JavaScript

சிறுநீரக செயலிழப்பு
பலருக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளால் இரத்தத்தில் கிரியாட்டின் மற்றும் யூரியா  உயறும். இதற்கு மூன்று மூலிகைகைகள் சிறப்பாக வேலை செய்கிறது.

      1)  பூனை மீசை சமூலம். (பூ பூக்குமுன் எடுக்க வேண்டும்)
      2) முக்கரட்டை வேர்
      3) பொன் ஆவாரை வேர்.



மூன்று மூலிகையும் சமமாகக் சேர்த்து. கஷாயத்துக்கு தூள் செய்து. கஷாயம் செய்து குடித்தால் நல்ல பலனைக் கொடுக்கும். ஆங்கில மருந்தை சாப்பிடும்போதும் இந்த கஷாயம் சாப்பிடலாம். இந்த மூன்று மூலிகையும் சிறுநீரக செயல் பாட்டை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியாட்டின் அளவு குறைகிறது.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

பூனை மீசை (Orthosiphon Stamineus )

இந்த மூலிகையின் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த பெயர்
வந்துள்ளது. வெளிநாடுகளில் ஜாவா டீ என்ற பெயரில் பெரும் அளவில் உப்யோகிக்கப் படுகிறது.  பூனை மீசை  சிறுநீரக  செயலிழப்புக்கு நல்ல மூலிகை.  இந்த மூலிகை சிறுநீரை பிரிப்ப்பதால் இதன் போட்டானிக்கல் பெயரில் siphon என்ற ஆங்கில வார்த்தை வந்துள்ளது .siphon  என்பதற்க்கு திரவங்களின் வடி குழாய் என்று அர்த்தம். இந்த முலிகை சிறுநீரக பாக்டீரியா தொற்று நீக்க வல்லது.பூனை மீசை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது (1)
சிறுநீரக கற்கள்  பித்தக்கற்கள் உட்பட , கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் நீக்க வல்லது . உடம்பில் உள்ள நச்சு நீர்களை(free radical scavenger)நீக்க வல்லது. இது ஒரு நல்ல ஈரல் தேற்றி, மேலும் ஒருஅழற்சி நீக்கி.(2)பூனை மீசை பெருங்குடல் புற்றுநோய்க் கட்டிவளர்ச்சியைக் குறைக்கும்.(3)
பூனை மீசை ஆக்ஸிஜனேற்றி.(4)
சக்கரை நோயாளிக்கு பூனை மீசைஒரு நல்ல மருந்து.(5)
பக்கவிளைவுகள் உடம்பில் நீர் சத்து குறைபாடு இருக்கும்போது உபயோகிக்க வேண்டாம்.

1)     http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24393217
2)     http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22846075
3)     http://examine.com/supplements/orthosiphon-stamineus/
4)     http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24189677
5)     http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23802882

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

முக் கரட்டை (Boerhavia diffusa)

முக்கரட்டை படரும் ஒரு குத்துச் செடி. இந்த செடி எல்லா இடங்கலிலும் வளரக் கூடியது. இதன் பூக்கள் கத்திரிப்பூ நிறம் கொண்டது. பல நோய்களுக்கு முக் கரட்டை நல்ல மருந்து . இந்த முலிகை
சமஸ்கிருதத்தில் புனர் சேவா என்று கூறுவர். ஆம் இந்த முக் கரட்டை முலிகை ஒருமனிதனுக்கு புனர் ஜென்மம் கொடுக்க வல்லது.பல்வேறு நோய்களுக்கு நல்ல மருந்து ஆகும்.(1)
இந்த முலிகை முக் கரட்டை கிட்னியை பாதிக்கும் நோய்களுக்கு நல்ல மருந்து ஆகும். கிட்னி காயம் காரணமாக ஏற்ப்படும் பாதிப்பை குணமாக்க உதவும்.(2)
கிட்னிசார்ந்த எல்ல நோய்க்கும் முக் கரட்டை ஒரு நல்ல மருந்து(3).
முக் கரட்டை முதுமையைத் தடுக்கும் ஒரு நல்ல மூலிகை.(4)

(1) http://isca.in/IJPS/Archive/v1i1/6.ISCA-RJPcS-2012-001.pdf
(2) http://www.tandfonline.com/doi/abs/10.3109/13880209.2011.581671
(3) http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3153716/
(4) http://www.ijrpbsonline.com/files/RV9.pdf

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஆவாரை  (Cassia auriculata)

ஆவாரை அழகிய குறுஞ்செடி, தமிழகமெங்கும் அனைத்து  வகை நிலங்களிலும் தானே வளறும் மூலிகை. மஞ்சள் நிறப் பூக்கள் உள்ளது மெல்லிய தட்டையான காய்களையுடையது. இந்த மூலிகை நல்ல சிறுநீர்
பெருக்கியாக செயல் படுகிறது. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தின் சிறுநீரை வெளியேற்றும்செயல் திறனை அதிகம் உண்டு.
சித்தர்கள் இந்த மூலிகையைப் பற்றி கூறும் பொழுது  ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ
என்று கூறியுள்ளனர் . இது ஒரு காய கல்ப மூலிகை. இந்த மூலிகையில் "கார்டியாக் குளூகோசைட் மற்றும் "ஆன்த்ரா குனைன்ஸ்'', "டேனின்ஸ்'' ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடக்கி உள்ளது. நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.
ஆவாரை மூலிகை வேர் ஒரு நல்ல நச்சு நீக்கி. இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்க வல்லது(1)
ஆவாரை மூலிகை வேர் சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது. மேலும்
ஆவாரை மூலிகை சிறுநீரகத்தைக் தீய விளைவுகளில் இருந்து காக்கிறது. (nephroprotective activity)(2)(3)
மருந்துகளின் பக்க விளைவுகளால் ஏற்ப்படும் சிறுநீரக நோய்களை சுகமாக்கும் குணம் கொண்டது.மேலும் இரத்தத்தில் அதிகம் ஆகும் யூரியாவைக் குறைக்கும் குணம் கொண்டது(4)

(1)  http://www.sciencedirect.com/science/article/pii/S0367326X06002656
(2)  http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16121515
(3)  http://www.ijppsjournal.com/Vol5Issue4/7581.pdf
(4)  http://www.sciencedirect.com/science/article/pii/S094471130500111X

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

                                  Dr , R.S.Purusothaman.

                                     Cell No  9842425780









  

   தலை முடியின் தேவை                       .



   
  முடி புற ஊதா கதிர்கள் மற்றும் குப்பைகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து உடலின் தோலைப் பாதுகாக்கிறது.

முடி கன உலோகங்கள்(ஈயம், பாதரசம்,ஆர்சனிக் போன்ற)  நச்சு உலோகங்களின் நச்சு தன்மை பாதிக்காமல் தன்னுள்  செறிவு கூட்டி வைத்து உடலைப் பாது காக்கிறது

முடி உச்சந்தலை மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்க  உதவுகிறது.

உச்சந்தலையை சூரிய ஒளியிலிருந்து காக்கிறது.

முடி உடலின் வெப்பத்தைக் கடத்தாமல்  குளிர்  பருவங்களில் குளிரில்  இருந்து உடலைக் காக்கிறது

இனச் சேர்க்கையில் உடல் முடி பாலியல் ஈர்ப்பு  உருவாக்கும் பங்கை ஏற்ப்படுத்துகிறது.

முடி உடலின் சமநிலையை உணர உதவுகிறது.

புருவ முடி, கண்களை வெளியே உள்ள தூசிகளிலிருந்து காக்கிறது.







Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.

  தலை முடியின் உடல்கூறு                                                       .


 
முடிஎளிமையான கட்டமைப்பை உடையது. , ஆனால் சமூக செயல்பாடுகளில் முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. முடி கெரட்டின் என்று ஒரு கடினமான புரதத்தால் ஆன இறந்த செல்களை கொண்டு உவாக்கப்படுகிறது. ஒவ்வொரு முடிக்கும் ஒரு ஹேர்போலிக் என்ற நுண்ணுறை உள்ளது. இந்த ஹேர்போலிக் நுண்ணுறை தலையில் நூறாயிரக்கணக்கில் உள்ளன. முடி உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்களில் உருவாகின்றன. ஒவ்வொரு மயிர்க்கால்கள் நம் வாழ்நாள் முழுவதும் பல முடிகளை உருவாக்குகின்றன. புதுமுடிஉருவானதும் பழைய முடி உதிர்ந்து விடும்.


முடி பல அடுக்குகள் ஆனது.

 
முடியின் புறத்தோல்

முடியின் வெளிப்புறத்தில், பாதுகாப்பு பூச்சு உள்ளது. மேலும் இந்த பூச்சு முடியின் நிறத்தை ஊடுருவி பார்க்க அனுமதிக்கிறது. 

 
கார்டெக்ஸ்

முடி  மொத்தமாக ஒரு கயிற்றினால்  அமைக்கப் பட்ட முறுக்கிய நீண்ட நார் பகுதியாகும்.


மெடுலா

இது முடியின் தண்டு மையமாக உள்ளது. 







Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.


    

தலை முடியின் வகைகள்                                                    .




  •  ஸ்ட்ரெய்ட் ( நல்லது / தின்னமானது )



·        முடி மென்மையானதாகவும்,பளபளப்பானதாகவும்,எண்ணெய்பசையுடன் இருக்கும்,

 
·        அலை அலையான முடி - திட்டவட்டமான "எஸ்" வடிவில் அலை அலையாக இருக்கும்,

 
·        சுருள் முடி - பொதுவாக ஒரு திட்டவட்டமான "எஸ்" வடிவில் சுருள் சுருளாக தடிமனாக இருக்கும் 
 
·        இறுக்கமான சுருண்ட முடி - சுருள் அமைப்பைப் பெற்று இருக்கும் . (ஆப்பிரிக்க கரீபியன்)

 
 
முடியின் தன்மை 

 
·        நன்றாக நளினமான அடர்த்தியான பிரகாசமான முடி அமைப்பு.

·        பஞ்சு போன்று முடி அமைப்பு.

·        நடுத்தர நளினமான அடர்த்தியான பிரகாசமான முடி அமைப்பு.

·        கரடுமுரடான அடர்த்தியான முடி அமைப்பு..

 
முடியின் நிறங்கள்

  
·        இயற்கை பொன்னிற முடி. 

·        இயற்கை சிவப்பு முடி. 

·        இயற்கை பழுப்பு முடி. 

·        இயற்கை கருப்பு முடி. 








Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.
 தலை முடியின் வளர்ச்சி                     .





முடி எளிமையான கட்டமைப்பை கொண்டது, ஆனால் சமூக செயல்பாடுகளில் முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. முடி கெரட்டின் என்று ஒரு கடினமான புரதத்தால் ஆனது. இரத்த நாளங்கள் முடியின் செல்கள் வளர உதவுகிறது.,
முடி வளர்ச்சி மூன்று நிலைகளில் கொண்ட சுழற்சியில் ஏற்படுகிறது:

     Þ   Anagen (முதல் வளர்ச்சி கட்டத்தில்): முடி கொடுக்கப்பட்ட நேரத்தில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு முடியும் வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் செலவழிக்கிறது.

     Þ   Catagen (இடைக்கால கட்டத்தில்): ஒரு சில வாரங்களில், முடி மெதுவாக வளர்கிறது.  பின்னர் ஹேர் போளிக்க்ஸ் சுறிங்கிவிடுகின்றன.
  
     Þ   Telogen  (கட்டம் ஓய்வு): சில மாதங்கள், முடி வளர்ச்சி நின்று விடுகிறது ஒரு புதிய முடி வழர்ந்து பழைய முடி வெளியே தள்ளப்படுகிறது.

    Þ   முடி வெவ் வேறு மக்கள் தன்மைக்கு ஏற்ப்ப வெவ்வேறு விகிதங்களில் வளர்கிறது; சராசரி விகிதம் மாதத்திற்கு ஒரு அரை அங்குலம் வளர்கிறது; முடியின் நிறம் ஹேர் போல்லிக்கில் உள்ள மெலனின் நிறத்தைச் சார்ந்துள்ளது.






Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.



முடி இழப்புக்கு சரியான காரணங்கள்              .






Þ முடி இழப்புக்கு சரியான காரணங்கள் முழுமையாக  அறியப்  படவில்லை, ஆனாலும்  அது வழக்கமான பின்வரும்  காரனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்பானதாக இருக்கிறது.

Þ ஆண்ட்ரோஜெனிடிக் (பாரம்பரியம்) முடி இழப்பு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் காணப்படும் குறையாகும். ஆனால் ஆண்களிடம் ஆண்ட்ரோஜெனிடிக் முடி இழப்பு அதிகமாக உள்ளது.

Þ பெண்களுக்கு உச்சந்தலையில்முழுவதும் ஒரே மாதிரியான சன்னமான  முடி உதிர்தல் உண்டாகும்.  பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு வழுக்கை உண்டாகும்.

Þ   பொடுகு (ஊறல் தோலழற்சி):யால் அரிப்பு மற்றும் துகள்கள் உண்டாகும். பெடிக்கேலோசிஸ் எனப்படும் பிரச்சனை காரணமாக முடி இழப்பு அதிகமாக உள்ளது.

Þ   தைராய்டு நோய், இரத்த சோகை, முடி இழப்பை ஏற்படுத்தும்.

Þ   விட்டமின் ஏ, பி, சி, மற்றும் இ மற்றும் தாதுக்கள் இரும்பு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், மற்றும் புரதச் சத்து பற்றாக்குறை முடி இழப்பை ஏற்படுத்தும்.

Þ   முடி சுகாதார இன்மையும் முடி இழப்புக்கு ஒரு காரணமாகும்.

Þ   கர்ப்பத்தில் ஏற்படும் உடல்மற்றும் மன அழுத்தம் முடி இழப்புக்கு காரணம் ஆகும்.

Þ   உடல் வியாதிகள்-அறுவை சிகிச்சை, கார் விபத்தில், அல்லது ஒரு தீவிரமான நோய், காய்ச்சல், கூட தற்காலிக முடி இழப்பை ஏற்படுத்தும்.

   Þ அதிக வைட்டமின் கூடுதல் முடி இழப்பை உருவாக்கும்..

  Þ   பல வருடங்கள் ஸ்டைலிங் மற்றும் முடி சிகிச்சைகள் காரணமாக முடி இழப்பு உண்டாகும்.

   Þ   தொப்பிகள் அணிவது முடி இழப்பை ஏற்படுத்தும்.

Þ   புற்றுநோய், மூட்டுவலி, மன அழுத்தம், இதய பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டுக்கு. பயன்படுத்தப்படும் மருந்துகள் காரணமாக முடி இழப்பு உண்டாகும்.

Þ   நீரிழிவு நோய் ரேடியேஷன் தெரபி மற்றும் லூப்பஸ் போன்ற சில மருத்துவ காரணங்களால் முடி இழப்பு உண்டாகும்.


Þ   மன அழுத்தம் முடி இழப்புக்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தத்தை குறைக்கவும். மன அழுத்தத்தை நிர்வகிக்க நீங்கள் தியானம், மூச்சு பயிற்சிகள் செய்ய வேண்டும்.








Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.
.
  முடி வளர்ச்சிக்கு வீட்டு வைத்தியம்                   .





 ஒரு ஆரோக்கியமான  உணவு   புரதம் மற்றும் முக்கிய வைட்டமின்கள் செலினியம் நிறைந்த ஒரு உணவு உண்பதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி உருவாகும்.

  நெல்லிக்காய்  - 100 கிராம்   சியக்காய் - 100 கிராம்   பூந்திக் கொட்டை - 100 கிராம்  நீரில் ஒரு நாள் இரவில் ஊறவைத்து அரைத்த கலவையைக் கொண்டு முடியைக் கழுவுங்கள் .


 ஆமணக்கு எண்ணெய் இயற்கையாகவே முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது  ஆமணக்கு எண்ணெயில் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறது.


  வெந்தயத்தை  தேங்காய் பாலில் அரைத்து உச்சந்தலை மற்றும் முடியில் தடவி அரை மணி நேரம் ஊற விட்டு. ஒரு லேசான ஷாம்பு மற்றும் நீர் கொண்டு கழுவ வேண்டும்.


  வினிகர் மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. இதனால் உங்கள் முடி நன்கு வேகமாக வளரும். முடியின் கார சமநிலையை பராமரிக்கும் இதனால் உங்கள் முடி நன்கு வேகமாக வளரும். வினிகரை நீரில் கலந்து உபயோகிக்க வேண்டும்.


 முட்டை  வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து முடியில் மாஸ்க் செய்து 15-20 நிமிடங்கள் களித்து நீர் கொண்டு கழுவ வேண்டும். இந்த முறை முடி வளர்ச்சிக்கு நன்கு வேலை செய்யும்.


  4-5 வெங்காயம் எடுத்து அவற்றை அறுத்து தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்து. நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்த்து அதை 5-10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். முடியில் தடவி அரை மணி நேரம் களித்து கழுவ வேண்டும்.. இந்த முறையும் முடி வளர்ச்சிக்கு நன்கு வேலை செய்யும்.


 தலையை ஒரு சூடான எண்ணெய்யால் மசாஜ் செய்வதால் மயிர்க்கால்கள் தூண்டபடுகிறது. இது உச்சந்தலையில், இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது இதனால் முடி வளர்ச்சி கூடும்.


 தினமும் இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் உங்கள் தலை முடியை மேலும் கீழும் கவிழ்த்து புரட்டுவதால் முடி வேகமாக வளரும். இது மிகவும் பிரபலமான யுக்திகளில் ஒன்றாகும்.



   
      

  Dr.R.S,Purusotham.
Cell – 9842425780.