தலைப் பேன்:- .
தலைப் பேன் மனித முடிகளில் குடிகொள்கிறது. தலைப் பேன் தலையில் சிறிய
அளவில் இரத்தத்தை உணவாக கொள்கிறன. சிறிய, இறகுகள் இல்லாதவையாகவும் ஒட்டுண்ணி பூச்சியாக பேன் உள்ளது. பேன்கள்
குறிப்பாக குழந்தைகளைப் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். அவைகள் தலையில் தொற்றி எரிச்சலூட்டும். தலையில் பேன் வெளிர் பழுப்பு நிறம்கொண்டது, முதலில் ஒரு குண்டு
ஊசி அளவை விட சிறியதாக இருக்கும் பின்னர் முழுமையாக
வளர்ந்து ஒரு எள் அளவு வளரும். அவைகள், பறக்க குதிக்க அல்லது நீந்த முடியாது . பேன் தொற்றுடைய ஒரு நபரின் தலையில்
இருந்து பிறர் தலைக்கு பரவும். ஒரு பெண் தலைப் பேன் தலையில் முட்டைகளை இடுகிறது. பேன்கள்
முட்டைகளை நாம் ஈறு என்று அழைக்கிறோம். அவை முடிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். ஏழு முதல் 10 நாட்களுக்குப் பிறகு பேன் குஞ்சு உருவாகிறது .இரத்தத்தை
உண்டு பேன்கள் வளருகின்றன. பேன்கள் முழுமையாக வளர ஒன்பதிலிருந்து 10 நாட்கள் ஆகும்.
தலைப் பேனுக்கு
சீதாப்பழ
விதைகளை நசுக்கி தலையில் தேய்த்துக் கொண்டாலும் பேன் வராது.
பேன்
தொல்லை இருந்தால் வசம்பை அரைத்து, விழுதைக் கொண்டு தேய்த்து அரைமணி நேரம் கழித்து தலையை அலசினால்
பேன்கள் மறையும்,
ஆங்கில மருத்துவத்தில்
benzene hexachloride 1% லோசன் பாது காப்பனது. (Ascabiol லோசன் = Scaboma Lotion from
Glenmark)
Permethrin 1% லோசன் (Paxib - Glenmark = Scabper from Shalaks
[Permethrin]) = இந்த லோசனை சிறுவர்களுக்கு உபயோக படுத்தக் கூடாது. (வெளி உபயோகம் மட்டும்)
malathion 0.5% லோசன் (Ovide. ) இந்த லோசனை சிறுவர்களுக்கு உபயோக படுத்தக் கூடாது. (வெளி உபயோகம் மட்டும்)
ஒரு பெண் பேன் தலையில் முட்டைகளை இடுகிறது. ஏழு முதல் 10
நாட்களுக்குப் பிறகு பேன் குஞ்சு உருவாகிறது . கருவுற்ற ஒன்பது நாட்களுக்குள்
நீக்க வேண்டும். அகவே மருந்தை ஒன்பது நாட்களுக்கு
ஒரு முறை பேன் நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில்
திரும்ப திரும்ப பேன் வரும்.
Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக