தலை முடியின் உடல்கூறு .
முடிஎளிமையான கட்டமைப்பை உடையது. , ஆனால் சமூக செயல்பாடுகளில் முக்கிய செயல்பாடுகளை
கொண்டுள்ளது. முடி கெரட்டின் என்று ஒரு கடினமான புரதத்தால் ஆன இறந்த செல்களை
கொண்டு உவாக்கப்படுகிறது. ஒவ்வொரு முடிக்கும் ஒரு ஹேர்போலிக் என்ற நுண்ணுறை
உள்ளது. இந்த ஹேர்போலிக் நுண்ணுறை தலையில் நூறாயிரக்கணக்கில் உள்ளன. முடி
உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்களில் உருவாகின்றன. ஒவ்வொரு மயிர்க்கால்கள் நம்
வாழ்நாள் முழுவதும் பல முடிகளை உருவாக்குகின்றன. புதுமுடிஉருவானதும் பழைய முடி உதிர்ந்து விடும்.
முடி பல அடுக்குகள் ஆனது.
முடியின் புறத்தோல்
முடியின் வெளிப்புறத்தில், பாதுகாப்பு பூச்சு உள்ளது. மேலும் இந்த பூச்சு முடியின் நிறத்தை ஊடுருவி பார்க்க அனுமதிக்கிறது.
கார்டெக்ஸ்
முடி
மொத்தமாக ஒரு கயிற்றினால் அமைக்கப்
பட்ட முறுக்கிய நீண்ட நார் பகுதியாகும்.
மெடுலா
இது முடியின் தண்டு மையமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக