முடி
வளர்ச்சிக்கு வீட்டு வைத்தியம் .
ஒரு
ஆரோக்கியமான உணவு புரதம் மற்றும் முக்கிய
வைட்டமின்கள் செலினியம் நிறைந்த ஒரு உணவு உண்பதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி
உருவாகும் .
நெல்லிக்காய் - 100
கிராம் • சியக்காய்
- 100
கிராம் • பூந்திக்
கொட்டை - 100
கிராம் நீரில் ஒரு நாள் இரவில் ஊறவைத்து அரைத்த கலவையைக் கொண்டு முடியைக்
கழுவுங்கள் .
ஆமணக்கு
எண்ணெய் இயற்கையாகவே முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது ஆமணக்கு
எண்ணெயில் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு
அமிலங்கள் நிறைந்து இருக்கிறது.
வெந்தயத்தை தேங்காய் பாலில் அரைத்து உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற
விட்டு. ஒரு
லேசான ஷாம்பு மற்றும் நீர் கொண்டு கழுவ வேண்டும்.
வினிகர்
மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. இதனால் உங்கள் முடி நன்கு வேகமாக வளரும். முடியின்
கார சமநிலையை பராமரிக்கும் இதனால் உங்கள் முடி நன்கு வேகமாக வளரும். வினிகரை
நீரில் கலந்து உபயோகிக்க வேண்டும்.
முட்டை வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து முடியில் மாஸ்க் செய்து 15-20 நிமிடங்கள்
களித்து நீர்
கொண்டு கழுவ வேண்டும். இந்த முறை முடி
வளர்ச்சிக்கு நன்கு
வேலை செய்யும்.
4-5
வெங்காயம் எடுத்து அவற்றை அறுத்து தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்து. நறுக்கப்பட்ட
வெங்காயத்தை சேர்த்து அதை 5-10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். முடியில் தடவி அரை
மணி நேரம் களித்து கழுவ வேண்டும்.. இந்த முறையும் முடி வளர்ச்சிக்கு நன்கு வேலை செய்யும்.
தலையை
ஒரு சூடான எண்ணெய்யால் மசாஜ் செய்வதால் மயிர்க்கால்கள் தூண்டபடுகிறது. இது
உச்சந்தலையில், இரத்த ஓட்டத்தை
ஊக்குவிக்கிறது இதனால் முடி
வளர்ச்சி கூடும்.
தினமும்
இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் உங்கள் தலை முடியை மேலும் கீழும் கவிழ்த்து
புரட்டுவதால் முடி
வேகமாக வளரும். இது மிகவும் பிரபலமான யுக்திகளில் ஒன்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக