத்துவ முக்கியத்துவம் உள்ள மூலிகை ,இன்னமும் பெருங் காயம்  பற்றி விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன
பெருங் காயம் சார்ந்த சில காப்புரிமைகள் 
பெருங் காயத்த்திலிருந்து பெறப்பட்ட புதிய மருந்து கலவைகள்,   இன்புளுன்சா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வு செயப்பட்டு காப்புரிமையை  தைவான் சார்ந்த கேயாசிங் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த யங் - சாங் வு பெற்றுள்ளார்=
பெருங் காயம் நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், மத்திய நரம்புகளை  பாதிக்கும் பல்வேறு வீரியம் மிக்க புற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பு மற்றும் சிகிச்சையளிக்க சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வு செயப்பட்டு காப்புரிமையை கொரியாவைச் சேர்ந்த கொரியா ரிசர்ச் இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜிச் சார்ந்த சாங் யூ சோய் பெற்றுள்ளார்=

மிளகு
                                                                                                                                                    .

மிளகு
அஞ்சரப் பெட்டியில் உள்ள  அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்த்துக் கொண்டு’ இருக்கிறோம் = அதன் பகுதியாக மிளகினை இன்று பார்ப்போம்= மிளகு ஒரு தோற்றிப் படரும் கொடிவகையைச் சார்ந்தது. மிளகு கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. மிளகு தென் இந்தியாவின் பிறப்பிடம் ஆகும். சுமார் நான்கு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். இத்தாவரம், அருகில் இருக்கும் மரம், தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இதன் கொடி 10அடி முதல்-12 வரை கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளறும் = மிளகின் காய் உணவுக்கும் மருந்துக்கும் பயன் படுகிறது. மிளகின் கொடி மருந்துக்குப் பயன் படுகிறது.
மிளகு இந்திய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிளகு காரமும் மணமும் உடையது = மிளகு மசாலாக்களின் ராஜா என்று அழைப்பர் = கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்ள் மிளகில். anti-oxidant வைட்டமின்களான வைட்டமின் சி வைட்டமின் ஏ உள்ளது.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு நல்ல முறிவாகப் பயன் படுத்தப் படுகிறது.  “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்ற பழமோழியில் இருந்து மிளகின் சிறப்பு தெரிய வருகிறது.
மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
சளி, கோழை, இருமல் ஆஸ்துமா ஆகியவைகளுக்கு மிளகு நல்ல மருந்து = உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது = மிளகு பல்-சிதைவு மற்றும் ஈறு வீக்கம் ஆகியவற்றிற்க்கு காரனமன கிருமிகளை அழிக்கும் தன்மையை மிளகு கொண்டது =
மிளகில் பைபீரைன் ஆல்கலாய்டுகள் 5 முதல் 10% இருக்கிறது. இது தைராய்டு ஹார்மோன், மற்றும் குளுக்கோஸ் உருவாக்கத்தை சமப் படுத்துகிறது =. T (4), T (3) தைராய்டு ஹார்மோன் இரத்தத்தில் அதிகம் உருவாகாமல் பாது காக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
கர்ப்பமுற்ற தாய்மார்களுக்கு மிளகு வாதத்தை சமன் செய்து இயற்க்கையான மகப்பேற்றைக் கொடுக்கிறது. பின்னர் தாய்க்கு சளி இருமல் போன்ற கபம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்ப்படாமல் பாது காக்கிறது
மிளகு எண்ணெய் ஒரு நல்ல வலி நிவாரனி ஆகவே இந்த எண்ணையை  வாத நோய்,  காய்ச்சல், சளி, க்கு வெளிப் பிரயோகமாக உபயோகிக்கலாம்
தொண்டைப் புண் மற்றும் தோல் நோய்களுக்கு மிளகு ஒரு நல்ல மருந்து.. மிளகில் உள்ள ஒளியோரிசின் நுண் உயர் சார்ந்த நோய்களையும்  மற்றும் பங்கஸ்சைக் குணமாக்கும் =
மிளகினால் உண்டாகும் விளைவுகளையும் உட்கொள்ளும் அளவுகளையும் இனி பார்ப்போமா = குடல் புண் உள்ளவர்களுக்கு, இரைப்பை அழற்சியும், வயிற்றுப்போக்கும் வயிற்று வலியும் உருவாக்கும்.= குடல் புண் பித்தநீர் குழாய் அடைப்பு மூல நோய் உள்ளவர்கள் மிளகைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
மிளகில் உள்ள எண்ணெய் ஆவியாகும் தன்மை கொண்டது . ஆகவே மிளகை பொடித்து வைத்தால் காரத்தன்மைக்கும் மனத்துக்கும் காரணமான எண்ணெய் ஆவியாகிவிடும்; தேவைக்கு அவ்வப்போது மிளகை பொடித்து வைத்துகொள்ள வேண்டும்
மிளகு சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்
மிளகு உணவில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த  பொருள்களை இரைப்பையை உறிஞ்சவைத்து உடலில் சேர்க்க உதவியாக உள்ளது என்று ஆய்வு செய்து முகம்மது மஜீத் ஆர். ராஜேந்திரன் ஆகியேர் காப்புரிமை பெற்றுள்ளனர்,
தோல் வெண்புள்ளி தோல் புற்றுநோய்க்கு மிளகு நல்ல மருந்து = மிளகு தோல் நிரமியாகிய மெலனோசைட்டைத் தூண்டி தோலின் இயற்கை வண்ணத்தை உருவாக்கப் பயன்படுத்தலாம்.என்று அமலா ராமன் அவர்கள் BTG இன்டெர் நேஷனல் லிமிடெட் சார்பில் ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளார்=




மஞ்சள்                                                            
                                                                  .





மஞ்சள்

நமது சமயல் அறையில் உள்ள அஞ்சரப் பெட்டியில் சமையலுக்கு உபயோகப்படும் மசாலாப் பொருள்களில் உள்ள குணங்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பார்ப்போம் = முதலில் மங்களகரமான பொருளான மஞ்சளின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம் =

மஞ்சள் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைத் தாவரம் =தண்டின் கீழ் வாளரும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு= மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு= முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள். இது சற்று உருண்டையாக இருக்கும் இதை முட்ட மஞ்சள் என்பர் = விரலி மஞ்சள் இது நீள வடிவில் இருக்கும். இது முட்டா மஞ்சளின் கிளைகள் = இதைத்தான் கறி மஞ்சள் என்பர் = கஸ்தூரி மஞ்சள்: இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. மஞ்சள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாகவும் உடலில் தேய்த்துக் குளிக்கவும் உணவாக சமையலிலும் மருந்தாகவும் உபயோகிக்கிறோம். மஞ்சள் சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது = உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது=
மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு,= மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவுகலைக் குறைக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் புற்றுநோய்க்கு ஒரு நல்ல மருந்து.= புற்று நோய்க்கு கதிர் விச்சு மருத்துவம் கொடுக்கும் போது மஞ்சள் கொடுத்தல் நல்ல பலன் இருப்பதாக பல நாடுகளின் ஆய்வுகள் கூறுகின்றன. மஞ்சள் புற்றுநோய்ச் செல்களை வளர விடாமல் காக்கிறது. மஞ்சள் உடலில் உள்ள வீக்கத்தை மட்டும் அல்லாமல் புற்றுநோயால் ஏற்ப்படும் வீக்கத்தையும் வற்றவைக்கும் தன்மை கொண்டது,

தமனிகளில் உருவாகும் கொழுப்பு மற்றும் நச்சுத்தன்மை அளவை மஞ்சள் குறைத்து, இருதய மற்றும் நீரிழிவு நோய்களால் ஏற்ப்படும் ஆபத்துக்களைக் குறைக்கிறது  நீரிழிவு சம்பந்தப்பட்ட பக்க விளைவுகளுக்கு ஒரு நல்ல மருந்து.  மஞ்சள் கணைய திசுக்களை சீராக்கி இன்சுலின் சுரப்பை அதிகரிக்க வைக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது.

இந்திய மருத்துவ முறைகளிளும். ஆய்வுகளிளும், கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தில் மஞ்சள் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் என்று கூறுகின்றனர்.

இரும்பு, பாதரசம், ஈயம், செலினியம், ஆர்சனிக், துத்தநாகம் போன்ற உலோகங்களினால் ஏற்ப்படும் நச்சுத்தன்மையைப் போக்கும் தன்மையை மஞ்சள் கொண்டது=

மஞ்சள் குடல் அழற்சி நோய்க்கு நல்ல மருந்து. ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மஞ்சளின் நிறமும் மனமும்  குங்குமப்பூவை ஒத்து இருப்பதால் இந்திய குங்குமப்பூ என்று அழைத்தனர்.
 ஆடிச்செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சள் பூசிக்குளி  என்ற பழ மொழி உண்டு= ஆம் மஞ்சளை பூசிக் குளித்தால் முகம் பிரகாசம் ஆகும் =. =மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். =
 
நிப்பானில் ஒகினாவா ஆகிய நாடுகளில் மஞ்சளை தேனீராக பயன்படுத்துகின்றனர்.
மஞ்சள் பற்றிய விளைவுகளையும் உட்கொள்ளும் அளவுகளையும் இனி பார்ப்போமா =  சிலருக்கு மஞ்சள் உடலில் சருமத்தில் அரிப்பையும் வறட்சியையும் ஏற்படுத்தும்.= மஞ்சள் சேந்த குங்குமம் நெத்தியில் ஒவ்வாமை ஏற்ப் படுத்துவதை நாம் காண முடியும். ஆகவே மஞ்சள் உடலில் பூசும் போது அரிப்போ ஒவ்வாமையோ ஏற்ப்பட்டால் மஞ்சளை வெளி உபயோகமாக உபயோகிப்பதை நிறுத்தலாம்= அனால் மஞ்சளை உணவாக உட்கொள்ளும் பொது எந்த ஒரு ஒவ்வாமை ஏற்ப்படுவதில்லை=

மஞ்சள் பித்த நீரை அதிகம் சுரக்க வைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது,  இது உணவு சேரிமானத்துக்கு மிகவும் நல்லது = ஆனால் இது பித்தப்பையில் கற்கள் உள்ளவர்களுக்கு அதிகம் கற்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது ஆகவே = பித்தப்பையில் கற்கள் உள்ளவர்க மஞ்சளை அதிகம் உண்ண வேண்டாம்
,
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. மஞ்சள் ஒரு நாளைக்கு மருந்தாக 3௦௦ லிருந்து 5௦௦ மில்லி கிராம் உண்ணலாம் என்று ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

மஞ்சள் சார்ந்த சில காப்புரிமை பெற்ற ஆய்வுகளை இனி பார்ப்போம்=
மஞ்சளை வைத்து பழைய இரத்த நாளங்கலிருந்து புதிய இரத்த நாளங்கள் உருவாக்கப்படுவதைப் பற்றி ஆய்வு செய்து ஜோர்ஜியாவில் உள்ள எமரி பல்கலைக்கழகம் மருத்துவர் ஜாக் எல். அர்பிசர் அவர்கள் காப்புரிமை பெற்றுள்ளார் =

மஞ்சள் உடலில் கட்டிகள் வருவதைத் தடுக்கும் சக்தி கொண்டது என்று அமெரிகாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகம் ஜேம்ஸ் பி. ஸ்னைடர் குழுவினர்கள் ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளார் =